Affiliate Marketing: இணை சந்தைப்படுத்தல் மூலம் வர்த்தகத்தை பெருக்க உதவும் 9 சமூக ஊடக வழிகள்!
உங்கள் விற்பனையை அதிகரித்து, பரவலான வாடிக்கையாளர்களை சென்றடைவதற்காக இணை சந்தைப்படுத்தலுக்கு ஏற்ற சமூக ஊடக சேனல்களை கண்டறியுங்கள்.
டிஜிட்டல் பரப்பில், இணை சந்தைப்படுத்தல் (Affiliate marketing) உத்தி விற்பனையை அதிகரித்து, வருவாயை உருவாக்குவதற்கான வலுவான உத்தியாக உருவெடுத்துள்ளது.
நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் பொருட்கள் அல்லது சேவையை முன்னிறுத்துவதன் மூலம், இணை சந்தைப்படுத்தலில் ஈடுபடுபவர்கள், தங்கள் இணைப்புகள் மூலம் நிகழும் விற்பனைக்கான கமிஷன் தொகையை பெறலாம். இருப்பினும், இணை சந்தைப்படுத்தல் முயற்சியின் வெற்றி, இந்த இணைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான சரியான சேனல்களை தேர்வு செய்வதில் அடங்கியிருக்கிறது.
எண்ணற்ற சமூக ஊடக சேனல்கள் உள்ள நிலையில், சிறந்த பலன் அளிக்கும் சேனல்களை தேர்வு செய்வது சவாலாக இருக்கலாம். பல வகையான வாடிக்கையாளர்களை சென்றடைய சமூக ஊடக சேனல்கள் வழி செய்கின்றன. ஒவ்வொரு சமூக ஊடக மேடையும் தனித்துவமான அம்சங்களோடு அதற்கேற்ற வாடிக்கையாளர் பரப்பை கொண்டுள்ளன. மார்க்கெட்டிங் உத்தி, உள்ளடக்கத்திற்கு ஏற்ப பலவித மேடைகள் உள்ளன. காட்சி வழி ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பிண்டிரெஸ்ட் மற்றும் எழுத்து சார்ந்த டிவிட்டர், லிங்க்டுஇன் என பலவித வழிகள் உள்ளன.
இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தக்கூடிய 9 முக்கிய சமூக ஊடக சேவைகள் மற்றும் அவற்றை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்:
மாதம் 2.8 பில்லியன் தீவிர பயனாளிகளைக் கொண்ட ஃபேஸ்புக் மாபெரும் மேடையாக திகழ்கிறது. இதன் பரவலான வாடிக்கையாளர்கள் மற்றும் புதுமையான விளம்பர உத்திகள் இணை சந்தைப்படுத்தலுக்கு ஏற்றதாக அமைகிறது.
ஃபேஸ்புக்கை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- வர்த்தக பக்கத்தை உருவாக்கவும்: உள்ளடக்கத்தை பகிர, தொழில்முறையான இருப்பை உண்டாக்கவும்.
- குழுக்களில் இணையவும்: உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் தீவிரமாக இருக்கும் குழுக்களில் பங்கேற்கவும்.
- இணைப்புகளை பகிரும் முன் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு அதாவது பலன் அளிப்பதை உறுதி செய்யுங்கள்.
- விளம்பரங்கள்: இலக்கு வாடிக்கையாளர்களை அடைய ஃபேஸ்புக் விளம்பரங்களை பயன்படுத்தவும். அதிக மதிப்பிலான பொருட்களை விற்க ஏற்றதாக அமையும்.
- தொடர்பு கொள்ளுங்கள்: வாடிக்கையாளர்கள் கருத்துக்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து நம்பிக்கையை உருவாக்குங்கள்.
இன்ஸ்டாகிராம் காட்சி சார்ந்தது என்பதால், வாழ்வியல், பேஷன், அழகு சாதன பொருட்களுக்கு ஏற்றது. இதன் ஸ்டோரீஸ் மற்றும் ஷாப்பிங் அம்சங்கள் கைகொடுக்கும்.
