Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'உழை, உதவு, உயரு, உயர்த்து' - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான தமிழக அரசின் நல்லோசை திட்டம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் விடுதிகளில் பயிலும் கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக 'நல்லோசை' என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன்.

'உழை, உதவு, உயரு, உயர்த்து' - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான தமிழக அரசின் நல்லோசை திட்டம்!

Thursday October 10, 2024 , 3 min Read

"சமூகத்தில் நல்மாற்றத்தை நிகழ்த்துவதற்கான ஆயுதமற்ற புரட்சியே கல்வி" அப்பெரும் கல்வியை எல்லா தரப்பினருக்கும் கிடைக்க 'நான் முதல்வன்' திட்டம் போன்ற பல முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வந்துள்ளது.

அதனின் நீட்சியாக தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் விடுதிகளில் தங்கி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து நவீன தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்துக்கொள்ளவும், வேலை வாய்ப்பிற்கு தேவையான திறனை மேம்படுத்தவும், மேலும் மாணாக்கர்களை ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியிலும் பங்குவகிக்கும் சிறந்த மனிதர்களாக உருவாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது 'நல்லோசை' திட்டம்.

இத்திட்டத்தை கடந்த வாரம் சனிக்கிழமை அக்டோபர் 5-ம் தேதி அன்று சென்னையில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR)-ல் துவக்கி வைத்தார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன்.

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன்

'நல்லோசை' திட்டம் துவக்கம்!

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி ப்ரியா, இயக்குநர் த.ஆனந்த் மற்றும் கூடுதல் செயலாளர் ரா.உமா மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்புரையாற்றிய அமைச்சர் திரு.மதிவேந்தன்,

"ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின‌ விடுதி, மாணாக்கர்களின் நலன் கருதி உணவு கட்டணத்தை 1100-லிருந்து 1500 ஆக உயர்த்தியதையும், விடுதிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்ர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ‘திராவிட மாடல்’ தொடர்ந்து பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது," எனவும் குறிப்பிட்டார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன்

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன்

விழாவின் ஒரு பகுதியாக Human Book என்கிற தனித்துவமான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நேச்சுரல்ஸ் நிறுவனர் குமரவேல், தேசிய விருது, நாரி சக்தி புரஸ்கார் போன்ற விருகளை பெற்ற சமூக சேவகர் டிஃப்பனி ப்ரார் மற்றும் நீர் சுத்திகரிப்பில்  புதுமைகளை கொண்டுவந்த Watsan Envirotech நிறுவனர் சந்திரசேகரன் ஜெயராமன் போன்ற 15-க்கும் மேற்பட்ட சிறந்த ஆளுமைகள் மாணவனோடு மாணவராக வட்டமாக அருகே அமர்ந்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இது ஆளுமைகள் மீது கொண்டிருக்கும் ஒரு வித தயக்கத்தை போக்கி, மாணவர்கள் தங்களது கனவு சார்ந்த பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிந்து கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. மேலும், விழாவின் தொடக்கத்திலும், இறுதியிலும் பாரம்பரிய இசைக்கலைஞரான சவுண்ட் மணி மற்றும் அவரது குழுவினரின் இசைநிகழ்ச்சி, விழாவை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

Human Book Discussion

Human Book Discussion

'நல்லோசை திட்டம்'  

மெய்யான கல்வியின் முதலாவது அடிப்படைக் கொள்கை எதையும் கற்பிக்க முடியாது என்பதே! ஒரு நல்ல ஆசிரியர் சிறந்த அனுபவங்களை கொடுத்து அதிலுள்ள சிறந்த கருத்துக்களை சுட்டிக்காட்டி ஒரு எதார்த்த கல்வியை வழங்குவார். அப்படி பெறுகிற கல்வியே அவர்கள் வாழ்வை செம்மைப்படுத்தும். இக்கூற்றை மையமாகக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதே 'நல்லோசை' திட்டம்.

'நல்லோசை திட்டம்'

'நல்லோசை திட்டம்'

முதலில் Pilot Study மூலம் ஒவ்வொரு மாணவர்களின் எண்ணம், எதிர்பார்ப்பு, மற்றும் அவர்களின் அடிமட்டச் சவால்களை புரிந்து கொள்கின்றனர். பின்னர், மாணவர்களின் கனவு சார்ந்து இதுவரை அவர்களது வாழ்வில் கண்டிராத சிறந்த அனுபவத்தையும், நல்ல ஆளுமைகளையும் அறிமுகப்படுத்தி அவர்களின் கனவை விசாலமாக்குவதோடு, அவர்கள் கனவை நனவாக்குவதற்கு தேவையான திறனை மேம்படுத்த உதவுவதே நல்லோசை!

இன்னும் சுருக்கமாக கூறவேண்டுமென்றால் ஒரு மாணவன் தன் வாழ்வில் வெற்றிப்பெறுவதற்கு தேவையான மனப்பான்மையும், திறனையும், வாய்ப்பையும் வழங்குவதே நல்லோசை. இத்திட்டத்தை SPI Edge மற்றும் Forge Innovation & Ventures தமிழக அரசோடு இணைந்து செயல்படுத்துகின்றனர்.

"SPI Edge – Ratheesh Krishnan (First person on the right)"

"SPI Edge – Ratheesh Krishnan (First person on the right)"

எப்படி உருவானது?

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின‌ மாணவர்கள், கல்லூரிக்கு செல்பவர்களின் சதவிகிதம் அதிகமாயினும், கல்லூரி முடித்தவர்கள் வேலைக்கு உடனடியாக தயாராகிறார்களா என்றால், பல சமயங்களில் இல்லை என்னும் பதிலும் வருகிறது. பல தொழில்நுட்ப மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களில் கல்லூரி முடிப்பவர்களை உடனடியாக பணியமர்த்த முடியவில்லை என்னும் குரல்கள் கேட்கின்றன.

எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின‌ மாணவர்களின் நலன் கருதி அவர்களின் திறன்களை வளர்த்து, கனவை வென்று, வாழ்வில் உன்னத நிலைக்கு வரவேண்டும் என்கிற முனைப்புடன் தொடங்கப்பட்டதே நல்லோசை திட்டம்.

இதன் முதற்கட்டமாக சென்னை மாவட்ட செயல்பாட்டில் இயங்கி வரும் ஆதி திராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு இத்திட்டத்தை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஒரு ஏழை மாணவனின் வளர்ச்சி; நாட்டின் வளர்ச்சியை குறிக்கும் என்பர். தமிழக அரசின் இம்முயற்சி பாராட்டுக்குரியது!

கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள்..!!