மும்பை பிகேசி பகுதியில் முதல் ஷோரூம் அமைக்க Tesla திட்டம்!
அமெரிக்க மின்வாகன நிறுவனம் டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் ஷோரூமை அமைக்க மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்லக்ஸ் பகுதியில் 4,000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க மின்வாகன நிறுவனம் Tesla, நாட்டில் தனது முதல் ஷோரூமை அமைக்க மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்லக்ஸ் பகுதியில் 4,000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
கோடீஸ்வர தொழில்முனைவோர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா, இந்த இடத்திற்கு மாதம் ரூ.35 லட்சம் வாடகை செலுத்தும் என சி.ஆர்.இ மேட்ரிக்ஸ் பகிர்ந்துள்ள ஆவணம் தெரிவிக்கிறது. இந்த இடப்பரப்பு பார்கிங் வசதியும் கொண்டது.
டெஸ்லா அறிமுகம் மிகவும் எதிர்நோக்கப்படும் நிகழ்வாக இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்ய அல்லது அசெம்பிள் செய்வதற்கான நிறுவன திட்டத்தின் முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

மேக்கர் மேக்சிட்டியில் உள்ள இந்த இடத்திற்கான குத்தகை ஐந்து ஆண்டுகளுக்கானது. மாத வாடகை, ஆண்டுக்கு 5 சதவீத உயர்வுடன் 43 லட்சம் வரை செல்லலாம், என ஆவணங்கள் தெரிவிக்கிறது.
தரை தளத்தில் அமைந்துள்ள இந்த இடம், இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் அருகே உள்ளது. யூனிவோ பிராபர்டீஸ் குத்தகை விட்டுள்ளது. யூனிவ்கோ மற்றும் டெஸ்லா சார்பில் புனேவில் அலுவலகம் கொண்டுள்ள நிறுவனம் சார்பில் இந்த வாடகை ஒப்பந்தம் பிப் 27ல் கையெழுத்தானது.
சதுர அடிக்கான மாத வாடகை ரூ.881 ஆக அமைகிறது, பாதுகாப்பு டெபாசிட்டாக ரூ.2.11 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
டெஸ்லா இந்தியாவில் நுழைய திட்டமிட்டுள்ளதை அடுத்து, பல்வேறு பொறுப்புகளுக்கு பணியாளர்கள் நியமன விளம்பரத்தையும் லின்க்டுஇன் தளத்தில் வெளியிட்டது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு இருப்பது பற்றி முதலில் 2021 ஜனவரியில் செய்தி வெளியானது. அப்போது அதன் இந்திய நிறுவனம் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக 2020 டிசம்பரில் அதன் மாடல் 3 அறிமுகமாக இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியானாலும், இறக்குமதி வரி சர்ச்சையால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இருப்பினும், நிறுவனம் இந்தியாவில் நுழையும் திட்டத்தை மீண்டும் புதுப்பித்துள்ளது.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan