டிஜிட்டல் மாற்றத்தின் மைல்கல்லை கொண்டாடிய யூனியன் வங்கி- ஜோஹோ நிறுவனம்!
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ ஆகியவை, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் முக்கிய மைல்கல்லான இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டாக உருவாக்கிய சி.ஆர்.எம். எட்ஜ் மென்பொருளின் வெற்றிகரமான செயலாக்கத்தை கொண்டாடியது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ ஆகியவை, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் முக்கிய மைல்கல்லான இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டாக உருவாக்கிய சி.ஆர்.எம். எட்ஜ் மென்பொருளின் வெற்றிகரமான செயலாக்கத்தை கொண்டாடும் நிகழ்ச்சியை நடத்தின.
தென்காசியில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜோஹோ நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., ஸ்ரீதர் வேம்பு, யூனியன் பாங்க் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் மணிமேகலை பங்கேற்றனர்.
2023ல் அறிமுகம் செய்யப்பட்ட'சி.ஆர்.எம் எட்ஜ்' வங்கியின் முதன்மை வாடிக்கையாளர் தொடர்பு சாதனமாக விளங்குவதோடு, வங்கியில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வங்கியின் விற்பனை, மார்க்கெட்டிங், சேவை குழுக்கள், கூட்டு முயற்சி, தரவுகள் சார்ந்த முடிவெடுத்தல் மற்றும் தானியங்கிமயத்திற்கான ஒருங்கிணைந்த அமைப்பாக இந்த மென்பொருள் விளங்குகிறது.
மேலும், இ-கே.ஒய்.சி., பேன் மற்றும் ஆதார் சரி பார்த்தால், சிபில் சோதனை உள்ளிட்ட செயல்பாடுகளையும் சீரமைத்துள்ளது. வாடிக்கையாளர் திருப்தி புள்ளிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. ஜோஹோ சர்வே மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வாடிக்கையாளர்களின் மேம்பட்ட திருப்தியை உணர்த்துகின்றன.
ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்குடன் இணைக்கப்பட்ட பிறகு, அதிகரித்த செயல்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில், யூனியன் வங்கி மற்றும் ஜோஹோ கூட்டு துவங்கியது. வங்கி தனது வாடிக்கையாளர் தொடர்பு சேவை உள்ளிட்டவற்றை நவீனமயமாக்க இது உதவியது.
யூனியன் வங்கியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், அதன் சிக்கலான ஐடி அமைப்பை ஒருங்கிணைக்கும் சி.ஆர்.எம் எட்ஜ் மென்பொருள் சேவையை ஜோஹோ உருவாக்கி அளித்தது.
இந்த மென்பொருள் செயலாக்கத்திற்கு பிறகு, வாடிக்கையாளர் சேர்க்கை, தக்க வைத்தல், திருப்தி மற்றும் நீண்ட கால வளர்ச்சி நோக்கி, வங்கி முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. வாடிக்கையாளர் கோரிக்கைகள் பெருபாலானவற்றை வங்கி தானியங்கிமயமாக்கியுள்ளது. இதனால் உண்டான மேம்பாடு வாடிக்கையாளர் திருப்தியை அதிகமாக்கியுள்ளது.
"ஜோஹோவின் ஆலோசனை சார்ந்த அணுகுமுறை மற்றும் ஈடுபாடு எங்கள் வாடிக்கையாளர் அனுபவ உத்தியில் அதிக பலன் அளித்துள்ளது. இந்த கூட்டு பாரம்பரிய முறைகளை கடந்து, நவீன நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க வழி செய்துள்ளது,” என யூனியன் பாங்க் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் மணிமேகலை கூறியுள்ளார்.
கூட்டு முயற்சி மற்றும் மேலும் புதுமையாக்கத்திற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
"இந்த மாற்றத்திற்கான பயணத்தில் வங்கியுடன் இணைந்து செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் மென்பொருள் மேடை, வங்கியின் ஐடி அமைப்புடன் எளிதாக ஒருங்கிணைந்து, டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் கூட்டாக வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தி வருகிறோம்,” என ஜோஹோ கார்ப்பரேஷன் இணை நிறுவனர், சி.இ.ஓ., ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
வங்கி தனது சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் ஒரு பகுதியாக மேலூர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் அரசு பள்ளிகளுக்கு, சுகாதார வசதிகள், சூரிய மின்சகதி அமைப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது.
Edited by Induja Raghunathan