Stock News: தொடர் இறக்கத்தில் இந்திய பங்குச்சந்தை; அதானி, எஸ்பிஐ பங்குகள் கடும் சரிவு!
இந்திய பங்குச்சந்தையானது தொடர்ந்து 2வது நாளாக சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது தொடர்ந்து 2வது நாளாக சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (31/05/2023):
தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சென்செக்ஸ் 250 புள்ளிகளும், நிஃப்டி 18,600 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 341.51 புள்ளிகள் சரிந்து 62,627 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 83.60 புள்ளிகள் சரிந்து 18,550 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணம்:
கடன் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்துள்ளதும், சீனாவின் பொருளாதார தடுமாற்றம் இந்திய பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடன் உச்ச வரம்பிற்கு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தை முதலீடுகள் குறைந்துள்ளன.
மற்றொருபுறம் இந்தியாவின் முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 4 சதவீதமும், மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பங்குகள் 2 சதவீதமும் சரிந்துள்ளது முதலீடுகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
சன் பார்மா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயிண்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
இறக்கம் கண்ட பங்குகள்:
பாரத ஸ்டேட் வங்கி
ஹெச்டிஎஃப்சி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
டாடா ஸ்டீல்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 82.70 ஆக உள்ளது.