இந்தியாவைக் கலக்கும் 7 பெண் விஞ்ஞானிகள்!
இந்தியாவில் மற்ற எல்லாத்துறைகளையும் போல அறிவியல் துறையும் ஆணாதிக்கம் நிறைந்ததே. இந்திய விஞ்ஞானிகளை பற்றி கேள்வி எழுந்தால், பெரும்பாலனவர்களுக்கு தெரிந்தது அப்துல் கலாமும், ஸ்ரீனிவாச ராமானுஜரும் தான். இந்திய பெண் விஞ்ஞானிகளின் பெயரை சொல்வோர் அரிதிலும் அரிதானவர்கள்.
இந்தியாவில் பெண் விஞ்ஞானிகளே இல்லை என்ற தோற்றத்தையே இது ஏற்படுத்தும். ஆனால் அது உணமை அல்ல. இந்தியாவில் கடந்த பல வருடங்களாக ஏராளமான பெண்கள் அறிவியல் துறையில் தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் மற்றவர்கள் பின்பற்றக் கூடிய பாதையையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

அறிவியல் துறையில் சிறந்த ஆளுமைகளாக திகழம் ஏழு பெண் விஞ்ஞானிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்:
மங்களா நார்லிகர்
இவர் ஒரு இந்திய கணித மேதை. மும்மை மற்றும் புனே பல்கலைக்கழகங்களில் கணிதவியல் துறையில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருப்பவர். இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய கணிதவியல் ஆராய்ச்சியாளர்களில் மங்களாவும் ஒருவர். திருமணத்துக்கு பிறகு 16 வருடங்கள் கழித்து தனது பி.ஹெச்டி ஆராய்ச்சியை முடித்தவர்.

டாடா நிறுவனத்தின் அடிப்படை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியபோது, கணிதம் தொடர்பாக ஏராளமான புத்தகங்களை ஆங்கிலத்திலும் மராத்தியிலும் எழுதியவர் மங்களா நார்லிகர். மராத்தி புத்தகம் ஒன்றிற்காக விஷ்வநாத் பார்வதி கோகுலே விருதை வென்றவர். ஒரு ஆசிரியராக தனது மாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் கற்பிப்பதற்கு பெயர் பெற்றவர்.
அதிதி பண்ட்
அதிதி பண்ட் ஒரு கடலியல் ஆராச்சியாளர். 1983ம் ஆண்டு அண்டார்டிகாவிற்கு சென்று, புவியியல் மற்றும் கடலியல் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட முதல் பெண். அலிஸ்டர் ஹார்ட்லியின் 'The open sea' புத்தகத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு, அமெரிக்காவின் ஹூவாய் பல்கலைக்கழகத்தின் அந்நாட்டி அரசின் நிதியுதவியுடன் கடல்சார் அறிவியல் துறையில் எம்.எஸ். பட்டம் பயின்றவர்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்பீல்ட் கல்தூரியில் பி.ஹெச்டி. முடித்த அவர், இந்தியா திரும்பி கோவாவில் உள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு கடலியல் தொடர்பாக பாடம் நடத்திய அவர், மேற்கு கடற்கரை முழுவதும் பயணித்தவர்.
இந்திரா ஹிந்துஜா

மும்மையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரான இந்திரா ஹிந்துஜா, இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையை பெற்றெடுக்க வைத்த மருத்துவர். GIFT எனப்படும் இன்ட்ரா ஃபலோபியன் டிரான்பர் டெக்னிக்கில் முன்னோடியாக திகழ்பவர் இந்திரா இந்துஜா. இந்த அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் முதல் குழந்தையை பெற்றெடுக்க வைத்தவரும் இவரே. இதுமட்டுமின்றி கர்ப்பப்பை செயல் இழந்தவர்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சினை உடைய பெண்களுக்கான கருமுட்டை தானத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுதியவரும் இந்திரா ஹிந்துஜா தான்.
பரம்ஜித் குரானா
ஆலை உயிரி தொழில்நுட்பம், ஜீனோமிக்ஸ் மற்றும் மாலிக்குலார் எனப்படும் மூலக்கூறு உயிரியல் துறை விஞ்ஞானியாக திகழ்பவர் பரம்ஜித் குரானா. டெல்லி பல்கலைக்கழகத்தில், உயிரியல் துறையில் பேராசிரியராக உள்ள பரம்ஜித் குரானா, 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். 2011ம் ஆண்டு உலக மகளிர் தினத்தையொட்டி கந்தவய சன்ஸ்தன் தன்னார்வ தொண்டு நிறுவனம் இவருக்கு கவுரவப்பட்டம் வழங்கியது. மேலும் பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
சுனித்ரா குப்தா

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் கோட்பாட்டு நோய்க்குறியியல் துறை பேராசிரியராகவும், நாவலாசிரியராகவும் இருப்பவர் சுனித்ரா குப்தா. ப்ளூ, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் கிருமிகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர். இவரது அறிவியல் பங்களிப்பிற்காக, லண்டன் விலங்கியல் கழகம் சிறந்த அறிவியலாளர் பதக்கத்தை வழங்கி இருக்கிறது. மேலும், ரோசாலிந்த் பிராங்கிளின் சோசைட்டியின் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.
நந்தினி ஹரிநாத்
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் ராக்கெட் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் நந்தினி ஹரிநாத், கடந்த 20 ஆண்டுகளில் 14 ராக்கெட் பயண திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார். மங்கள்யான் செய்ற்கைக்கோள் திட்டத்தில் துணை செயல் இயக்குனராக பணியாற்றியவர் நந்தினி ஹரிநாத். ஸ்டார் டிரக் எனப்படும் கல்ட் டெலிவிஷன் திட்டமே தனது முதல் அறிவியல் வெளிபாடு என்கிறார் இவர்.
ரோகினி காட்போலே

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரோகினி காட்போலே. துகள் பெனோமெனாலஜியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இவர், துகள் இயற்பியலில் அதீக ஆர்வம் கொண்டவர். இந்தியாவின் மூன்று முக்கிய அறிவியல் கல்வி நிறுவனங்கள், மற்றும் வளர்ந்து வரும் உலக அறிவியல் மையங்களில் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளவர் ரோகினி.