'ஐடி துறையின் 30 ஆண்டு கால வர்த்தக மாதிரியை ஏஐ முடிவுக்கு கொண்டு வரும்' - HCL சிஇஒ கருத்து!
ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வருகையால், முப்பது ஆண்டுகளுக்கும் மேலான பழைய வர்த்தக முறையின் காலம் முடிவுக்கு வர இருப்பதாக, எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைமை அதிகாரி, சி.விஜயகுமார் கூறியுள்ளார்.
ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வருகையால், முப்பது ஆண்டுகளுக்கும் மேலான பழைய வர்த்தக முறையின் காலம் முடிவுக்கு வர இருப்பதாக எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைமை அதிகாரி, சி.விஜயகுமார் கூறியுள்ளார்.

நாஸ்காம் அமைப்பின் ஆண்டு என்.டி.எல்.எப் நிகழ்ச்சியில் பேசிய விஜயகுமார், ஏஐ நுட்பத்தின் பரவலான தாக்கத்தை கருத்தில் கொள்ளும் போது அவநம்பிக்கையால் பீதி அடையும் மனநிலை நிறுவனங்களுக்கு தேவை என்றும், இந்த மனநிலை வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார்.
"வர்த்தக மாதிரி மாற்றத்திற்கு உள்ளாக இருப்பதாக உறுதியாக நம்புகிறேன். கடந்த 30 ஆண்டுகளில் நாம் பார்த்தது, வருவாய் மற்றும், மக்களின் நேர்கோட்டிலான வளர்ச்சி ஆகும். இந்த வர்த்தக மாதிரிக்கான காலம் முடிந்து விட்டதாக நினைக்கிறேன்,” என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, எச்.சி.எல், தனது ஊழியர்களை பாதி பணியாளர்கள் அளவில் இரு மடங்கு வேலை செய்யுமாறு கூறி வருவதாகவும் தெரிவித்தார். ஏஐ சார்ந்த தானியங்கிமயம் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
"ஏஐ ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அளவு குறித்து நீங்கள் பீதி அடைய வேண்டும். அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டால் நீண்ட கால நோக்கில் எல்லோரும் வெற்றி பெறலாம்,” என்றார்.
போட்டி நிறுவனம் இன்போசிஸ் சி.இ.ஓ. சலில் பரேக்கும், இந்த எண்ணத்தை எதிரொலித்து, தொடர்ந்து பொருத்தமாக திகழ தொழில்துறை அவநம்பிக்கை கொள்ள வேண்டும், என்றார்.
"துறையின் பெரும்பாலான நிறுவனங்கள் உள்ளீடு சார்ந்த மாதிரியை பின்பற்றுகின்றன. நாம் வெளியீட்டிற்கு வேகமாக மாற வேண்டும். நாம் வழங்கும் பல சேவைகள், மக்கள் சார்ந்தது என்பதில் இருந்து மேடைகள் சார்ந்ததாக மாற வேண்டும்,” என்று விஜய்குமார் தெரிவித்தார்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சொந்த மொழி மாதிரிகளை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, இன்போசிஸ் செயல்திறனை மேம்படுத்த பெரிய அளவிலான கையகப்படுத்தலை மேற்கொள்ள இருப்பதாக கூறினார். எச்.சி.எல் நிறுவனத்திற்கு அளவு முக்கியம் அல்ல என்று விஜய்குமார் தெரிவித்தார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan