Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'கைக்குழந்தையை கட்டிப்போட்டு வேலை செய்வோம்' - கொத்தடிமையில் இருந்து மீண்டவர்களின் வேதனை பகிர்வு...

டிசம்பர் மாதம் உலக மனித உரிமைகளுக்காக அனுசரிக்கப்படும் நிலையில், கொத்தடிமைகளாக இருந்து மீண்ட மூவர், கொத்தடிமைகளாக அவர்கள் அனுபவித்த ரணங்களையும், மீட்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் கிடைத்த நம்பிக்கையை பற்றியும் யுவர்ஸ்டோரியின் சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டனர்.

'கைக்குழந்தையை கட்டிப்போட்டு வேலை செய்வோம்' - கொத்தடிமையில் இருந்து மீண்டவர்களின் வேதனை பகிர்வு...

Friday December 27, 2024 , 4 min Read

டிசம்பர் 10ம் தேதி உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், கொத்தடிமைகளாக இருந்து மீண்ட மூவர், கொத்தடிமைகளாக அவர்கள் அனுபவித்த ரணங்களையும், மீட்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் கிடைத்த நம்பிக்கையை பற்றியும் யுவர்ஸ்டோரியின் சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டனர்...

1976ம் ஆண்டில், மத்திய அரசு கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை ஒழித்தல் சட்டத்தின் மூலம் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழித்தது. கொத்தடிமைகளாக பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரையும் விடுவித்தது. அவர்களின் கடன்களை நீக்கியது. கொத்தடிமைத்தனத்தை சட்டப்படி தண்டிக்கத்தக்கக் குற்றமாக மாற்றியது.

கொத்தடிமை உழைப்பு என்பது அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாகும், இதில் ஒரு நபர் கடனுக்கு ஈடாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். இது தனிநபர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது. குடும்பங்களைப் பிரிக்கிறது. தலைமுறை வறுமையை நிரந்திரமாக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களே அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், அவர்களுக்கு கண்ணியம், கல்வி மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மறுக்கப்படுகின்றன.

bonded labour

அரசு தரவுகளின்படி, 1978 மற்றும் ஜனவரி 2023க்கு இடையில் சுமார் 315,302 பேர் கொத்தடிமைத் தொழிலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 94% பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இது இப்பிரச்சினையின் ஆழமான வேரூன்றிய தன்மையை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களில்.

இந்த ஆண்டு நவம்பரில், கொத்தடிமைத் தொழிலாளர்களின் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தலைத் தடுக்க ஒரு திட்டத்தை உருவாக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒத்துழைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 10ம் தேதி உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், கடன் மற்றும் விரக்தியின் முடிவில்லாத சுழற்சியிலிருக்கும் மக்களை சிக்க வைக்கும் ஒரு அமைப்பான கொத்தடிமை உழைப்பின் கடுமையான யதார்த்தத்தை எதிர்கொள்வது கட்டாயமாகும்.

கொத்தடிமைகளாக இருந்து மீண்ட மூவர், கொத்தடிமைகளாக அவர்கள் அனுபவித்த ரணங்களையும், மீட்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் கிடைத்த நம்பிக்கையை பற்றியும் யுவர்ஸ்டோரியின் சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டனர்.

மூர்த்தி, தாயம்மா- கர்நாடகா

மூர்த்தி பள்ளிக்குச் சென்றதில்லை. அவருடைய வயது என்னவென்றே அவருக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் நடந்த சம்பவங்களின் வழி வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை அவர் நினைவு கூர்ந்தார். அவருடைய தந்தை உயிருடன் இருக்கும் வரை விவசாய வேலை செய்து கிடைத்த பணத்தில் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது இறப்பிற்கு பிறகு, மூர்த்தி டிராக்டர் ஆபரேட்டரானார்.

அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், செலவுகளுக்காக ஒருவரிடம் ரூ.30,000 கடன் வாங்கினார். தொடர்ந்து மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் தாலுகாவில் உள்ள கரும்பு விவசாயி ஒருவரிடம் வீடு கட்டுவதற்காக ரூ.80,000 கடன் வாங்கினார். கடன்களை அடைக்க முடியாத நிலையில், இனிமேல் வீடு என்ற ஒன்றில் ஒரே இடத்தில் வாழும் நிலையினை இழந்ததாக கூறினார்.

"வெவ்வேறு பண்ணைகளுக்கு கரும்பு அறுவடைக்கு செல்வோம். தினமும் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்ய வைக்கப்பட்டோம். ஆண்கள் லாரிகளில் கரும்பை ஏற்றும் போது கூட, பெண்கள் கரும்புகளை அறுவடை செய்தனர். நாங்கள் ஓய்வெடுக்க விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் பணிபுரிந்த இடங்களில் தண்ணீர் வசதி இல்லை, அடிக்கடி குடிநீர் கிடைக்காமல் தவித்தோம்," என்று கூறி வாழ்க்கையின் கடினமான நாட்களை பற்றி பகிர்ந்தார் மூர்த்தி.

அச்சமயத்தில் மூர்த்தி-தாயம்மா தம்பதியினருக்கு அஜய், அனிதா என்ற தத்தி தத்தி நடக்கும் வயதில் இரட்டை குழந்தைகளும், சூர்யா எனும் கைக்குழந்தையும் இருந்தனர். குழந்தைகளை நிழலில் கட்டிவைத்து விட்டு வேலைக்குச் செல்வோம் என்று தாயம்மா வேதனையுடன் விவரிக்கிறார்.

2017ம் ஆண்டில், அவர்களுடன் சேர்த்து கொத்தடிமைகளாக இருந்த 12 குடும்பங்கள் அரசு அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். ஆனால், அவர்களின் அவலநிலையை யார் அரசுக்கு தெரிவித்தார்கள் என்பது பற்றி மூர்த்திக்கு தெரியவில்லை. யாரிடமும் பேசக்கூடாது என்று உரிமையாளர் மிரட்டியதால் பயந்து போனதுதான் அவருக்கு நினைவிருக்கிறது.

bonded labour

தாயம்மா- மூர்த்தி

அவர்கள் அங்கிருந்த மீட்கப்பட்ட பிறகு, கடன் வாங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதுடன், கடன் தள்ளுபடி செய்யப்படும், என உறுதியளித்தனர். அவர்கள் மீட்கப்பட்ட பிறகு, மூர்த்தியும் தாயம்மாவும், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான கர்நாடகாவின் முதல் சங்கமான “உதயோன்முகாவின்” ஒரு பகுதியாக மாறினர். மூர்த்தி அதன் செயலாளராக பணியாற்றுகிறார்.

மேலும், மக்களுக்கு அரசின் சலுகைகளை கிடைக்க உதவுகிறார். கொத்தடிமையாக இருந்த தப்பிய மற்றொரு தலைவரான பூர்ணிமாவுடன் தாயம்மா உதயோன்முக கைவினைப் பொருட்களின் தலைவராக உள்ளார். தையல் கற்று, லேப்டாப் பைகள், ஷாப்பிங் பேக்குகள், பிளவுஸ்கள் தைப்பதுடன், மற்ற பெண்களுக்கும் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டுகிறார். மூர்த்தியும் தாயம்மாவும் இப்போது கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹுன்சூரில் வசிக்கிறார்கள். மூர்த்தி தேங்காய் சப்ளை செய்ய ஆர்டர் எடுத்து, வேலை இருக்கும் நாட்களில் 1,500 ரூபாய் சம்பாதிக்கிறார்.

"எங்கள் இருண்ட நாட்கள் முடிந்துவிட்டன. எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். நாங்கள் சம்பாதிக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாழ்க்கை நன்றாக இருக்கிறது," என்றார் மூர்த்தி.

