Chandrayaan 2 நிலவில் இருந்து அனுப்பியுள்ள முதல் புகைப்படம்!
நிலவின் அழகிய புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது சந்திராயன் 2 என இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் சந்திராயன் 2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது என்றும் இன்னும் சில தினங்களில் நிலவின் தென்பகுதியில் சந்திராயன் 2 தரை இறங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில் இப்பொழுது நிலவின் அழகிய புகைப்படத்தையும் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இதற்குமுன்பே சந்திராயன் 2வில் செலுத்தப்பட்டுள்ள விக்ரம் லேன்டர் பூமியின் சிறந்த புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருந்தது. அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி 5000 கிமீ உயர்நிலையில் இருந்து சந்திராயன் 2வில் செலுத்தப்பட்டிருக்கும் L14 கேமரா பூமியின் புகைப்படத்தை எடுத்து அனுப்பியது.
இப்பொழுது நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, 2650 கிமீ உயர்நிலையில் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திராயன்-2 வெளியிட்டுள்ள நிலவின் முதல் புகைப்படத்தில் மரே ஓரியண்டல் பேசின் மற்றும் அப்போலோ எரிமலைகள் தென்பட்டுள்ளன.
இஸ்ரோ வின் அறிக்கை படி செப்டம்பர் 7 ஆம் தேதி நள்ளிரவு 1.55 மணி அளவில் சந்திராயன் தென் துருவ பகுதியில் தரையிறங்கும்.
சரி, தென் துருவ பகுதியில் சந்திராயன் 2 தரையிறங்கிய பிறகு என்ன ஆகும்?
விக்ரம் லேன்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிவிட்டால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவைத் தொடர்ந்து நான்காவதாக இடம்பெறப்போவது இந்தியா தான்.
தரையிறங்கிய பின்பு விக்ரம் லேன்டரில் இருந்து பிரக்யான் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ள துவங்கும், சந்திர நாள் கணக்குப்படி ஒரு நாள் முழுவதும் தன் ஆய்வை மேற்கொள்ளும்; பூமியின் நாள் கணக்கை பொறுத்தவரை 14 நாட்களாகும். ஆர்பிட்டர் ஒரு வருடத்திற்கு அங்கே தனது வேலையை செய்து வரும்.
சந்திராயன்-2 ஆர்பிட்டர், லேன்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்டது. அதில் மொத்தத்தில், 13 தரவுகள் உள்ளனர், ஆர்பிட்டரில் எட்டும், விக்ரம் லேன்டரில் மூன்றும் மற்றும் பிரக்யான் 2 தரவுகளையும் கொண்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில்: மஹ்மூதா நௌஷின்