Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

4000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவந்து வழங்கும் HUL!

4000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவந்து  வழங்கும் HUL!

Tuesday May 11, 2021 , 2 min Read

Hindustan Unilever Limited (HUL) இன்று 4000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் நிலவிவரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். HUL, KVN Foundation மற்றும் Portea healthcare உடன் இணைந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை தேவையான கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்ய உள்ளது.


‘Mission HO2PE’, என்று ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் தொடங்கியுள்ள இத்திட்டம், வட அமெரிக்கா Unilever உதவியுடன் இதை செயல்படுத்துகிறது. இந்தியாவில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், டெல்லி, லக்னோ, பெங்களுரு, மும்பை, உள்ளிட்ட நகரங்களுக்கு உதவிட 4000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க முடிவு செய்துள்ளது.

HUL

HUL, KVN Foundation மற்றும் Portea healthcare இணைந்து வீட்டில் ஆக்சிஜன் தேவைப்படும் கோவிட் நோயாளிகளுக்கு நேரடியாக ஆகிசிஜன் கான்சென்ட்ரோடர்கள் வழங்கப் போவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘Mission HO2PE’ ஹெல்ப்லைன் நம்பர்களை தொடர்பு கொண்டு நோயாளிகள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீட்டிலேயே பெறமுடியும் என HUL தெரிவித்துள்ளது. இவை இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

HUL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மெஹ்தா இது தொடர்பாக கூறுகையில்,

“கொரோனாவின் இரண்டாம் அலை மிகப்பெரிய பின்னடைவையும், மக்கள் மத்தியில் பெரிய பீதியையும் கிளப்பியுள்ள இச்சூழலில் எங்களைப் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் உதவிடும் பொறுப்பு உள்ளது. இதனால் யூனிலிவர் குடும்பம் இதில் இந்தியாவுடன் துணை இருந்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றத் தேவையான மெடிக்கல் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கே வழங்க முன்வந்துள்ளோம். இது மருத்துவத்துறை மீதான சுமையை சற்று குறைக்கும்,” என்றார்.
hul oxygen

Portea Medical இணை நிறுவனர் மற்றும் சிஇஒ இந்த முன்னெடுப்பு பற்றி பகிர்கையில்,

“கடந்த ஆண்டு சுமார் 4 லட்சம் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ள அனுபவத்தில், இச்சூழலில் உள்ள சவால்களை உணர்வோம். இரண்டாம் அலையில் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை உள்ளதால், HUL உடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறோம்.”

இவற்றைத் தவிர, HUL தனது ஊழியர்களுக்கான தடுப்பூசி செலவை ஏற்று அவர்களுக்கு உரிய ஆதரவை அளித்துவருகிறது. ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்கள் தவிர வெண்டிலேட்டர் மற்றும் மருத்துவச் சாதனங்களையும் ஊரக மருத்துவமனைகளுக்கு இலவசமாக அளித்துள்ளது.


கடந்த ஆண்டும் HUL, ரூ.100 கோடி மதிப்பில் கொரோனா தொற்றுக்கு உதவிட செலவழித்துள்ளது. 10ஆயிரத்துக்கும் மேலான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப்பொட்டலம், அவர்களுக்கு சுகாதார சோப்புகளை இலவசமாக வழங்கியது. கைக்கழுவுதல் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை யூனிசெப் உடன் கைக்கோர்த்து செய்தது குறிப்பிடத்தக்கது.


தொகுப்பு: இந்துஜா