உங்கள் போனில் பிரபல தமிழ் எழுத்தாளர்களின் தொடர்கதைகள், நாவல்களை இலவசமாக தரும் ஆப்!
கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு விவாதிக்கவும் செய்யலாம்.
தமிழில் முதன்முறையாக தொடர்கதைகளுக்காக ஆப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கதை வாசிப்பது என்பது பேரானந்தம். அதுவும் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை இலவசமாக, உங்கள் மொபைலில் வாசிக்கலாம் என்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்..?
சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பகமான ‘நோஷன் பிரஸ்’ BYNGE என்ற தனது ஆப்-பை மூலம் இந்திய மொழிகளில் கதைகள், நாவல்களை படிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தமிழ் மொழி கதைகளுக்காக BYNGE தமிழ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
BYNGE தமிழ் என்ற இந்த ஆப்’பில் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளை, சிறிய அத்தியாயங்களாக இங்கே படிக்கலாம்.
சாரு நிவேதிதா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், பவா செல்லத்துரை, பா.ராகவன், காஞ்சனா ஜெயதிலகர் போன்ற பல பிரபல எழுத்தாளர்களின் கதைகள்; கல்கி, நா.பார்த்தசாரதி, லா.ச.ராமாமிர்தம், சாவி, ராஜம் கிருஷ்ணன் கி.வா.ஜகந்நாதன், வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம் போன்றவர்களின் காலங்கள் தாண்டியும் பேசப்படும் சரித்திர நாவல்கள், மற்றும் சமூகம் மற்றும் காதல் கதைகளையும் BYNGE தமிழ் செயலியின் இப்போது இலவசமாக நீங்கள் படிக்கலாம், என நோஷன் பிரஸ் அறிவித்துள்ளது.
இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும், இளம் எழுத்தாளர்களும், புதுமுகங்களும் BYNGE செயலியில் இணையப் போகிறார்கள், என கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு விவாதிக்கவும் செய்ய வழி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த்ரில்லர், காதல், அமானுஷ்யம், சரித்திரம், குடும்பம் என ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கதைகளை நீங்கள் படிக்கலாம். புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்கள் வாங்க முடியவில்லை என்று இனி நீங்கள் வருந்த வேண்டாம். BYNGE உங்களுக்கு புக் ஃ பேர் அனுபவத்தை நிச்சயம் தரும், எனச் சொல்கிறது.
BYNGE செயலியில் க்ரைம் தொடர் எழுதும் பிரபல எழுத்தாளர் 'ராஜேஷ் குமார்' இச்செயலி பற்றி கூறும்போது
''வாசகர்கள் எளிமையாய் இனிமையாய் இணையும் வகையில் Bynge app ன் தொழில் நுட்பம் என்னை மிகவும் ஈர்த்து விட்டது,'' என்றார்.
பல தரப்பு வாசகர்கள் வாசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரானான சாரு நிவேதிதா,
''இந்தச் செயலியில் தொடர் படிப்பது ஒரு புத்தகக் கடைக்குள் செல்வதற்கும் ஒரு பெரிய புத்தக விழாவுக்கே செல்வதற்குமான வித்தியாசத்தைத் தருகிறது. ஒரு எழுத்தாளரின் படைப்பைத் தேடிப்போய் படிப்பதை விட எல்லா எழுத்தாளர்களின் படைப்பும் ஒரே இடத்தில் இருந்தால் உங்களுக்கான சாய்ஸ் அதிகமாகிறது,'' என்றார்.
“ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். இன்றைய இலக்கியங்கள் நாளையத் திரைப்படங்களாகவோ வெப் சீரியல்களாகவோ மாறும் என்று நம்புகிறோம்,” என்கிறார் நோஷன் பிரஸ்-ன் இணை இயக்குனர் மற்றும் BYNGE செயலியின் நிர்வாக இயக்குனரான நவீன் வல்சகுமார்
ஐந்தே நிமிடத்தில் படிக்க, மனம் மகிழ, உள்ளம் கரைய BYNGE App டவுன்லோடு பண்ணுங்க BYNGE பண்ணுங்க!