7 வார ஓய்வு: உங்கள் தொழிலுக்கு வேகம் கூட்ட உதவும் ஓய்வின் வல்லமை!
அன்றாட பொறுப்புகளில் இருந்து விலகி சற்றே ஓய்வு எடுத்தல் என்பது நிறுவனத் தலைவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த வழிவகுக்கும் என்பது தெளிவு.
தொழில் போட்டிகள் நிறைந்த சூழலில் நீண்ட ஓய்வு எடுப்பது என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்ச உணர்வை உருவாக்கலாம். ஆனால், 2024-ல் நிறைய தொழிலதிபர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது. 7 வாரங்கள் ஓய்வு எடுத்தல் என்பது அதன் பிறகு, தொழிலில் எதிர்பாராத வளர்ச்சியை உறுதி செய்யும் உத்வேகத்தை தருகிறது எனக் கூறுகின்றனர். அத்தகைய தொழிலதிபர்களின் அனுபவப் பகிர்வுகளை உள்ளடக்கியுள்ளதே இந்தக் கட்டுரை.
ஓய்வின் சக்தி: பணியில் உற்பத்தித் திறன், புத்தாக்கத் திறன் ஆகியனவற்றை எல்லாம் மேம்படுத்த ஓய்வு அவசியம் என்பது ஏதோ இப்போது உருவான புதிய கருத்து அல்ல. காலங்காலமாக வலியுறுத்தப்படுவது.
Rest: Why You Get More Done When You Work Less என்ற நூலின் ஆசிரியர் அலெக்ஸ் சூஜங் கிம், ‘ஓய்வு என்பது பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை அதிகரிப்பதுடன் புதிய சிந்தனைகளை உருவாக்குகிறது. ஓய்வு நம்மை மீட்டெடுப்பதோடு, எப்படி புத்திசாலித்தனமாக வேலைகளை திறம்படச் செய்வது என்பதற்கும் வழிவகுக்கும். இது ஒருவகையில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் பணிச்சூழல் கலாச்சாரத்துக்கு சவால்தான்.
பழைய பணிக் கலாச்சாரம் எப்போதும் பரபரப்பாக இருப்பதையே வலியுறுத்துகிறது. அர்த்தமுள்ள ஓய்வைவிட ஓயாத உழைப்பையே முக்கியமாகக் கருதுகிறது,’ என்கிறார்.
7 வார கால ஓய்வின் முக்கிய நன்மைகள்:
புத்தாக்க சிந்தனைகள் மேம்படும்: அன்றாட பொறுப்புகளில் இருந்து சற்றே விலகி ஓய்வு எடுத்தல் என்பது தொழிலதிபர்களுக்கு அவர்களின் தொழில் சார்ந்த புதிய கோணங்களை பெறச் செய்யும். வியாபார உத்திகள், உற்பத்தி பொருட்கள் மேம்பாடு என எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நல்கும்.
உதாரணத்துக்கு, டெக் இனோவேட் (TechInnovate) நிறுவன சிஇஓ ஜேன் தாம்ப்சன் தனது ஓய்வு காலத்தில் தான் புறந்தள்ளிய வாடிக்கையாளர்களின் கருத்துகளைக் கொண்டு ஒரு சிறப்பான ப்ராடக்ட்டை அறிமுகம் செய்தார்.
ஹார்வர்டு தொழில் ஆய்வுக் கட்டுரை ஒன்று, நீண்ட விடுப்புகள் எடுத்துக் கொண்ட சிஇஓக்கள் மீண்டும் பணிக்கு வருகையில் அதிகப்படியான புத்தாக்க சிந்தனைகளுடன் வருவதாகத் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் பங்கேற்ற சந்தைப்படுத்துதல் துறை இயக்குநர் ஒருவர், “இந்த ஓய்வானது தொடர்பில்லாமல் கிடந்த யோசனைகளை ஒருங்கிணைத்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஒரு சிறந்த பிரச்சாரத்தை உருவாக்க உதவியது” என்று கூறியுள்ளார்.
