Gold Rate Chennai: மகா சிவராத்திரி மகிழ்ச்சி - தங்கம் விலை ரூ.200 குறைவு!
தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, மகா சிவாராத்திரியான இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்றே மகிழ்ச்சி தரும் தகவலாக உள்ளது.
தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, மகா சிவாராத்திரியான இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்றே மகிழ்ச்சி தரும் தகவலாக உள்ளது.
சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.8,075 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.64,600 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.8,809 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.70,472 ஆகவும் இருந்தது. தற்போது ஓரளவு விலை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (26.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 குறைந்து ரூ.8,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 குறைந்து ரூ.64,400 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 குறைந்து ரூ.8,782 ஆகவும், சவரன் விலை ரூ.216 குறைந்து ரூ.70,256 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (26.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.106 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்து ரூ.1,06,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடரும் அதிரடி நடவடிக்கைகளின் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தொடர்வதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் கூடி வருகிறது.

தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே மீண்டெழத் தொடங்கியுள்ளது. அத்துடன், பங்குச் சந்தையும் மீளத் தொடங்கியுள்ளது. இன்று மகா சிவராத்திரி என்பதால் இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ஆகும். இந்தச் சூழலில், ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,050 (ரூ.25 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,400 (ரூ.200 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,782 (ரூ.27 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,256 (ரூ.216 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan