ஆசியாவின் கோடீஸ்வர தலைநகரம் ஆன 'மும்பை' - பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி சாதனை!
ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் என்ற பெருமையை மும்பை அடைந்துள்ளது. இதன் மூலம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் என்ற பெருமையை மும்பை அடைந்துள்ளது. இதன் மூலம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை 'ஆசியாவின் பில்லியனர் தலைநகரம்' ஆக மாறியுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சமீபத்தில் வெளியான 'ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2024' (Hurun Research 2024 Global Rich List) அறிக்கையின் படி,
வரலாற்றிலேயே முதன் முறையாக 92 பில்லியனர்களுடன் மும்பை பெய்ஜிங்கை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலமாக செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ச்சியின் மையமாக மும்பை தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
ஹுருன் பட்டியலின் படி, பெய்ஜிங்கில் 91 பில்லியனர்கள் உள்ளனர். அதுவே இந்தியா அளவில் 271 பில்லியனர்கள் மட்டுமே உள்ள நிலையில், சீனாவில் இந்த எண்ணிக்கை 814 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் யார் முதலிடம்?
அதிக பில்லியனர்களைக் கொண்ட முதல் நகரம் நியூயார்க் ஆகும். இங்கு 119 பில்லியனர்கள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் 97 கோடீஸ்வரர்களுடன் லண்டன் 2வது இடத்திலும், 92 கோடீஸ்வரர்களுடன் மும்பை மூன்றாவது இடத்திலும் உள்ளது.
மும்பையில் எத்தனை புதிய கோடீஸ்வரர்கள் உள்ளனர்?
இந்த ஆண்டு மட்டும் மும்பையைச் சேர்ந்த 26 கோடீஸ்வரர்கள் புதிதாக இடம்பிடித்துள்ளனர். அதே சமயம், பெய்ஜிங் 18 கோடீஸ்வரர்களை இழந்தது, பட்டியலில் பின்னடைவை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது.
மும்பை கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு:
மும்பையில் உள்ள கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து கடந்த ஆண்டை விட 47 சதவீதம் அதிகரித்து 445 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ. 37 லட்சம் கோடி) உள்ளது. மறுபுறம், பெய்ஜிங் பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 265 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும்.
செல்வம் அதிகரிக்க காரணமான துறைகள்?
மும்பையில் எனர்ஜி மற்றும் மருந்துத் துறைகளில் செல்வம் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகளில் தொழில் செய்து வரும் முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.
உலகளாவிய பணக்காரர்கள் பட்டியல்?
இந்திய கோடீஸ்வரர்கள் உலக தரவரிசையில் பின்தங்கியுள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார். கௌதம் அதானி 8 இடங்கள் முன்னேறி 15வது இடத்தையும், HCL தலைவர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் 16 இடங்கள் முன்னேறி 34வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சீரம் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த சைரஸ் எஸ்.பூனாவாலா 82 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9 இடங்கள் சரிந்து 55வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சர்வதேச பொருளாதார சவால்களை மீறி, இந்தியாவின் செல்வம் கடந்த ஆண்டை விட 51 சதவீதம் அதிகரித்துள்ளது.