முடிவுகள் எடுப்பதில் மேம்பாடு: 7 வார ஓய்வு என்பது உடனடி அழுத்தங்களில் இருந்து விடுதலை தரும். அவர்களால் கவனத்தை குவித்து முக்கிய முடிவுகளை வகுக்கும் உத்திகளை யோசிக்க முடிகிறது.
உதாரணத்துக்கு மார்க் ஸ்டீவன்ஸ் என்ற நபர் பிரபல ரீட்டெய்ல் செயின் வர்த்தக நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக உள்ளார். அவர், தனது ஓய்வுப் பலன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர்,
“ஓய்வால் என்னால் நீண்டகால பலனைக் கருத்தில் கொண்டு தற்காலிக வெற்றிகளைப் பற்றியதல்லாமல் நிலையான வளர்ச்சியை குறிவைத்து முடிவுகளை எடுக்க முடிந்தது,” என்று கூறியுள்ளார்.
பணி - வாழ்க்கை சமநிலை: ஒரு நீண்ட ஓய்வு என்பது பணி - வாழ்க்கை சமநிலையைக் கையாள உதவுகிறது. இத்தகைய ஓய்வைப் பெற்ற தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களால் அவர்களது மன நலனைப் பேண முடிவதோடு மீட்டெடுக்கப்பட்ட உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் பொறுப்புக்கு திரும்ப முடிகிறது. அதுவே அவர்களது தலைமைப் பண்பை மெருகேற்றி வேலையில் பளிச்சிட செய்கிறது.
ஒரு சிறுதொழில் முனைவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “எனது கடுமையான பணிச் சுமை எனது குழுவினரையும் பாதிப்பதை நான் உணர்ந்து கொண்டேன். அந்த விடுமுறை என்னை உத்வேகப்படுத்த உதவியது. இப்போது என்னால் நேர்மறை சிந்தனையுடன் எதையும் அனுகமுடிகிறது. அதனால் பணிச் சூழல் மேம்பட்டுள்ளது. இந்த பணி - வாழ்க்கை சமநிலையை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பெறும்போது அது பணியாளர்களின் மீது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்றார்.
ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் சிஇஓவின் பணி - வாழ்க்கை சமநிலை ஊழியர்களையும் ஊக்குவித்து அனைவரையும் பணி மீது திருப்தி கொள்ளச் செய்தது.
அணியின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல்
நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒரு நீண்ட விடுப்பில் செல்லும்போது அந்த அணியின் அடுத்தடுத்த நிலையில் உள்ள பணியாளர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்று செயல்படும்போது அணியில் செயல்திறன் மேம்படுத்தப்படுகிறது.
மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் ஒருவர் கூறும்போது, “ஒரு சிறிய ஓய்வு, குழுவில் இருந்த மற்ற வளரும் தலைவர்களை அடையாளம் காணச் செய்தது. இது ஒட்டுமொத்தமாக எங்கள் குழுவின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது,” என்றார்.
டெக் இன்னோவேட் நிறுவனத்தில் ஜேன் தாம்ப்சனின் ஓய்வு காலம், அலுவலக ஊழியர்கள் ஒத்திசைந்து பணியாற்றும் சூழலை உருவாக்கினர், முடிவெடுப்பதில் அதிக பங்களிப்பு செய்யும் வகையில் உருவாக்கினர்.
ஓய்வை திட்டமிடுவது எப்படி?
7 வார கால ஓய்வை நேர்த்தியாக திட்டமிடுவது மிகவும் அவசியம்.
