Stock News: இந்திய பங்குச்சந்தை உயர்வு: ஆட்டோ, வங்கி, எஃப்எம்சிஜி துறைகளில் முதலீடு அதிகரிப்பு!
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (02/06/2023):
வாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய பக்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 44.53 புள்ளிகள் உயர்ந்து 62,473 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 18,505 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்கக் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான மசோதா மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவு கிடைத்துள்ளது, வர உள்ள கூட்டத்திற்கு பிறகு ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களை மீண்டும் பங்குச்சந்தை முதலீடுகளின் பக்கம் திரும்ப வைத்துள்ளது. இதனால் ஆசிய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இதன் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையானது சற்றே உயர்ந்திருந்தாலும் ஆட்டோ, பேங்கிங் மற்றும் எஃப்எம்சிஜி துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளது சாதகமாக அமைந்துள்ளது. வங்கி துறையைப் பொறுத்தவரை எஸ் பேங்க், ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் உள்ளிட்டவற்றின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன.
குறிப்பாக பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் இந்தியன் பேங்க் ஆகிய வங்கிகளின் பங்கு மதிப்புகள் அதிகரித்துள்ளது பொதுத்துறை வங்கி பங்குகளின் மதிப்பையே ஒரு சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹீரோ மோட்டோகார்ப்
ஹிண்டால்கோ
டெக் மஹிந்திரா
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஆட்டோ
இறக்கம் கண்ட பங்குகள்:
எச்டிஎஃப்சி லைஃப்
கோல் இந்தியா
சன் பார்மா
சிப்லா
ஏசியன் பெயிண்ட்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் அதிகரித்து 82.30 ஆக உள்ளது.
Gold Rate Chennai: மவுசு காட்டும் தங்கம்; இன்று நகை விலை மீண்டும் உயர்வு!