2021: இன்ஸ்டாகிராமில் ட்ரென்ட் ஆன ’டாப் 10 ஹேஷ்டேக்குகள்’
அப்படி இந்தியர்கள் எதைத்தான் அதிகம் தங்களது தளத்தில் பகிர்ந்து கொண்டார்கள் என்பதை, இந்திய அளவில் அதிகம் ட்ரெண்டான டாப் 10 ஹேண்டேக்குகளை பட்டியலிட்டிருக்கிறது இன்ஸ்டாகிராம். அவை என்ன என்பதைப் பார்த்துவிடலாமா...
இன்றைய சோசியல் மீடியா தலைமுறை ட்விட்டரை அடுத்து அதிகம் பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ட்விட்டரில் பயனாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு, விதவிதமாக ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்யும் தளமாக திகழ்கிறது.
ஆனால், இன்ஸ்டாகிராம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் போட்டோ, வீடியோ என பயனர்கள் தங்களது தனித்திறனையும், உணர்வுகளையும் வெளிக்காட்டும் தளமாக உள்ளது.
அப்படி இந்தியர்கள் எதைத்தான் அதிகம் தங்களது தளத்தில் பகிர்ந்து கொண்டார்கள் என்பதை, இந்திய அளவில் அதிகம் ட்ரெண்டான டாப் 10 ஹேண்டேக்குகளை பட்டியலிட்டிருக்கிறது இன்ஸ்டாகிராம். அவை என்ன என்பதைப் பார்த்துவிடலாமா...
#Reels (ரீல்ஸ்):
இன்ஸ்டாகிராம் வாசிகளுக்கு இந்த ஹேஷ்டேக் பற்றி அறிமுகம் தேவைப்படாது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்படுவதாகக்கூறி, டிக் டாக் உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தரத் தடை விதித்துள்ளது. இதனால், டிக்-டாக்கில் பிரபலங்களாக வலம் வந்த லட்சக்கணக்கான பயனாளர்கள் மனமுடைந்து போயினர். டிக்-டாக் தடையைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தனக்கான பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரீல்ஸ் (REELS) வசதியை கொண்டு வந்தது.
டிக்-டாக்கைப் போலவே இதிலும் யார் வேண்டுமானாலும் பிரபல படங்களின் வசனங்கள், பாடல்களுக்கு அல்லது தங்களது கன்டெண்டிற்கு வீடியோக்களை உருவாக்கலாம்.
முதலில் 15 விநாடிகளுக்கு மிஞ்சாமல், வீடியோக்களைப் பதிவு செய்து, எடிட் செய்து, ஏற்கெனவே இருக்கும் ஒலியுடனோ, புதிய ஒலியுடனோ சேர்த்துப் பகிரும் ரீல்ஸ் வசதியை சோதனை ஓட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பில்டர், பேக்ரவுண்ட் சேஞ்ச் போன்ற பல சிறப்பம்சங்கள் புதுப்பிக்கப்பட்டு, 60 நொடி வீடியோவை பகிரும் அளவிற்கு இன்ஸ்டாகிராமின் #ரீல்ஸ் பயனர்கள் இடையே அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.
2. #Smallbusiness (சிறு தொழில்):
குறுகிய காலத்திலேயே இந்தியாவில் இன்ஸ்டாகிராம் 100 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களுடன் அசுர வளர்ச்சி அடைய மற்றொரு காரணம் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியா தளங்கள் சாதிக்க முடியாத மார்க்கெட்டிங் இடமாக மாறியது தான்.
சிறிய அளவில் Home Made சருமப் பராமரிப்பு சாதனங்கள், அலங்காரப் பொருட்கள், ஆடை, அணிகலன்கள் உள்ளிட்ட பலவற்றை தயார் செய்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளுக்கு இன்ஸ்டாகிராம் பல மடங்கு வெற்றியைக் கொடுத்தது.
பல ஆயிரங்களை செலவு செய்து விளம்பரம் செய்தாலும் கிடைக்காத விற்பனை வாய்ப்புகள், அழகான போட்டோஸ் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிடும் போது வாய்ப்புகள் பல மடங்காக அதிகரித்தது. இங்கு சிறு வியாபாரிகளின் பொருட்களைக் கூட டிவி ஆங்கர்கள், சீரியல் பிரபலங்கள், பிக்பாஸ் போன்ற பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இலவசமாகவோ அல்லது குறைந்த தொகைக்கோ விளம்பரப்படுத்திக் கொடுத்தது கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது. அதனைத் தொடர்ந்து #Smallbusiness என்ற ஹேஷ்டேக்கும் இன்ஸ்டாவில் 83.3 மில்லியன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3. #BTS:
பிடிஎஸ் (#BTS) அல்லது பாங்டன் ஸொனென்தன் என்பது ஜின், ஆர்.எம்., ஜுங்கூக், ஜே-ஹோப், சுகா, வி மற்றும் ஜிமின் போன்ற ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய நாட்டு ஆண்கள் இசைக்குழு ஆகும். பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இசைக்குழுவின் பாடல்கள் உலகம் முழுவதும் செம்ம பிரபலம்.
4. #ANIME (அனிமே):
அனிமே (Anime) என்பது ஜப்பானில் உருவாகும் இயங்குபடங்கள் ஆகும். அனிமேஷன் டெக்னாலஜியிலேயே இன்னும் அதிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கார்டூன் கதாபாத்திரங்களை ஜப்பான் திரையில் காண முடியும். இவை உலகம் முழுவதும் ஆங்கிலத்திலும் வெளியாகி வருகின்றன.