இன்ஸ்டாகிராமை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- தரமான காட்சிகள்: கண்ணை கவரும் படங்கள், வீடியோக்களை பயன்படுத்தவும்.
- ஸ்டோரீஸ், இணைப்புகள்: பத்தாயிரம் பின் தொடர்பாளர்களுக்கு மேல் இருந்தால், ஸ்டோரிகளில் ஸ்வைப் அப் இணைப்புகளை பயன்படுத்தலாம்.
- கூட்டு முயற்சி: உங்கள் பிரிவில் உள்ள செல்வாக்காளர்களுடன் இணைந்து செயல்படலாம்.
- பயோவில் இணைப்பு: பயோவில் உள்ள இணைப்பை உங்கள் வர்த்தகத்திற்கு ஏற்ப மாற்றி அமையுங்கள்.
Youtube
இரண்டாவது பெரிய தேடியந்திரமாக விளங்கும் யூடியூப் வீடியோ உள்ளட்டக்கத்திற்கு ஏற்றது. பயிற்சிகள், விமர்சனங்கள், அன்பாக்ஸிங் வீடியோ போன்றவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
யூடியூபை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- சிறந்த உள்ளடக்கம்: பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அல்லது அழமான விமர்சனங்களில் கவனம் செலுத்தவும்.
- விளக்க பகுதியில் இணைப்புகள்: வீடியோவுக்கான விளக்கத்தில் இணைப்புகளை இடம்பெற வைத்து அது பற்றி வீடியோவில் சொல்லுங்கள்.
- அட்டைகள், எண்ட் ஸ்கிரீன்: இந்த அம்சங்களை கொண்டு உங்கள் வாடிக்கையாளர்களை பொருட்களை வாங்க வழிகாட்டுங்கள்.
- சீரான உள்ளடக்கம்: தொடர்ச்சியாக உள்ளடக்கத்தை பகிர்வது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
Pintrest
ஊக்கம் மற்றும் எண்ணங்களுக்கு வழிகாட்டும் காட்சி காண்டறிதல் மேடை. வலைப்பதிவுகள், பொருட்களை நோக்கி ஈர்க்க ஏற்றது.
பிண்டிரெஸ்ட்டை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- ஈர்க்கும் காட்சிகள்: கிளிக் செய்ய ஊக்குவிக்கும் வகையில் காட்சிகளை உருவாக்கவும்.
- செழுமையான பின்கள்: உங்கள் பொருட்களுக்கு ஏற்ற செழுமையான காட்சிகளை பயன்படுத்தவும்.
- குழு பலகைகள்: உங்கள் பிரிவு சார்ந்த குழுக்களில் இணையவும்.
- கீவேர்டுகள்: பொருத்தமான கீவேர்டுகளை உங்கள் காட்சிகளில் இடம்பெற வைக்கவும்.
நிகழ் நேர தொடர்பிற்கு டிவிட்டர் ஏற்றது. செல்வாக்காளர்களை அடையவும் உதவும். சிறிய செய்திகளுடன் இணைப்புகளை பகிரலாம்.
டிவிட்டரை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- சீராக டிவீட் செய்யவும்: உங்கள் பொருட்கள், வலைப்பதிவு தொடர்பான இணைப்புகளை தொடர்ச்சியாக பகிரவும்.
- ஹாஷ்டேக் பயன்பாடு: பொருத்தமான ஹாஷ்டேக் பயன்பாடு மூலம் பார்வையை அதிகமாக்குங்கள்.
- பின் தொடர்பாளருடன் உரையாடல்: ரீடிவீட் மற்றும் குறிப்பிடப்படுவதற்கு பதில் அளியுங்கள்.
- விளம்பரம்: டிவிட்டர் விளம்பரங்களை பயன்படுத்தவும்
இந்த மேடை பி2பி மார்க்கெட்டிங் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு உகந்தது. நிர்வாகிகள், தொழில்முறை ஊழியர்களை அடைய ஏற்ற வழி.
லிங்க்டுஇன்னை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- கட்டுரைகள்: ஆழமான கட்டுரைகளுடன் இணைப்புகளை வெளியிடுங்கள்.