பொறுப்புகளை கைமாற்றுதல்: நீங்கள் 7 வார ஓய்வை எடுக்கும் முன்னர் உங்கள் குழுவில் யார் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள், முக்கியப் பணிகளை மேற்கொள்ளத் தகுதியானவர்க என்பதைக் கண்டறிந்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து பணிகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யுங்கள். இது நீங்கள் இல்லாவிட்டாலும் நிறுவனம் சீராக இயங்குவதை உறுதி செய்வதோடு உங்கள் ஊழியர்களுக்கு அதிகாரமளிக்கிறது. குழப்பங்களைத் தவிர்க்க தெளிவான வழிகாட்டுதல்களைக் கொடுத்துச் செல்லுங்கள்.
உதாரணத்துக்கு ஜேன் தாம்ப்சன் ஒரு தற்காலிக சிஇஓ-வை நியமித்துச் சென்றார். பணிகளை ஒப்படைக்கும் முன்னர் பலகட்ட சுமுக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.
தெளிவான இலக்குகளை நிர்ணயிக்கவும்: நீங்கள் விடுப்பு எடுக்கும் காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்து தெளிவான இலக்குகளை வகுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உடல், உள்ள உற்சாகத்துக்கானதாக இருக்கலாம், எதிர்கால உத்திகள், புத்தாக்க சிந்தனைகள் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஓய்வின் போது மார்க் ஸ்டீவன்ஸ் நிறுவனத்துக்கான புதிய நிதிக் கொள்கையை வகுத்தார். திரும்பி வந்த பின்னர் அதனை வெற்றிகரமாக அமல்படுத்தி லாபம் கண்டார்.
ஒதுங்கியிருங்கள்: ஓய்வு எடுக்குறீர்கள் என்றால் முற்றிலுமாக வேலைகளில் இருந்து ஒதுங்கியிருங்கள். இமெயில் செக் செய்வது, ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பது என எதிலும் ஈடுபட வேண்டாம். அப்போது தான் ஓய்வின் முழுப் பலன் கிடைக்கும். தனது ஓய்வின் போது ஜேம் தாம்ப்ஸன் வாரம் ஒருமுறை அவரது இடைக்கால் சிஇஓவிடம் மட்டும் பேசிக் கொள்வதாக இருந்தார்.
ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யுங்கள்: உங்கள் ஓய்வின்போது உங்கள் தொழில் செல்லும் பாதையை அலசி ஆராயுங்கள். உங்களின் பலம், பலவீனங்களைப் பட்டியலிடுங்கள். புதிய உத்திகள் பற்றி யோசியுங்கள். தினமும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகமால் எப்படி சுமுகமாக செயல்படுவது என யோசனை செய்யுங்கள். உங்கள் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு தெளிவாகத் திட்டமிடுங்கள்.
2024-ஆம் ஆண்டில் 7 வார ஓய்வு நிறைய தொழிலதிபர்களுக்கு வெற்றிகரமான பலன்களை தந்துள்ளதாகத் தெரிகிறது. புதிய சிந்தனைகள், பணி செய்வதில் புதிய பரிமாணங்கள், மேம்படுத்தப்பட்ட வேலை - வாழ்க்கை சமநிலை எனப் பல்முனை நன்மைகளை நல்கியுள்ளது.
திட்டமிட்ட ஓய்வுகளை எடுத்துக் கொள்ளுதல் நிச்சயமாக தொழில் புதிய பாதையில் புதிய வகையில் வளர வழிவகுக்கும். நாம் ஓடிக்கொண்டே இருக்கும்போது, சில நேரங்களில் சிறிய இடைவெளி என்பதே முன்னேற சிறந்த வழியாகிறது.
இந்தக் கட்டுரையானது வேலையில் இருந்து கணிசமான ஓய்வு எடுப்பதன் குறிப்பிடத்தக்க நன்மைகளை எடுத்துக் காட்டுகிறது மற்றும் அத்தகைய இடைவெளியை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
ஓய்வின் ஆற்றல் என்பது வணிக உலகில் உற்பத்தித் திறன் மற்றும் வெற்றியை நாம் எவ்வாறு உணர்கிறோம் என்ற கண்ணோட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை தருகிறது.
உறுதுணைக் கட்டுரை: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan