Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

எலான் மஸ்க் எனும் 'One Man Army' - வாழ்க்கைக் கதை..!

ஒரு தொழில்முனைவராக மட்டுமல்லாது எலன் மஸ்க் உண்மையிலேயே 21-ம் நூற்றாண்டின் சிறந்த அறிவியல் சிந்தனையாளர்.எதிர்காலத்தில் மனிதர்களுக்கு எது பயன்படும் என்பதை அறிந்து தனது சொந்தப்பணத்தையே முதலீடாக போட்டு அரசுக்கு நிகராக தனி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கிறார்.

எலான் மஸ்க் எனும் 'One Man Army' - வாழ்க்கைக் கதை..!

Friday June 03, 2022 , 4 min Read

எண்ணூறு கோடி பேரு இருக்கக்கூடிய இந்த மனித கூட்டத்திற்கு மத்தியில் ஒரு சிலருடைய சிந்தனையும், உழைப்பையும் பார்த்து மொத்த உலகமே உற்று கவனித்த தருணங்கள் ஏராளம். அப்படி இன்றைய மனித சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ஒரு முக்கிய நபரை பற்றிதான் இந்த கட்டுரையில் பார்க்க போறோம் மக்களே! 

இவையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என கேள்வி எழுப்பும் தருணத்தில், தனது சிந்தனையின் மீது மிகப்பெரிய அளவில் முதலீடும், அதீத உழைப்பையும் கொடுத்து வெற்றி பெறச் செய்வார் அவர் தான் எலான் மஸ்க் எனும் ஒன் மேன் ஆர்மி. 

Elon Musk

Elon Musk

உலகின் டாப் பணக்காரர் ஆக திகழும் எலான் மஸ்கின் முதல் தொழில் என்று பார்த்தால் அவர் உருவாக்கிய Blaster எனும் சூட்டிங் கேமை 500 டாலருக்கு விற்றதுதான்.

அந்த உத்வேகமே இன்று SpaceX, Tesla, NeuraLink, PayPal, SolarCity, OpenAI, Zip2 Corporation, Tesla Energy போன்ற மிகப்பெரும் நிறுவனங்களாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு பின் அதிக கடின உழைப்பும், வேதனைகளும் நிரம்பி இருக்கிறது.

அப்படி இவ்வளவு சாதனைகள் புரிய அவர் சிறு வயதில் செய்த விசயங்கள் என்ன? எலான் மஸ்க் பில்லியனர் ஆனது எப்போது? கனவுகளை நோக்கி அவர் எவ்வாறு பறந்தார்? என்பதை பார்ப்போம்.

எலான் மஸ்க் ஜூன் 28, 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா பகுதியில் பிறந்தார். தந்தையின் தொடர் குடிப்பழக்கம், தாய் தந்தையர் விவகாரத்து என சிறுவயதிலேயே பல கஷ்டங்களை பார்த்திருக்கிறார்.

சிறுவயதில் அவருக்கு அதிக நண்பர்கள் இல்லாததால். இவருக்கு நண்பனாய் இருந்தது புத்தகங்களே. இதனால் சிறுவயதிலேயே அதிகம்  புத்தகங்களை படிக்கும் திறன்மிக்கவராக இருந்துள்ளார் எலான் மஸ்க். பிறகு கனடாவில் குவின்ஸ் பல்கலைகழகத்திலும், பென்சில்வேனியா பல்கலைகழகத்திலும் இளங்கலை படிப்பை முடித்தார்.

Elon

மனிதர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் கண்டுபிடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார் எலான் மஸ்க். அப்படி அவர் தேர்ந்தெடுத்த துறைகள் தான் இணையம் (Internet), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் (renewable energy sources), விண்வெளி குடியேற்றம் (space colonization).

அதனின் முதல் படியாய் 1995ல் Zip2 Corporation எனும் ஐடி நிறுவனத்தை துவங்குகிறார்.

அதிகாலையில் வேலையை துவங்கினால் மாலை வரை கடுமையாக உழைக்கும் பேர்வழி தான் எலன் மஸ்க். இருப்பினும் தொடங்கிய சில வருடங்களிலே புகழ்பெற்ற Altavista எனும் சர்ச் என்ஜின் நிறுவனம், $307 மில்லியன் கொடுத்து இவரது நிறுவனத்தை வாங்கியது.

பிறகு அதே வருடமே X.com என்னும் எலெக்ட்ரானிக் பணம் செலுத்தும் முறையிலான நிறுவனத்தை துவங்கினார்.பின்னாளில் அந்நிறுவனத்திற்கு Paypal என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சேர்மன் ஆகவும் உயர்ந்தார் எலான் மஸ்க்.

Elon Musk

2002ல் Paypal நிறுவனத்தை ebay 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. எலான் மஸ்கின் பங்காக 180 மில்லியன் டாலர் கிடைத்தது.

இதில், 100 மில்லியன் டாலரை SpaceX நிறுவனத்திலும், 70 மில்லியன் டாலரை டெஸ்லா நிறுவனத்திலும், மீதமுள்ள 10 மில்லியன் டாலரை சோலார் சிட்டி என்ற நிறுவனத்திலும் முதலீடு செய்தார்.

 

உலகை மாற்றும் கண்டுபிடிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் ஒரு போதும் தயங்கியதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 

Elon

செவ்வாயில் மனிதர்களை குடியேற்றம் செய்ய வேண்டும் என்பது அவரது முக்கியக் கனவாக இருந்தது. அதன் படி, 2002 இல் Space X என்னும் நிறுவனத்தை நிறுவினார் எலான் மஸ்க். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் முதல் தனியார் நிறுவனமாய் Space X இருந்தது.

 

2003 இல் ஆண்டு மின்சாரம் மூலமாக இயங்கக்கூடிய காரினை வடிவமைக்கும் முதல் பெருமைக்குரிய Tesla என்னும் நிறுவனத்தைத் தொடங்குகிறார். 2006 ல் சோலார் சிட்டி என்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தரக்கூடிய (renewable energy sources)  நிறுவனத்தையும் நிறுவுகிறார்.

Elon

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, சோலார் சிட்டி என மூன்று வேகமான குதிரைகளில் ஒரே சமயத்தில் பயணம் செய்தவர் எலான் மஸ்க். இதனால் மொத்தமாகக் கைவசம் இருந்த அனைத்தையும் இழக்கும் சூழல் கூட உருவானது. '

 

2008ம் ஆண்டு டெஸ்லா திவாலாகும் நிலை ஏற்பட்டது. தனது சொந்த பணத்தை முதலீடு செய்து CEO-வாக பதவியேற்றுக்கொண்டார்.

 

இதனிடையே Space X நிறுவனத்தின் ராக்கெட்கள் விண்ணிற்கு செலுத்துவதில் பல தோல்விகளைக் கண்டதால், அவர் நிறைய கடனுக்குள்ளானார். இதன் காரணமாக  அவர் மனைவி அவரை விவாகரத்து செய்தார்.  அன்றைய காலகட்டதில் நிறைய தோல்விளை சந்தித்த நபராக மஸ்க் இருந்தார்.

 

2008 ஆம் ஆண்டு எனக்கு மிகவும் மோசமான ஆண்டு என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் எலன் மஸ்க்.

Elon

இந்நிலையில், Space X ன் நான்காவது முயற்சியில் Falcon 1 வெற்றிகரமாக புவி சுற்றுவட்டபாதையை அடைந்தது. இந்த வெற்றிக்கு பிறகு NASA உடன் $1.6 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை SpaceX போடுகிறது. அதன் பின்னர், அரசின் உதவி இன்றியே வெற்றிகரமாக பல ராக்கெட் என்ஜின்களை வடிமைத்தது SpaceX.

 

அதேபோல், Tesla நிறுவனத்தின் Tesla Model S கார் நன்கு விற்பனையாகி பொருளாதார ரீதியாக பெறும் வெற்றியை பெற்றுதந்தது. இன்று பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு முக்கியக் காரணம் டெஸ்லாதான். டெஸ்லாவின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 650 பில்லியன் டாலர் ஆகும்.

 

சிலர் ஐடியாக்களை மட்டும் சொல்லுவார்கள். ஆனால் எலான் மஸ்க் ஐடியாக்களை சொல்லுவார், அதனை செயல்படுத்த மிகப்பெரிய அளவில் முதலீடும் செய்து ஐடியாவை நிறைவேற்ற உழைக்கவும் செய்வார். அதுதான் எலன் மஸ்க் என்ன சொன்னாலும் உலகம் உற்று கவனிப்பதற்கு முக்கியக் காரணம். அவரின் மற்றுமொரு சிந்தனை தான் ஹைப்பர்லூப். 
Hyperloop

போக்குவரத்துத்துறையின் அடுத்த பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் ஹைப்பர்லூப் டெக்னாலஜியை கொண்டுவந்தால் ஒரு மணி நேரத்தில் 1200 கிலோ மீட்டர் பயணிக்க முடியும்.

இதற்கான ஆராய்ச்சிகளும், திட்டங்களும் செயல்புரிந்து வருகின்றனர்.

 

அதேபோல், மூளையிலிருந்து நேரடியாகச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் கனவுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நியூராலிங்க்கும் இவர் போட்ட விதைதான். இதற்காக NeuraLink என்னும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. 

Neuralink

இவ்வாறு ஒரு தொழில்முனைவராக மட்டுமல்லாது எலான் மஸ்க் உண்மையிலேயே 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த அறிவியல் சிந்தனையாளர்.

 

அதற்கு மிக முக்கியக் காரணம், புதிய சிந்தனைகள் மட்டுமே அல்ல. எதிர்காலத்தில் மனிதர்களுக்கு எது பயன்படும் என்பதை அறிந்து தனது சொந்தப்பணத்தையே முதலீடாக போட்டு அரசுக்கு நிகராக தனி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கிறார்.

 

எலான் மஸ்க் தான் ’நிஜ அயர்ன் மேன்’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இன்றைய இளைஞர்கள் பாராட்டி பின்பற்றவேண்டிய மனிதர்களுள் ஒருவர் எலான் மஸ்க்.