- குழுக்கள்: உங்கள் பிரிவு தொடர்பான குழுக்களில் பங்கேற்கவும்.
- பொருத்தமான ப்ரஃபைல்: உங்கள் ப்ரஃபைல் பக்கம் பொருத்தமான கீவேர்டு, இணைப்புகள் கொண்டிருக்க வேண்டும்.
- நேரடி செய்தி: தொடர்பில் உள்ளவர்களை தனிப்பட்ட செய்தி மூலம் தொடர்பு கொள்ளவும்.
ரெட்டிட் இணைய சமூகம் சார்ந்த மேடை. பயனர்கள் இணைப்புகளை பகிர்ந்து விவாதிக்கும் இடம். குறிப்பிட்ட நோக்கில் சந்தைப்படுத்தலுக்கு உதவும்.
ரெட்டிட்டை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- சப்ரெட்டிட்கள்: பொருத்தமான துணை குழுக்களில் இணைந்து விளம்பர தன்மை இல்லாத உள்ளடக்கம் பகிரவும்.
- மதிப்பு: இணைப்புகளை பகிரும் முன், வாடிக்கையாளர்களுக்கு மதிப்புள்ளவற்றை அளியுங்கள்.
- விளம்பரங்கள்: ரெட்டிட் விளம்பரங்களை பயன்படுத்தவும்.
- வெளிப்படை தன்மை: இணைப்புகளை பகிரும் முன் அவற்றின் நோக்கத்தை வெளிப்படையாக தெரிவியுங்கள்.
Quora
கேள்வி பதில் மேடையான குவோராவில் நீங்கள் வல்லுனராக இருந்து பதில் அளிக்கலாம். விரிவான தகவல்களுடன் இணைப்புகளை பகிர ஏற்றது.
குவோராவை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- பதில் அளியுங்கள்: விரிவான பயனுள்ள பதில் அளித்து, உங்கள் இணைப்புகளை பகிருங்கள்.
- ப்ரஃபைல்: உங்கள் ப்ரஃபைல் பக்கத்தில் பொருத்தமான இணைப்புகள் இருக்க வேண்டும்.
- தலைப்புகள்: உங்கள் பிரிவு தொடர்பான தலைப்புகளை பின் தொடருங்கள்.
- சீரான தன்மை: உங்கள் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் வழி செய்கிறது. தனிப்பட்ட தொடர்புகளோடு, பிரத்யேக சலுகைகளுக்கு ஏற்றது.
வாட்ஸ் அப்பை இணை சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்தும் வழிகள்:
- ஒலிபரப்பு பட்டியல்: பல தொடர்புகளுக்கு இணைப்புகளை அனுப்புங்கள்.
- நிலைத்தகவல்: நிலைத்தகவல் வாயிலாக இணைப்புகளை பகிருங்கள்.
- குழுக்கள்: உங்கள் பிரிவு சார்ந்த குழுக்களை உருவாக்கவும் அல்லது பங்கேற்கவும்.
- தனிப்பட்ட செய்திகள்: சலுகைகளோடு தனிநபர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த சமூக ஊடகங்களை சிறப்பாக பயன்படுத்துவது உங்கள் இணை சந்தைப்படுத்தல் முயற்சியை மேம்படுத்தும். ஒவ்வொரு மேடைக்கும் தனித்தன்மையான அம்சங்கள் உண்டு. அவற்றை புரிந்து கொண்டு பயன்படுத்துவதன் மூலம் பரவலான வாடிக்கையாளர்களை சென்றடைந்து, விற்பனையை அதிகரிக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு பலன் அளித்து, சீராக தொடர்பு கொள்ளவும், விளம்பர இணைப்புகளை தெளிவாக குறிப்பிடவும் மறக்க வேண்டாம். இது நம்பகத்தன்மையை உருவாக்க உதவும்
சிறு தொழில் நிறுவனங்கள் அதிக செலவில்லாமல் மார்க்கெட்டிங் செய்ய 10 வழிகள்!
Edited by Induja Raghunathan