2025-ஐ உங்களின் சிறந்த ஆண்டாக மாற்றப் போகும் 8 பழக்கங்கள்!
2025-ல் தொடங்கும் வேளையில் ஓர் ஆரோக்கியமான, மகிழ்ச்சிகரமான அதேநேரம் ஆக்கப்பூர்வமான ஒரு வாழ்வை உருவாக்கக் கூடிய 8 பழக்கங்களை இங்கே பார்க்கலாம்.
இது டிசம்பர் 31, 2025 என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். திரும்பிப் பார்க்கும்போது ஆண்டு முழுவதும் உங்களுக்கு நிறைவானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் நீங்கள் பெருமைப்படும் விதமாகவும் உணர்கிறீர்கள் என்றால் எப்படி இருக்கும்?
இது எப்படி சாத்தியம் ஆகும்? இதற்கான விடை, உங்களின் அன்றாட வாழ்க்கையின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சின்னச் சின்ன பழக்க வழக்கங்களில்தான் இருக்கிறது.
2025-ல் தொடங்கும் வேளையில் ஓர் ஆரோக்கியமான, மகிழ்ச்சிகரமான அதேநேரம் ஆக்கப்பூர்வமான ஒரு வாழ்வை உருவாக்கக் கூடிய 8 பழக்கங்களை இங்கே பார்க்கலாம்.
1) உங்கள் நாளை ஒரு நோக்கத்துடன் தொடங்குங்கள்
அதிகாலையில் உங்களுடைய தொடக்கம்தான் அந்த ஒட்டுமொத்த நாளுக்கான மனநிலையை தீர்மானிக்கிறது. கவனத்துடனும், நோக்கத்துடனும் கூடிய காலைப் பொழுது செயல் திறனையும் மனத் தெளிவையும் அதிகரிக்கும்.
தூங்கி எழுந்த பிறகு முதல் ஒரு மணி நேரத்துக்கு உங்கள் மொபைல் போனை பார்ப்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் இலக்குகள் அல்லது எண்ணங்களை பதிவு செய்ய 10 நிமிடங்கள் செலவிடுங்கள். நீங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் மூன்று விஷயங்களைப் பட்டியலிடுவதன் மூலம் நன்றியுணர்வைப் பயிற்சி செய்யுங்கள்.
2) தினமும் உடலுக்கு வேலை கொடுங்கள்!
வழக்கமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனநலத்தையும் மேம்படுத்துகிறது.
30 நிமிட நடை, யோகா அல்லது ஜிம் பயிற்சியை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்த்து குறைந்தது 5 நிமிடம் இடைவெளை கொடுக்கவும். ஒரு மாற்றத்துக்காக நடனம் அல்லது மலையேற்றம் போன்ற புதிய செயல்பாட்டை முயற்சிக்கலாம்.
3) உடலுக்கு தேவை ஊட்டச்சத்து
உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் உணவு மட்டுமே எரிபொருள். நன்றாக சாப்பிடுவது ஆற்றல், கவனம் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நீரேற்றத்துடன் தினமும் குறைந்தது 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீரை பருகவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளுக்கு கட்டுப்பாடு அவசியம்.
4) கவனம் என்னும் கலை
கவனச்சிதறல்கள் நிறைந்த இந்த நவீன உலகில், கவனம் செலுத்துவதே ஒரு பெரிய கலை. இது குறைந்த நேரத்தில் அதிக செயல்பாடுகளை செய்ய உதவுகிறது.
இதற்கு Pomodoro உத்தி கைகொடுக்கும். அதாவது, 25 நிமிட வேலை, அதைத் தொடர்ந்து 5 நிமிட இடைவெளி. அலைபேசியில் தேவையற்ற நோட்டிபிகேஷன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் கவனச்சிதறல்களைக் குறைக்கலாம். ஆழ்ந்த வேலை மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.
5) உறவுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்
வலுவான உறவுகள், உணர்வுபூர்வ ஆதரவு, மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்துகின்றன. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்குங்கள். அவர்களுடனான உரையாடல்களின் அலைபேசிக்கு ஓய்வு கொடுங்கள்.
6) ஓய்வுக்கு முன்னுரிமை
ஓய்வு என்பது தூக்கம் மட்டுமே அல்ல. அது உங்களை நீங்கலே ரீசார்ஜ் செய்துகொள்ள மிக அவசியமான ஒன்று.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நல்ல தூக்கம் மற்றும் ஓய்வு நேரம் அவசியம். இரவில் 7-9 மணிநேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
சோர்வை தவிர்க்க பகலில் அவ்வப்போது சிறிய இடைவேளைகள் அவசியம்.
7) கவனமும் நன்றியுணர்வும்
கவனத்துடன் இருப்பது மனதை இலகுவாக வைத்திருக்க உதவுகிறது. அதேநேரம், நன்றியுணர்வு என்பது வாழ்வின் நேர்மறை அம்சங்களை நோக்கி நம்முடைய கவனத்தை திருப்புகிறது.
மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான தியானத்துக்காக தினமும் 5-10 நிமிடம் செலவிடுங்கள்.
8) வாழ்க்கை முழுவதும் கற்க தயாராக இருங்கள்
உங்கள் அறிவை விரிவுபடுத்துவது உங்கள் மனதை கூர்மையாக்கி புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது.
உங்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளில் மாதம் ஒரு புத்தகத்தைப் படியுங்கள். ஆன்லைன் கோர்ஸ்களை தேர்வு செய்யவும் அல்லது ஒர்க்ஷாப்களில் கலந்து கொள்ளவும். உங்கள் துறையில் இருக்கும் சிந்தனையாளர்கள் அல்லது அது தொடர்பான பாட்காஸ்ட்களைப் பின்தொடரவும்.
பழக்கவழக்கங்கள்தான் நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றன. இந்த எட்டு பழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்வதன் மூலம், அடுத்த ஆண்டு இறுதியில் உங்களால் நிறைவாக, மகிழ்ச்சியாக உணர முடியும்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த மாற்றங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை பார்ப்பீர்கள்.
- மூலம்: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan