Stock News: இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தை!
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (01/06/2023):
கடந்த இரு தினங்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தையானது இன்று சற்றே உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 108.73 புள்ளிகள் உயர்ந்து 62,731 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 37.85 புள்ளிகள் உயர்ந்து 18,572 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம்:
கடன் உச்ச வரம்பை அதிகரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் பங்குச்சந்தை பக்கம் திரும்பியுள்ளது, இந்திய பங்குச்சந்தைக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
அப்பல்லோ மருத்துவமனை
டிவிஸ் லேப்
பிபிசிஎல்
ஹிண்டால்கோ
பஜாஜ் ஆட்டோ
ஏசியன் பெயிண்ட்ஸ்
டாக்டர் ரெட்டி
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இறக்கம் கண்ட பங்குகள்:
கோல் இந்தியா
பார்தி ஏர்டெல்
கோடக் மஹிந்திரா பேங்க்
பிரிட்டானியா
பவர் கிரிட்
மாருதி சுசுகி
கிராசிம்,
என்டிபிசி
இண்டஸ்இண்ட் பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 39 காசுகள் அதிகரித்து 82.36 ஆக உள்ளது.
Gold Rate Chennai: நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி - ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை!