Infosys பணி நீக்கம்- ஐடி சங்கம் போராட்ட எச்சரிக்கை; நிறுவன தரப்பில் விளக்கம்!
இம்மாத துவக்கத்தில் மைசூரு வளாகத்தில் நிறுவன தேர்வில் வெற்றி பெறாத 300க்கும் மேற்பட்ட பயிற்சி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் இன்போசிஸ் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளானது.
புனேவைச் சேர்ந்த ஐடி தொழிலாளர்கள் தொழிற்சங்கமான என்.ஐ.டி.இ.எஸ் (NITES), அரசு பொருத்தமான நடவடிக்கையை எடுக்காவிடின், இன்போசிஸ் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து போராட தயங்க மாட்டோம், என அறிவித்துள்ளது.
செயல்பாடு மதிப்பீடுகள் அவர்கள் முன்னேற்றத்தின் முக்கிய பகுதி என்பதை நன்கறிந்தே ஒவ்வொரு பயிற்சி ஊழியரும் நிறுவனத்தில் இணைகிறார்கள் என்றும், அனைத்து தகுதி வாய்ந்த பயிற்சி ஊழியர்களும் (98%), நீக்கத்திற்கு பிறகு அதற்கான கடிதம் மற்றும், அடுத்த கட்ட வேலைவாய்ப்பு சேவை, உரிய வேலை நீக்க ஊதியம், ஆலோசனை உள்ளிட்ட சேவைகளை பெற்றிருப்பதாகவும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,
"நீக்கப்பட்ட ஊழியர்கள் அவர்களுக்கு உரிய நியாயம் மற்றும் கன்னியத்தை பெறும் வரை துணை நிற்போம். இவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அரசை பணிவுடன் கோருகிறோம். ஆனால் அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இன்போசிஸ் வளாகத்தில் பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து பெரிய போராட்டத்தை துவக்க தயங்க மாட்டோம்,” என தேசிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் செனேட் (NITES ) தெரிவித்துள்ளது.
இந்த அநீதி உடனே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை, என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இதனிடையே, ஒவ்வொரு பயிற்சி ஊழியரும், செயல்பாடு மதிப்பீடு, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய அங்கம் என்பதை நன்றாக அறிந்தே இருக்கின்றனர் என இன்போசிஸ் இதற்கு பதில் அளித்துள்ளது.
"இன்போசிஸில் சேரும் ஒவ்வொரு பயிற்சி ஊழியரும், இன்போசிஸ் பயிற்சியை ஏற்கும் போது, பயிற்சி படிவத்தை பூர்த்தி செய்கின்றனர். இந்த செலவை நிறுவனம் ஏற்கிறது. எங்கள் சோதனை செயல்முறை மதிப்பீடு முறை ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது, இது பயிற்சி ஊழியர்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று இன்போசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த மதிப்பீடு செயல்முறையில், பல்வேறு வாய்ப்புகள் கொண்ட கேள்விகளுக்கு மூன்று நிலைகளிலும் எதிர் மதிப்பெண்கள் உண்டு,” என்றும் தெரிவித்துள்ளது.
"இது மதிப்பீடு செயல்முறையின் அங்கமாக உள்ளது. இது முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது, என கூறியுள்ள இன்போசிஸ், தனது ஊழியர்கள் தரத்தில் பெருமிதம் கொள்வதாகவும், மிகச்சிறந்த பயிற்சி திட்டத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது."
பயிற்சி மதிப்பீடு நெறிமுறைகள் மற்றும் பாடத்திட்டம் மாற்றப்பட்டன, அச்சுறுத்தும் முறைகள் பின்பற்றப்பட்டதால், 300க்கும் மேலான பயிற்சி ஊழியர்கள் நீக்கப்படும் நிலை உண்டானது எனும் குற்றச்சாட்டுக்கு, இன்போசிஸ், முதன்மை மனிதவள அதிகாரி, ஷாஜி மேத்யூ, பயிற்சி ஊழியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பதில் நிறுவனம் நேரமும், பணமும் செலவிடுவதால், அனைவரும் வெற்றி பெற வேண்டும் என முயற்சிப்பது நிறுவன நலன் சார்ந்தது, என கூறியிருந்தார்.
முன்னதாக, இம்மாத துவக்கத்தில் மைசூரு வளாகத்தில் நிறுவன தேர்வில் வெற்றி பெறாத 300க்கும் மேற்பட்ட பயிற்சி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் இன்போசிஸ் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளானது.
செய்தி - பிடிஐ

400 பேரை வீட்டுக்கு அனுப்பிய Infosys: இளம் ஐடி ஊழியர்களின் நொறுங்கிய எதிர்கால கனவுகள்!
Edited by Induja Raghunathan