Gold Rate Chennai: தங்கம் விலையில் ‘சைலன்ட் மோடு’ - இப்போ நகை வாங்கலாமா?
கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.1000+ குறைந்த ஆபரணத் தங்கம் விலை, வாரத்தின் தொடக்க நாளான இன்று எவ்வித மாற்றமும் இன்றி சைலன்ட் மோடுக்குச் சென்றுள்ளது.
கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.1000+ குறைந்த ஆபரணத் தங்கம் விலை, வாரத்தின் தொடக்க நாளான இன்று எவ்வித மாற்றமும் இன்றி சைலன்ட் மோடுக்குச் சென்றுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 குறைந்து ரூ.7,940 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 குறைந்து ரூ.63,520 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து ரூ.8,662 ஆகவும், சவரன் விலை ரூ.176 குறைந்து ரூ.69,296 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (3.3.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,940 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.63,520 ஆகவும் மாற்றமின்றி நீடிக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,662 ஆகவும், சவரன் விலை ரூ.69,296 ஆகவும் மாற்றமின்றி தொடர்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (3.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.105 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,05,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஓரளவு மீண்டெழத் தொடங்கியுள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையும் சற்றே குறைந்து வருவதால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் வெகுவாக குறைந்தது.

எனினும், மீண்டும் பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நீடிப்பதால், தங்கத்தின் விலை குறைவு தொடர்வது சந்தேகமே. அதற்கு அச்சாரமாகவே இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, இப்போது நகை வாங்குவது சரியான தருணமே என்கின்றனர் வர்த்தகர்கள்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,940 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ..63,520 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,662 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,296 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan