Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நாளை முதல் சென்னையில் ஓலா, உபர் காலவரையற்ற வேலை நிறுத்தம் - ஓட்டுனர்களின் கோரிக்கைகள் என்ன?

பிப் 1ம் தேதி (நாளை முதல்) ஓலா, உபர் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஆட்டோ, கேப் ஓட்டுநர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். காலவரையற்ற இந்த வேலைநிறுத்த அறிவிப்பால், பெரும்பாலான சென்னை மக்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை முதல் சென்னையில் ஓலா, உபர் காலவரையற்ற வேலை நிறுத்தம் - ஓட்டுனர்களின் கோரிக்கைகள் என்ன?

Friday January 31, 2025 , 3 min Read

ஓலா, உபர் மற்றும் ரேபிடோ போன்ற ரைடு - ஹெய்லிங் சேவைகளை நம்பித்தான் சென்னையில் பல மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றே கூறலாம். ஏனென்றால், அவசர நேரத்தில் பொது அல்லது சொந்த வாகனப் போக்குவரத்தில் செல்ல முடியாத சூழ்நிலையில், உடனடியாக அவர்கள் நாடுவது இந்த ஆஃப்களைத்தான்.

அதில், ஏற்கனவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அது தங்களுக்கு கட்டுப்படியாகுமா அல்லது வேண்டாமா என முடிவு செய்யும் வசதி மக்களுக்கு உள்ளது. இதனால் கூடுதல் கட்டணம் கேட்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிக்காரர்களிடம் அவர்கள் வாக்குவாதம் செய்யத் தேவை இருப்பதில்லை. இதனாலேயே, இந்த ரைடு-ஹெய்லிங் சேவைகளுக்கு சென்னையில் வரவேற்பு அதிகம்.

ஆனால், பிப்ரவரி 1 முதல் (அதாவது நாளை முதல்) சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது, இந்த சேவைகளை மட்டுமே நம்பி இருக்கும் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களான பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம், என்ற போதும், தங்களது இந்த வேலை நிறுத்தத்திற்கான நியாயங்களை காரணங்களாக எடுத்துக் கூறியுள்ளனர் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள்.
ola

உயர் கமிஷன்களால் வருவாய் பாதிப்பு

ஓலா மற்றும் உபர் நிறுவனங்களின், 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான உயர் கமிஷன்கள் தங்கள் வருவாயைக் கணிசமாகக் குறைத்ததே இந்த போராட்டத்திற்கு முதல் காரணம், என அவர்கள் கூறுகின்றனர்.

அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், கட்டண திருத்தத்திற்கான நீண்டகால கோரிக்கை 12 ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ளதாகவும், மாநில அரசு அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அவர்களது குற்றச்சாட்டுகளில் ஒன்றாக உள்ளது.

புதிய கட்டமைப்பின் கீழ், முதல் 1.8 கி.மீ.க்கு அடிப்படை கட்டணம் ரூ.50 ஆகவும், அதைத் தொடர்ந்து கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.18 ஆகவும் அதிகரிக்கும். முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நிமிடத்திற்கு ரூ.1.50 ஆகவும், இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான பயணங்களுக்கு 50% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.

Ola share cab

நியாயமான ஊதிய கட்டமைப்புகள் தேவை

நம்ம யாத்ரி மற்றும் டாக்ஸினா போன்ற ரைடு-ஹெய்லிங் நிறுவனங்கள், சந்தா அடிப்படையிலேயே தங்களது ஓட்டுநர்களிடம் தினமும் ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்கின்றன, இதனால் ஓட்டுநர்களே தங்களது பயணிகளிடமிருந்து பெறும் முழு கட்டணத்தையும் வருமானமாக வைத்துக் கொள்ள முடிகிறது.

ஆனால், இவர்களில் இருந்து மாறுபட்டு, ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஒரு சவாரிக்கு 25% வரை கமிஷனை கழித்துக் கொண்டு, மீதியைத்தான் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தங்களது உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர் ஓட்டுநர்கள்.

 

இதனால், நியாயமான ஊதிய கட்டமைப்புகள் மற்றும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மையமாகக் கொண்ட கோரிக்கைகளுடன், இந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, ஓலா மற்றும் உபர் ஆப்'பின் கீழ் செயல்பட்டு வரும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

uber

மற்ற ரைடு-ஹெய்லிங் ஆப்கள்

ஓலா மற்றும் உபர் என இந்த இரண்டு ஆப்களைத் தாண்டி, சென்னையில் மேலும் சில ரைடு-ஹெய்லிங் ஆப்கள் உள்ளன. ரேபிடோ, நம்ம யாத்ரி மற்றும் டாக்ஸினா போன்ற இந்தத் தளங்களில் இயங்கும் ஓட்டுநர்கள் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தங்களது சேவையைத் தொடருவார்கள், என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், நம்ம யாத்ரி செயலி டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் நெறிமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் பயணங்களின் எண்ணிக்கை, சவாரி தேடல்கள் மற்றும் ஓட்டுநர்களின் வருவாய், பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் பிறவற்றைப் பற்றிய விரிவான தரவையும் வழங்குகிறது.

rapido

இதேபோல், ரேபிடோவும் வழக்கம் போல் செயல்படுவதன் மூலம் அவர்களின் கேப்டன்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான தனது ஆதரவைத் தொடரும், என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும்,

“எங்களுடையது நிலையான சந்தா அடிப்படையிலான மாடல். இது அதிக கமிஷன்களில் இருந்து கேப்டன்களை விடுவிக்கிறது. அதோடு, மிகவும் நிலையான வருவாய் கட்டமைப்பை உறுதி செய்வதாகவும் உள்ளது. இந்த மாதிரியான சவாலான சூழ்நிலைகளில்கூட எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி மற்றும் நம்பகமான போக்குவரத்து விருப்பங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் ரைடர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம். ரேபிடோவுடன் தொடர்ந்து பயணத்தைத் திட்டமிட அவர்களை ஊக்குவிக்கிறோம்," என ரேபிடோ செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.