Stock News: சென்செக்ஸ் சற்றே பின்னடைவுடன் தொடக்கம்!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை10.00 மணி நிலவரப்படி 60 புள்ளிகள் குறைந்து 79,482.22 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 23,25 புள்ளிகள் குறைந்து 24,176.105 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்க்கிழமையான இன்று (8-11-2024) சற்றே பின்னடைவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் சுமார் 60 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 23புள்ளிகள் பின்னடைவு கண்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை10.00 மணி நிலவரப்படி, 60 புள்ளிகள் குறைந்து 79,482.22 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 23,25 புள்ளிகள் குறைந்து 24,176.105 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 147 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 291 புள்ளிககளும் பின்னடைவு கண்டுள்ளன.தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு மட்டும் இன்று 448.65 புள்ளிகளும்உயர்ந்தது.
காரணம்:
அமேரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, முதலீட்டாளர்கள் பெடரல் ரிசர்வின் வட்டி விகிதக் குறைப்பு, வரிக்குறைப்பு ஆகியவற்றை எதிர்நோக்கி முதலீடுகளை இறுக்கிப் பிடித்துள்ளனர். மேலும், டாலர் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதும் நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன. இன்று ஐடி பங்குகளினால் கொஞ்சம் சென்செக்ஸ், நிப்டி நிலைப்பெற்று வருகிறது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
இன்ஃபோசிஸ்
டெக் மகீந்திரா
ஹிண்டால்கோ
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹிண்டால்கோ
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
பீபிசிஎல்
ரிலையன்ஸ்
ஐசிஐசிஐ வங்கி
கோல் இந்தியா
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவடைந்து இன்று ரூ.84.35ஆக உள்ளது.