இணையத்தில் வைரலான எலான் மஸ்கின் இயற்பியல் வீட்டுப்பாடம்...
டெஸ்லா நிறுவனர் எலான மஸ்கின் கல்லூரி கால இயற்பியல் நோட்டுப்புத்தகத்தின் பக்கங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த பதிவிற்கு எலான் மஸ்க் பதில் அளித்திருக்கிறார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் கல்லூரி கால இயற்பியல் நோட்டுப்புத்தகத்தின் பக்கங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த பதிவிற்கு எலான் மஸ்க் பதில் அளித்திருக்கிறார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், செல்வாக்குமிக்க தொழிலதிபர்களில் ஒருவராக விளங்குகிறார். டிவிட்டர் குறும்பதிவு சேவையையும் அவர் கையகப்படுத்தி எக்ஸ் என பெயர் மாற்றி நடத்தி வருகிறார்.
எலான் மஸ்கின் கருத்துக்களும், பதிவுகளும் இணையத்தில் வெகுவாக கவனத்தை ஈர்க்கும் நிலையில், அண்மையில் எக்ஸ் தளத்தில் டிமா ஜெனுய்க் எனும் பயனாளி, கல்லூரி காலத்தில் எலான் மஸ்க் பயன்படுத்திய இயற்பியர் நோட்டு புத்தக பக்கங்களை பகிர்ந்தார்.
பெனிசல்வேனியா பல்கலையில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் எலான் மஸ்க் பயன்படுத்திய நோட்டு என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த குறும்பதிவு வைரலான நிலையில், மற்றொரு பயனாளி, அதில் உள்ள கணிதவியல் சமன்பாடு குறிப்புகள் இனர்ஷியா தொடர்பானவை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கே இந்த குறும்பதிவுக்கு எதிர்வினையாற்றினார். அந்த வீட்டுப்பாடத்தின் கருப்பொருளை குறிப்பிட்டவர் இதில் இன்னும் இரண்டு பக்கங்கள் காணவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, எக்ஸ் பயனாளி, விடுபட்டு போன அந்த இரண்டு பக்கங்களையும் பகிர்ந்தார். எக்ஸ் தளத்தில் நீங்கள் பகிர்ந்தவை என்றும் தெரிவித்திருந்தார்.
இணைய குறும்பதிவு உரையாடல் X பயனாளிகள் மட்டும் அல்லாமல் இணையவாசிகளையும் கவர்ந்து சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியது. எலான் மஸ்க் பெரிடோரியா பல்கலை உள்ளிட்ட கல்விநிறுவனங்களில் படித்தவர் பின்னர் 1995ல் பெனிசல்வேனியா பல்கலையில் பயின்றார்.
Edited by Induja Raghunathan