உங்களின் வாழ்க்கையை நிறைவாக்க ‘தங்கமான 20 விதிகள்’
20 கோல்டன் விதிகளும் வெறும் யோசனைகள் மட்டுமல்ல. இவை வாழ்க்கையின் செழிப்பைத் திறக்கவும், குழப்பங்களுக்கு மத்தியில் சமநிலையைக் கண்டறியவும், நீடித்த அமைதி மற்றும் நோக்கத்தின் உணர்வை வளர்க்கவும் உதவும் காரணிகள்.
நீங்கள் வாழ்வது நிறைவான வாழ்க்கைதானா என்பதை என்றாவது யோசித்தது உண்டா?
‘நிறைவான வாழ்க்கை’ என்பது தொழில் அல்லது வேலையில் மைல்கற்களை அடைவதா? அல்லது செல்வத்தை பெருக்குவதா? - இவையெல்லாம் தற்காலிக திருப்தி மட்டுமே. ஆனால், உண்மையான நிறைவு என்பது மிகவும் ஆழமான ஒன்று. அது நோக்கத்துடன் வாழ்வது, அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்ப்பது மற்றும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டறிவதை பற்றிய ஒன்று.
நாம் எதைச் செய்தாலும் அதை அதிகமாகச் செய்ய, அதிகமாக வைத்திருக்க நம்மைத் தொடர்ந்து வற்புறுத்தும் இந்த நவீன உலகில், உண்மையில் என்ன முக்கியம் என்பதை நாம் எளிதாக மறந்து விடுகிறோம். இருப்பினும், திருப்தி என்பது சமூக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அல்ல. அது உங்களுக்குச் சரியானதாக தோன்றும் ஒரு வாழ்க்கையை உருவாக்குவது. உங்கள் ஆன்மாவுடன் எதிரொலிக்கும் வகையில் உங்கள் மதிப்புகள், செயல்கள் மற்றும் கனவுகளை சீரமைப்பது.
கீழ்கண்ட 20 கோல்டன் விதிகளும் வெறும் யோசனைகள் மட்டுமல்ல. இவை வாழ்க்கையின் செழிப்பைத் திறக்கவும், குழப்பங்களுக்கு மத்தியில் சமநிலையைக் கண்டறியவும், நீடித்த அமைதி மற்றும் நோக்கத்தின் உணர்வை வளர்க்கவும் உதவும் காரணிகள்.

படம்: மெட்டா ஏஐ
நிறைவான வாழ்க்கைக்கான 20 கோல்டன் விதிகள்:
1. உங்களுக்கு உண்மையாக இருங்கள்
நம்பகத்தன்மை என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் மூலாதாரம் ஆகும். உங்கள் பலங்களைத் ஏற்றுக் கொள்வது போலவே, உங்கள் குறைபாடுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள், உங்கள் உண்மையான சுயத்தை சமரசம் இன்றி பிரகாசிக்க விடுங்கள்.
2. ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுங்கள்
நல்ல ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடித்தளம். வழக்கமான உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் தியானம் போன்ற மன நலப் பயிற்சிகளை அன்றாடம் ஆக்கிக் கொள்ளுங்கள்.
3. நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்
நன்றியுள்ள உள்ளம் சாதாரண தருணங்களை அசாதாரண ஆசீர்வாதங்களாக மாற்றுகிறது. தினமும் நன்றி தெரிவிப்பதை ஒரு பழக்கமாக்குங்கள்.
4. உறவுகளை போற்றுங்கள்
நல்ல உறவுகள் வாழ்க்கையை வளப்படுத்துகின்றன. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மற்றவர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க முயற்சி செய்யவும்.
5. தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு வகுப்பறை. உங்கள் பார்வையை விரிவுபடுத்தும் புத்தகங்கள், அனுபவங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றக்கொண்டே இருங்கள்.
6. கருணையைப் பழகிக் கொள்ளுங்கள்
சின்ன சின்ன கனிவான செயல்கள் கூட நேர்மறையான அலைவரிசையை உருவாக்குகின்றன. வார்த்தைகள் மூலமாகவோ அல்லது செயல்கள் மூலமாகவோ, கருணையை உங்கள் இயல்பாக மாற்றுங்கள்.
7. நிகழ்காலத்தை அனுபவித்து வாழுங்கள்
நாம் வாழும் இந்த தருணம்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் இடம். கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பதையோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதையோ தவிர்த்து, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்.
8. அர்த்தமுள்ள இலக்குகளை அமைக்கவும்
நிறைவு என்பது நோக்கமுள்ள வாழ்க்கையிலிருந்து மட்டுமே கிடைக்கும். வெற்றி உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வரையறுத்து, உங்கள் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் இலக்குகளை நோக்கிச் செயல்படுங்கள்.
9. எதிர்பார்ப்புகள் இன்றி கொடுங்கள்
தாராள மனப்பான்மை என்பது மகிழ்ச்சிக்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். உங்கள் நேரம், திறமை மற்றும் வளங்கள் என அனைத்தையும் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பிறருக்கு கொடுங்கள்.
10. தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்
தவறுகள் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். பின்னடைவுகளில் இருந்து கற்றுக்கொண்டு உங்களை மேம்படுத்தவும் புதுமைகளை உருவாக்கவும் அவற்றை சிறந்த வாய்ப்புகளாகப் பயன்படுத்துங்கள்.

11. வாழ்க்கையை எளிமையாக்குங்கள்
உங்களுக்கான இடம், கடமைகள் மற்றும் உங்கள் மனதை ஒழுங்குபடுத்துங்கள். உண்மையிலேயே முக்கியமானவை என்று தோன்றுபவற்றில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற கவனச் சிதறல்களை தவிர்த்து விடுங்கள்.
12. இயற்கையை மதிக்கவும்
இயற்கை உலகத்துடன் இணையுங்கள். வெளியுலகில் நேரத்தைச் செலவிடுங்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, உங்களைச் சுற்றியுள்ள இயற்கை அழகைப் போற்றுங்கள்.
13. ஆர்வத்துடன் இருங்கள்
ஆர்வமே வாழ்க்கையை உற்சாகமாக வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளையும் ஆச்சரியத்துடன் அணுகுங்கள். கேள்விகளைக் கேளுங்கள், தெரியாததை ஆராயுங்கள்.
14. பொருளாதார ஞானத்தைப் பேணுங்கள்
பணம் தான் அனைத்தும் என்பதல்ல. ஆனால் பொருளாதார நிலைத்தன்மை மன அமைதியைத் தரும். புத்திசாலித்தனமாக பணத்தை சேமித்து, கடனைத் தவிருங்கள். பொருட்களை விட அனுபவங்களுக்காகப் பணத்தை செலவிடுங்கள்.
15. மன்னிக்கப் பழகுங்கள்
கோபம் உங்களை கீழிறக்கி விடும். சிறந்த விஷயங்களுக்காக இதயத்தை இலகுவாக்க உங்களையும் மற்றவர்களையும் மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
16. ஆர்வமுள்ள செயல்களை தொடருங்கள்
மகிழ்ச்சியையும் படைப்பாற்றலையும் தூண்டும் செயல்களில் ஈடுபடுங்கள். இந்த முயற்சிகள் ஒரு சாதனை உணர்வையும் நோக்கத்தையும் தர வல்லவை.
17. ஆற்றலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் எங்கு முதலீடு செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் நல்வாழ்வுக்கு உதவாத விஷயங்களுக்கு 'நோ' என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.

படம்: மெட்டா ஏஐ
18. சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள்
பெரிய மைல்கற்களைக் கொண்டாடுவதற்காக காத்திருக்காதீர்கள். சிறிய சாதனைகளையும் ஏற்றுக்கொண்டு மகிழுங்கள்.
19. மன உறுதியுடன் இருங்கள்
வாழ்க்கை உங்கள் வழியில் பல சவால்களை வீசும். தகவமைப்புத் தன்மையுடனும், நம்பிக்கையுடனும், தடைகளை கடக்க உறுதியுடனும் இருப்பதன் மூலம் மன உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
20. ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்லுங்கள்
உங்கள் வாழ்நாளைத் தாண்டி சிந்தியுங்கள். நீங்கள் அக்கறை கொள்ளும் விஷயங்களுக்கு பங்களிக்கவும், மற்றவர்களுக்கு வழிகாட்டவும் அல்லது எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் நீடித்த ஒன்றை உருவாக்குங்கள்.
நிறைவான வாழ்க்கை என்பது முழுமையைப் பற்றியது அல்ல, முன்னேற்றத்தைப் பற்றியது. இந்த 20 விதிகளும் உங்களுக்கு ஒரு திசைகாட்டியாகச் செயல்பட்டு, நோக்கம், மகிழ்ச்சி மற்றும் அர்த்தம் நிறைந்த வாழ்க்கையை நோக்கி உங்களை வழிநடத்தும்.
மூலம்: சானியா அகமது கான்

Edited by Induja Raghunathan