Stock News: ஆசிய பங்குச்சந்தைகளின் தாக்கம்; இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு!
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (26/03/2024)
இன்று உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை தற்போது கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 263.16 புள்ளிகள் சரிந்து 72,575 புள்ளிகளுடனும், நிஃப்டி 20.65 புள்ளிகள் உயர்ந்து 22,044 புள்ளிகளுடனும் வர்த்தகமானது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 121.33 புள்ளிகள் சரிந்து 72,503 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 53.65 புள்ளிகள் சரிந்து 22,043 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணங்கள் என்ன?
ஆசிய பங்குச்சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியுள்ளது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ட்வின்ஸ்
எல்&டி
டாடா மோட்டார்ஸ்
என்டிபிசி
இறக்கம் கண்ட பங்குகள்:
ஐச்சர் மோட்டார்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
விப்ரோ
டிவிஸ் லேப்
அல்ட்ராடெக் சிமெண்ட்
இந்திய ரூபாயின் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் அதிகரித்து 83.32 ஆக உள்ளது.