தமிழ்நாட்டில் 20 டார்க் ஸ்டோர்கள் மூலம் இருப்பை வலுவாக்கும் Zepto!
தமிழ்நாட்டில் தற்போது, டார்க் ஸ்டோர் என குறிப்பிடப்படும் மறைந்திருக்கும் கடைகள் 20 செயல்பட்டு வருகின்றன. கோவை, திருச்சி, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தற்போது செயல்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குவிக் காமர்ஸ் நிறுவனம் ஜெப்டோ, தமிழ்நாட்டில் சென்னையை கடந்து தனது இருப்பை வலுவாக்கிக் கொண்டுள்ளது. கோவை, திருச்சி, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தற்போது செயல்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், நூற்றுக்கும் மேலான விவசாயிகள், இளநீர் மற்றும் பச்சை காய்கறிகளை பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஜெப்டோ பயனாளிகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தற்போது, டார்க் ஸ்டோர் (Dark Store) என குறிப்பிடப்படும் மறைந்திருக்கும் கடைகள் 20 செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் ஒவ்வொன்றும், 2 முதல் 3 கிமீ சுற்றளவில் டெலிவரியை எளிதாக்கும் வகையில் ஏற்ற இடத்தில் அமைந்துள்ளன.
இந்த கடைகள், 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் ஜெப்டோவின் வாக்குறுதியை நிறைவேற்ற உதவும் அதே நேரத்தில், பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க வேகத்தில் டெலிவரி பார்ட்னர்கள் செல்லவும் உதவுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
"வலுவான நகர் பகுதிகள் மற்றும் வசதியான சேவைக்கான தேவை கொண்டுள்ள தமிழ்நாடு, ஜெப்டோவுக்கு முக்கிய சந்தையாக விளங்குகிறது. எங்கள் சேவையை விரிவாக்குவது விற்பனையாளர்கள் வேகமாக சேவை அளிக்க உதவுவதோடு, உள்ளூர் வணிகங்களுக்கு புதிய வாய்ப்பாகவும் அமைவதாக," ஜெப்டோ முதன்மை வளர்ச்சி அதிகாரி, திவேஷ் சஹானி கூறியுள்ளார்.
"சமூகத்துடனான தொடர்பை ஆழமாக்கிக் கொள்ளும் அதே நேரத்தில் வேகம், தரம், வாங்கும் தன்மையை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, முக்கிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இந்திய போக்குவரத்து கழகம், கோவையில் ஜெப்டோவின் குவிக் காமர்ஸ் சேவை வீச்சை அதிகமாக்க, டிவிஎஸ் தொழில் மற்றும் லாஜிஸ்டிகஸ் பூங்காவில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பை குத்தகை எடுத்துள்ளது.
இந்திய போக்குவரத்து கழகம் மற்றும் ஜெப்டோவின் செயல்முறை தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த குத்தகை வசதி அமைகிறது.
செய்தி: பிடிஐ

Edited by Induja Raghunathan