Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Sangeetha vs Geetham ஹோட்டல் சர்ச்சை என்ன? சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சங்கீதா உணவகங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கீதம் நாளிதழ்களில் விளம்பரம் செய்யுமாறும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sangeetha vs Geetham ஹோட்டல் சர்ச்சை என்ன? சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Thursday November 02, 2023 , 2 min Read

சங்கீதா உணவகங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கீதம் நாளிதழ்களில் விளம்பரம் செய்து, லோகோவின் கலர் தீம்களை மாற்றுமாறு சென்னை ’கீதம்’ ஹோட்டல்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சங்கீதா Vs கீதம் ஹோட்டல்:

சங்கீதா மற்றும் சங்கீதா வெஜ் என்ற பெயர்களில் சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் சங்கீதா கேட்டரர்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ் எல்எல்பி நிறுவனம் உணவகங்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்துடன் 2009ம் ஆண்டு முதல் ரஷ்னம் புட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் பங்குதாரர்களாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜூன் 1ம் தேதி 2022ம் ஆண்டு நாவலூர், துரைப்பாக்கம், தி.நகர், மேடவாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய 5 இடங்களில் அமைந்திருந்த சங்கீதா உணவகங்களின் பெயர் கீதம் என மாற்றப்பட்டது.

sangeetha

ஆரம்பத்தில் சங்கீதா, சங்கீதா வெஜ், கீதம், கீதம் வெஜ், சங்கீதம் என மாற்றப்பட்டதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் கருதப்பட்டது. ஆனால், சங்கீதா கேட்டரர் உடனான உரிமையாளர் ஒப்பந்தம் மே 31, 2022 அன்று நிறைவடைந்ததை அடுத்து, ரஷ்னம் புட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் கீதம், கீதம் வெஜ், சங்கீதம் ஆகிய பெயர்களில் உணவகங்களை நடத்தி வந்தது தெரியவந்தது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு:

சங்கீதா கேட்டரர்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ் எல்எல்பி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், எங்களது நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையான சங்கீதா மற்றும் சங்கீதா வெஜ் என்ற பெயர்களைக் காப்பியடித்து எங்களது முன்னாள் உரிமைதாரர்களான ரஷ்னம் புட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் உள்ளிட்டோர் கீதம், கீதம் வெஜ், சங்கீதம், சங்கீதா என்ற பெயர்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும், எங்களுக்குமான உரிம ஒப்பந்தம் ஏற்கெனவே காலாவதியாகி விட்டது” எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது.

மேலும், “தங்களது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், தங்களது விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் ‘சங்கீதா வெஜ்’ என்ற எங்களது வணிக முத்திரையைக் காப்பியடித்து அவர்கள் இதுபோன்ற பெயர்களில் ஹோட்டல்களை நடத்த தடை விதிக்க வேண்டும், என்றும் சங்கீதா உணவகம் சார்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா,

“சங்கீதா ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்த வழக்கைத் தொடர அனைத்து முகாந்திரமும் இருப்பதாகவும், சங்கீதா, சங்கீதா வெஜ் என்ற வணிக முத்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக கீதம், கீதம் வெஜ், சங்கீதம், சங்கீதா என்ற பெயர்களிலோ அல்லது சங்கீதா என்ற பெயரின் முன்போ, பின்போ எழுத்துகளை சேர்த்து ஹோட்டல்களை நடத்தக்கூடாது,'' என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

தனிநீதிபதி உத்தரவிற்கு எதிர்ப்பு:

செப்டம்பர் 22, 2023 அன்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து முன்னாள் உரிமையாளர்களான ரஷ்னம் புட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

sangeetha

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,

“சங்கீதாவின் கலர் தீம் போல் இருந்தால், கீதம் ஹோட்டல் லோகோவின் கலர் தீமை மாற்றத் தயாராக இருப்பதாகவும், சங்கீதா உணவகங்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என விளம்பரங்களை வெளியிடுவார்கள்,”என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கீதம் உணவகங்களின் உரிமையாளர்கள் தங்கள் லோகோவின் வண்ணத் திட்டத்தை மாற்றுவதோடு, சங்கீதா உணவகத்திற்கும் தங்களது தொடர்பில்லை என இரண்டு விளம்பரங்களை வெளியிட்ட பிறகு, சென்னை நகரம் முழுவதும் 'கீதம்' என்ற பிராண்டின் கீழ் தங்கள் உணவகங்களை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.