Stock News: 800 புள்ளிகளை எட்டித்தொட்ட சென்செக்ஸ்; நிஃப்டி 22,000-ஐ கடந்தது!
இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (28/03/2024)
இந்திய பங்குச்சந்தையானது இன்று புதிய வரலாற்று உச்சமாக சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிஃப்டி 200 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 648.26 புள்ளிகள் உயர்ந்து 73,669 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 211.45 புள்ளிகள் உயர்ந்து 22,337 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள் என்ன?
அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், உள்நாட்டு சந்தையில் பைனான்ஸ் FMCG, ஐ.டி, மீடியா, மெட்டல், மருந்து மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட நிறுவன பங்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஐசிஐசிஐ வங்கி
விப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
மாருதி சுஸுகி
HCL டெக்
டைட்டன்
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயிண்ட்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து 83.33 ஆக உள்ளது.