Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.803 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஜோமாட்டோவுக்கு நோட்டீஸ்!

இந்த ஆர்டர் 29 அக்டோபர் 2019 முதல் மார்ச் 31, 2022 வரையிலான 28 மாத காலத்திற்கானது. அதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.9,375 கோடி ஐபிஓ மூலம் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.803 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஜோமாட்டோவுக்கு நோட்டீஸ்!

Friday December 13, 2024 , 1 min Read

உணவு விநியோகம் மற்றும் விரைவான வர்த்தக நிறுவனமான Zomato ரூ.803 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும், என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தானே கமிஷனரேட் சிஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி இணை ஆணையர் வழங்கிய உத்தரவில், ஜிஎஸ்டியில் ரூ.401 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.401 கோடி அபராதத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.803 கோடிக்கு மேல் செலுத்தப்படாத வரி பாக்கிகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆர்டர் 29 அக்டோபர் 2019 முதல் மார்ச் 31, 2022 வரையிலான 28 மாத காலத்திற்கானது. அதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.9,375 கோடி ஐபிஓ மூலம் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

zomato

ஜூலை-செப்டம்பர் காலாண்டில், Zomato-வின் உணவு விநியோகப் பிரிவு-கடந்த இரண்டு காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வளர்ச்சியைக் கண்டது, அறிக்கையில் காலாண்டில் வெறும் 21% உயர்வு மற்றும் Q1 இல் 27% உயர்வு Q4FY24-இல் 28% உயர்வு கண்டுள்ளது.

மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ, கோடக் மற்றும் எச்டிஎஃப்சி உள்ளிட்ட உள்நாட்டு பரஸ்பர நிதிகளில் இருந்து சுமார் $1 பில்லியன் அல்லது ரூ.8,500 கோடி திரட்டியது.

ஸ்விக்கி மற்றும் விரைவு வர்த்தக யூனிகார்ன் செப்டோவுடன் போட்டியிடும் Zomato மற்றும் புதிய போட்டியாளர்களின் வரத்து ஆகியவற்றினால் உணவு விநியோகம் மற்றும் ஹைப்பர்ப்யூர் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

டெல்லி-NCR-ன் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கலில் ஒரு சோதனை ஓட்டத் திட்டத்தின் கீழ் இயங்கும் Blinkit மூலம் இயக்கப்படும் 10 நிமிட உணவு விநியோக பயன்பாடான Bistro உடன் மற்றொரு விருப்பத்தைச் சேர்க்க அதன் ஹவுஸ் ஆஃப் பிராண்டுகளின் உத்தி தயாராக உள்ளது.