Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சில நாட்களோ, மாதங்களோ, தேவைகேற்ப வாடகைக்கு இடம்: 'ரென்ட் மை ஸ்டே'

சில நாட்களோ, மாதங்களோ, தேவைகேற்ப வாடகைக்கு இடம்: 'ரென்ட் மை ஸ்டே'

Monday November 16, 2015 , 2 min Read

கிரண் மற்றும் ராகேஷ் காம்பலேவிற்கு, "ரென்ட் மை ச்டே" பற்றிய யோசனை, சாதாரண ஒரு பேச்சின் இடையில் தோன்றியது. கிரணிடம் ராகேஷ், எனக்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு, தங்க ஒரு வீடு தேவை. அங்கு தங்கி, நான் கட்டி வரும் இல்லத்தின் கட்டட பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் சிறிய காலத்திற்கு எவரும் வீடுகளை வாடகைக்கு விடுவதில்லை.

kiran, ragesh & nanjunda

kiran, ragesh & nanjunda


இது போன்ற சில தருணங்களே எங்களை "ரென்ட் மை ஸ்டே" (Rent My Stay) யோசனைக்கு இட்டுச் சென்றது. விரைவில் அவர்களது நண்பர் நஞ்சுண்டா, அவர்களது அணியில் இணைந்துள்ளார். தற்போது "ரென்ட் மை ஸ்டே" 10 பேர் கொண்ட நிறுவனமாக, அதே உத்வேகத்துடன் முன்னோக்கி பயணித்து வருகின்றனர்.

வேலை நிகழும் தளம் :

தற்போது ரென்ட் மை ஸ்டே என்பது ஒரு ஆன்லைன் தளமாக, சிறிய காலத்திற்கு, வீடுகள் வாடகைக்கு எடுப்பதிற்கு உதவுகிறது. தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, தனி அரை என, வெவ்வேறு விதமான வீடுகளை பற்றிய தகவலை இதன் மூலம் நாம் பெறலாம். அவற்றை, சில நாட்கள் முதல், சில மாதங்கள் வரை நாம் வாடகைக்கு எடுக்கலாம்.

இது பற்றி கிரண் கூறுகையில், "இந்த யோசனை புதியது என்பதால், இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆரம்ப கட்டத்தில், வீட்டின் உரிமையாளர்களுக்கு இதன் நன்மைகளை உணர்த்த நாங்கள் சிரமப்பட்டோம்" என்கிறார் அவர்.

சவால்கள்:

புதிதாக ஒரு தொழில்முனைவில் எண்ணற்ற இடையூறுகள் வருவது இயல்புதானே. அவை அனைத்தும் இவர்களுக்கும் வந்துள்ளது. பணபற்றாக்குறை, வீட்டு உரிமையாளர்களுக்கு பஞ்சம், வாடிகையாளர்களை சென்றடைவது போன்று பல இன்னல்களை சந்தித்துள்ளனர். ஆனால் தங்கள் யோசனை மீது தங்களுக்கு இருந்த தீவிர நம்பிக்கை அவர்களை முன்னோக்கி அழைத்து சென்றுள்ளது. "அணியாக உழைத்தல் மற்றும் அணியில் இருந்த அனைவரின் முழு இடுபாடே எங்கள் வெற்றியின் ரகசியம்" என்கிறார் கிரண்.

முதலில், விற்பனை ஆகாத அடுக்கு மாடி இல்லங்கள், உடனடியாக குடிபுக ஏற்ற படி இருக்கும் வீடுகள், மற்றும் சர்வீஸ் அப்பர்ட்மெண்ட்களை, தங்கள் தளத்தில், அட்டவணைப் படுத்தியுள்ளனர். அப்படி செய்கையில், வாடகை வீடுகளுக்கும், சர்வீஸ் அப்பர்ட்மெண்ட்களுக்கும் இடையில், ஒரு மிகபெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்துள்ளனர்.

மேலும், அவர்களுக்காக ஆய்வு செய்த அணி, வாடிக்கையாளர், மிகபெரிய தொகையை கட்டணமாக, சர்வீஸ் அப்பர்ட்மெண்ட்களில் செலுத்துவதை விரும்பவில்லை என்பதை கண்டுபிடித்தனர். இதுவே, முழுவசதிகளும் கொண்ட, அப்பர்ட்மென்ட்களை, வாடகைக்கு விடும் யோசனைக்கு வித்திட்டது. விரைவில், அவர்கள் பிணையில், 100 அத்தகைய அப்பர்ட்மென்ட்கள் இருந்தன. அவற்றை அவர்கள் பிரத்யெகமாக விளம்பரப்படுத்தினர்.

வரவேற்பு மற்றும் எதிர்காலம் :

தற்போது அவர்கள் கவனம் முழுவதும், பெங்களுருவை சுற்றி அமைந்துள்ளது. எச்எஸ்ஆர், பிடிஎம், எலெக்ட்ரானிக் சிட்டி, ஜேபி நகர் என அனைத்து இடங்களிலும், அவர்களது அப்பார்ட்மென்ட்கள் உள்ளன. தற்போதைய நிலையில், ஒரு மாதத்திற்கு, 2000 இரவுகள் அவர்களிடம் பதிவாகின்றது. மேலும் அதில் 20 சதம், மீண்டும் வரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இது வரை 10,000 இரவுகளை பதிவு செய்து, குறிப்பிடத்தக்க வெற்றியை சுவைத்துள்ளது இவர்கள் அணி.

இவர்கள் அணி இல்லத்தின் உரிமையாளர்களோடு இணைந்து, குறிப்பிடத்தக்க ஏற்பாடு வைத்துள்ளனர். அதன் மூலம், அவர்கள் நீண்ட நாள் தங்குவோருக்கு பதில் குறைவான நாட்கள் தங்குவோருக்கு, தங்கள் இல்லத்தை வாடகைக்கு கொடுக்கின்றனர். இதன் மூலம், உரிமையாளர்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதோடு, வாடிகையாளர்களுக்கும் 40 சதம் குறைவான கட்டணத்தில் தங்குவதற்கான இடம் கிடைகின்றது.

இதற்காக "ரென்ட் மை ஸ்டே" பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கின்றது. அவர்களது உடனடி முன்னுரிமை பெங்களுரு மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக உணவு, சலவை செய்வோர், மேலும் வாடிகையாளர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்தும் பணியில் இவர்கள் குழு இறங்கியுள்ளது. மேலும் அவர்கள் வாடிகையாளர்களுக்கு சாவி இல்லா நுழைவு மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் அளிக்கவும் இவர்கள் உழைத்து வருகின்றனர். அதற்கடுத்து முதலீடுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ரென்ட் மை ஸ்டே  வலைத்தளம்