5. #Squidgame (ஸ்விக்ட் கேம்):
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களால் கண்டு ரசிக்கப்பட்ட வெப்தொடர் ’ஸ்விக்ட் கேம்’. உலக அளவில் பிரபலமடைந்த மணி ஹீஸ்ட், லூபின் போன்ற ஆங்கிலம் அல்லாத வேறு மொழி தொடர்களைப் போலவே, கொரியன் வெப் சீரிஸான 'Squidgame' நெட்ஃப்ளிக்ஸில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மில்லியன் டாலர்களில் புரளும் பணக்காரர்களுக்கும்- கடனுடன் போராடும் சாமானிய மக்களுக்கும் இடையே உள்ள வாழ்க்கை போராட்டம் பற்றியது என்பதால், இந்த வெப் சீரிஸ் சோசியல் மீடியாவில் பல விவாதங்களுக்கு வழிவகுத்தது. அதனால் தான் இன்ஸ்டாராமிலும் #Squidgame அதிகமாக ட்ரெண்டானது.
6. #Genshinimpact (ஜென்ஷின் இம்பாக்ட்):
உலகம் முழுவதும் உள்ள வீடியோ கேம் ரசிகர்களை கவர்ந்திழுத்த கேம் Genshinimpact. பிஎஸ்5 அல்லது பிஎச்4 மூலம் விளையாடக்கூடிய இந்த கேமிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இது Microsoft Windows, PlayStation 4, Android மற்றும் iOS க்காக செப்டம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது. கற்பனையான 7 உலகங்கள் அதன் தலைவர்கள் என பிரம்மாண்டத்தை கண் முன் காட்டும் இந்த கேம் தொடர்பான லெவல்களை இன்ஸ்டாகிராம் வாசிகள் அதிகம் பகிர்ந்து வந்ததால் #Genshinimpact ஹேஷ்டேக் 6வது இடம் பிடித்துள்ளது.
7.#BLACKPINK (பிளாக் பிங்க்):
பிளாக் பிங்க் என்பது தென் கொரியாவைச் சேர்ந்த ராப் இசை பெண்கள் குழு ஆகும். ஜிசூ, ஜென்னி, ரோஸ் மற்றும் லிசா ஆகியோர் இணைந்து ஆகஸ்ட் 2016 வெளியான "Whistle" and "Boombayah" ஆகிய ஆல்பங்கள் தென் கொரியாவில் சூப்பர் டூப்பர்ஹிட்டடித்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் இந்த இசைக்குழு பிரபலமடைந்தது.
8.#pridemonth (பெருமை மாதம்):
The Pride Month என்ற தீம் சோசியல் மீடியாக்களில் எல்ஜிபிடி (LGBT) என்று திருநங்கைகள், திருநம்பிகள், தன் பாலின ஈர்ப்பாளர்கள், பாலின ஈர்ப்பு இல்லாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் தங்களது ஆதாரவை தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் LGBT அமைப்புகளால் நடத்தப்படும் ஒன்றுகூடல்கள் மற்றும் அணிவகுப்புகளுக்கு வாய்ப்பில்லாமல் போனது. LGBTQIA+ சமூகம் இப்படியான சூழ்நிலையில் தனது மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகள் தொடர்பான பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த சமயத்தில் இன்ஸ்டாகிராம் அவர்களை சப்போர்ட் செய்யும் விதமாக ரெயின்போ தீமை அடிப்படையாகக் கொண்டு பல பிரத்யேக சேவைகளை வழங்கியது. Rainbow hashtags, Rainbow stories rings, Pride Stickers போன்றவற்றை வழங்கியது. மேலும், இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர்களை பாதுகாக்கவும், தற்போதைய சமூக ஊடக தளத்தில் எவ்வாறு எதிர்மறை மற்றும் சவால்களை கையாள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கியது.
9. #FreeBritney:
உலகப்புகழ் பெற்றவர் ‘பாப்’ பாடகி, பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் விவாகரத்து செய்த பின்னர், 2008-ம் ஆண்டு முதல் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வருகிறார். இதில் இருந்து வெளியேறி தற்போது தான் காதலித்து வரும் ஈரானில் பிறந்த சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.
இதற்காக தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி கேட்டு லாஸ் எஞ்சல்ஸ் கோர்ட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கு தொடுத்துள்ளார். பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் #FreeBritney என்ற ஹேஷ்டேக்கை இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் செய்தனர்.
#NFT (என்.எஃப்.டி):
பிட்காயினின் மற்றொரு உருவம் போன்ற ‘என்.எஃப்.டி’ ஆங்கிலத்தில் 'நான் ஃபஞ்பில் டோக்கன்ஸ்' என அழைக்கிறார்கள். அதாவது, 'மாற்றப்பட முடியாத டோக்கன்' என்று பொருள். தனித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் டோக்கன் என்றும் புரிந்து கொள்ளலாம். பிட்காயின் என்பது டிஜிட்டல் குறியீடாக இருக்கிறதோ அதுபோலவே, டிஜிட்டல் சொத்துக்களுக்கான சான்றிதழ்களையும் டிஜிட்டல் டோக்கனாக உருவாக்கலாம். அதைத்தான் என்.எப்.டி என்கின்றனர்.
கிரிப்டோ கரன்சிகள், பிட்காயின்களைப் போல இதை பரிவர்த்தனைக்காக மாற்ற இயலாது. இது ஒரு டிஜிட்டல் சான்றிதழ் போன்றது. பிட்காயின் என்பது டிஜிட்டல் குறியீடாக இருக்கிறதோ அதுபோலவே, டிஜிட்டல் சொத்துக்களுக்கான சான்றிதழ்களையும் டிஜிட்டல் டோக்கனாக உருவாக்கலாம். அதைத்தான் என்.எப்.டி என அழைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் பிரபலமான இது தொடர்பாகவும் இன்ஸ்டாகிராமில் அதிக பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.