Gold Rate Chennai: மவுசு காட்டும் தங்கம்; இன்று நகை விலை மீண்டும் உயர்வு!
தங்கம் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ள நகை வாங்க காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ள நகை வாங்கக் காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (02/06/2023)
நேற்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அளவிற்கு குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் போது தங்கத்தின் விலை கிராமிற்கு 5,620 ரூபாயாகவும், சவரனுக்கு 44,960 ரூபாயாகவும் இருந்தது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 5,638 ரூபாயாகவும், சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 45,104 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 6,099 ரூபாயாகவும், சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 48,792 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 78 ரூபாய் 60 காசுகளுக்கும், கிலோவிற்கு 1000 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க கடன் உச்சவரம்பு ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கைகள் காரணமாக டாலர் மற்றும் கருவூல விளைச்சல் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால், விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,638 (மாற்றம்: ரூ.18 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,104 (மாற்றம்: ரூ.144 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,099 (மாற்றம்: ரூ.18 அதிகரிப்பு))
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,792 (மாற்றம்: ரூ.144 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,600 (மாற்றம்: ரூ.30 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,800 (மாற்றம்: ரூ.240 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,110 (மாற்றம்: ரூ.34 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,880 (மாற்றம்: ரூ.272 அதிகரிப்பு)