Stock News: ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ் 500 புள்ளிகளும், நிஃப்டி 150 புள்ளிகளும் உயர்வு!
இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (27/03/2024)
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையானது இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 560.18 புள்ளிகள் உயர்ந்து 73,038 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 171.50 புள்ளிகள் உயர்ந்து 22,175 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள் என்ன?
கச்சா எண்ணெய் விலை குறைவால் உள்நாட்டு சந்தையில் எரிசக்தி பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. மற்றொருபுறம் ஐ.டி. பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரித்ததும் இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி
என்டிபிசி
டாடா மோட்டார்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
லார்சன் & டூப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
இன்ஃபோசிஸ்
விப்ரோ
இண்டஸ்இண்ட் பேங்க்
நெஸ்லே
இந்திய ரூபாயின் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து 83.31 ஆக உள்ளது.