ரஞ்சிதா, ஒடிசா

ரஞ்சிதாவுக்கு 12 வயது இருக்கும் போது, ​​அவரது பெற்றோர் ஒடிசாவில் இருந்து பெங்களூருவில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்குச் சென்றனர். அந்த ஆண்டு மழை பொய்த்ததால், இப்பகுதி வறட்சியை எதிர்கொண்டது மற்றும் வேலை இல்லை. வேறு வழியின்றி ரஞ்சிதா உள்ளிட்ட மூன்று மகள்களையும் உடன் அழைத்துச் சென்றனர். இது தாங்க முடியாத வேலை நிலைமைகள் மற்றும் முதுகு உடைக்கும் வேலைகளுக்கு குழந்தைகளை பிணைக்கும் முடிவு என தெரிந்தும் பிழைப்புக்கு வழியின்றி செய்தனர். அவர்கள் செங்கல் சூளையில் வேலைக்குப் பதிலாக ஒரு தொழிலாளர் முகவரிடமிருந்து ரூ.90,000 பணத்தை பெற்றனர்.

ஒடிசாவில் திறந்த வெளியில் வாழ்ந்த நிலையில், அவர்கள் செங்கள் சூளையில் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்துள்ளனர். அந்த வீட்டுக்குள் நுழையவோ அல்லது வீட்டுக்குள் நடக்கவோ அவரது பெற்றோர்கள் குனித்து கொண்டே தான் செல்ல வேண்டும். களிமண் செங்கற்களை வடிப்பதிலும், சுடுவதிலும் அவரது பெற்றோர்கள் பணியாற்றுகையில், ​​பிள்ளைகள் செங்கற்களை வெயிலில் காயவைக்கச் செய்வார்கள்.

"சூரிய உதயத்திற்கு முன்பே எங்களை எங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றி, இரவு 10 மணி வரை வேலை செய்ய வைப்பார்கள். நாங்கள் வேலை செய்யவில்லை என்றால் மின்சார அதிர்ச்சியைக் கொடுப்போம் அல்லது தோலை உரித்துவிடுவோம் என்று மிரட்டுவார்கள். இதற்குப் பயந்து நானும் என் சகோதரிகளும் முடிந்தவரை பல செங்கற்களை வெயிலில் காயவைப்போம்," என்று ரஞ்சிதா அவரும், அவரது குடும்பமும் சந்தித்த பயங்கரங்களை விவரித்தார்.
bonded labour

ரஞ்சிதா.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ரஞ்சிதாவின் குடும்பத்தினர் உட்பட பலர் கர்நாடக அரசால் மீட்கப்பட்டனர். செங்கள் சூளையின் உரிமையாளர் குழந்தைகளை மறைக்க முயன்றார். ஆனால், உள்ளூர் அதிகாரிகள் அவர்களை அருகிலிருந்த காடுகளில் இருந்து மீட்டு பெற்றோருடன் மீண்டும் சேர்த்தனர். மீட்கப்பட்ட குடும்பங்கள் ஒடிசாவில் குடியமர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் அரசாங்கத்தின் உதவியைப் பெற்றனர். அரசாங்கத்தின் நலன்களைப் பெற உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் உதவியைப் பெற்றனர்.

ரஞ்சிதா ஒரு பள்ளியில் சேர்ந்தார், பின்னர் அருகிலுள்ள நகரத்தில் கல்லூரிக்குச் சென்றார். அவரது படிப்பு செலவுகளுக்காக, அவர் முதலில் ஒரு வீட்டு உதவியாளராக பணிபுரிந்தார். பின், ஒரு அழகுபடுத்துபவர், விற்பனையாளர் மற்றும் பாதுகாப்பு காவலர் என பல வேலைகளை செய்து கல்லுாரி படிப்பை நிறைவு செய்தார். இன்று, விடுதலை செய்யப்பட்ட கொத்தடிமைகள் சங்கத்தின் (RBLA) ஒடிசா அத்தியாயமான ஷ்ரமவாஹினியில் ரஞ்சிதா ஒரு வல்லமைமிக்க தலைவராக உள்ளார். அவர் கொத்தடிமைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதிடுகிறார், விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்.

தமிழில்: ஜெயஸ்ரீ