Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தாயை இழந்த வடமாநிலப் பெண்ணை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்கும் மதுரை அரசு மருத்துவமனை ஊழியர்கள்!

வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு பார்க்காமல் மனிதர்களை நேசிக்கும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமீபத்தில் மதுரையில் நடந்த திருமணம் ஒன்று நிரூபித்துக்காட்டியுள்ளது.

தாயை இழந்த வடமாநிலப் பெண்ணை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்கும் மதுரை அரசு மருத்துவமனை ஊழியர்கள்!

Monday June 12, 2023 , 3 min Read

வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு பார்க்காமல் மனிதர்களை நேசிக்கும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமீபத்தில் மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நிரூபித்துக்காட்டியுள்ளது.

மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் இணைந்து வடமாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாயை இழந்த வடமாநில பிள்ளைகள்:

மதுரையைச் சேர்ந்த ரொஸ்பெக் என்பவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது உடன் பணிபுரிந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் டெல்லி சென்று அங்குள்ள உள்ள ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து சந்தோஷமாக புது வாழ்க்கையை தொடங்கி உள்ளனர்.

இந்த தம்பதிக்கு ரீட்டா என்ற மகளும், அலெக்ஸ் என்ற மகனும் பிறந்துள்ளனர். காலப்போக்கில் ரொஸ்பெக்கிற்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

Rita

இதனால் மனமுடைந்து போன ரொஸ்பெக், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்கு வந்துள்ளார். ஆனால், மதுரை ரயில் நிலையம் வந்த உடனேயே ரொஸ்பேக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகியுள்ளார்.

குழந்தைகள் அலெக்ஸ், ரீட்டா இருவரும் ஆரம்பம் முதலே டெல்லியில் வசித்து வந்ததால் தமிழ் மொழி தெரியாது. இதனால் யாரிடமும் உதவிகோர முடியாமல் தவித்து வந்துள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு அங்கிருந்த இந்தி தெரிந்த நபர்கள், குழந்தைகளின் சோகமான கதையைக் கேட்டு உதவ முன்வந்துள்ளனர்.

அவர்கள் உதவியின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர்களது தாய் ரொஸ்பெக்கை சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிரமான காசநோய் தொற்று இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள், ரொஸ்பெக்கை, காசநோய்க்கு பிரத்தியேக சிகிச்சை வழங்கக்கூடிய தோப்பூர் நெஞ்சக மருத்து மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

அரசு மருத்துவர்களின் மனிதநேயம்:

தோப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரொஸ்பெக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொழியும் தெரியாமல், உறவுகளும் இல்லாமல் ஒரே ஒரு துணையாக இருந்த தாயையும் இழந்து வாடிய குழந்தைகளை தோப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அரவணைத்தனர்.

மேலும், தாயைப் போலவே பிள்ளைகள் இருவருக்கும் காசநோய் இருந்ததை அடுத்து முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளனர். இருவரையும் மருத்துமவனையில் தங்க வைத்து 8 மாதங்கள் சிகிச்சை வழங்கி அந்த நோயில் இருந்து மீட்டனர். இந்த சிகிச்சை காலத்தில் மருத்துவர்கள், பணியாளர்கள் தங்கள் பிள்ளைகளை போல் காட்டிய பாசம், பராமரிப்பால் அந்த குழந்தைகள் தாயை இழந்த வலி தெரியாமல் அவர்களுடன் நெருக்கமாகிவிட்டனர். மருத்துவர்களின் பாசமும், அரவணைப்பும் குழந்தைகளுக்கும் தோப்பூர் அரசு மருத்துவமனையே சொந்த வீடாக உணர வைத்துள்ளது.

Rita

நோய் குணமடைந்த பின்னர் குழந்தைகள் இருவரும் அரசு விடுதியில் தங்கி படிக்க வந்துள்ளனர். இருப்பினும், விடுமுறை தினங்களை தங்கள் வீடாக கருதும் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கழித்து வந்துள்ளனர்.

ரீட்டாவிற்கு தற்காலிக வேலை:

ரீட்டா 10-ம் வகுப்பு முடித்து 18 வயது முடிந்த நிலையில் அவர், மீண்டும் தோப்பூர் அரசு மருத்துவமனைக்கே வந்துவிட்டார். அவர், வேறு எங்கும் போக விருப்பமில்லாமல் மருத்துவமனையிலே தங்க அடம்பிடித்தார்.

Rita

அவரின் பாசத்தில் நெகிழ்ந்துப்போன மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி காசநோயாளிகளுக்கு உதவும் தற்காலிக பணி ஒன்று போட்டுக்கொடுத்து மருத்துவமனையிலே தங்கி பணிபுரிவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

தற்போது ரீட்டாவுக்கு வயது 22 வயது ஆன நிலையில், அவருக்கு திருமணம் செய்து வைக்க மருத்துமனை மருத்துவர்கள், பணியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது ரீட்டாவின் தம்பி அலெக்ஸ் ஐடிஐ-யில் படித்து வருகிறார்.

வடமாநில பெண்ணுக்கு திருமணம்:

ரீட்டாவிற்கும் மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வரும் ஜோசப் என்ற இளைஞருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஜோசப்பும் ரீட்டாவைப் போலவே தாய், தந்தையை இழந்தவர். இந்த இளம் ஜோடிக்கும் வரும் 14ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

மருத்துவமனையில் ரீட்டா, அவரது தம்பியுடன் பழகிய நோயாளிகள், மற்றவர்களை திருமண நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்துமாறு தோப்பூர் மருத்துவர்கள், பணியாளர்கள் திருமண அழைப்பிதழ் அச்சடித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும், பணியாளர்களும் மணப்பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பதோடு சீர்வரிசை பொருட்களையும் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். வீடு கட்டுவதற்காக அவனியாபுரம் அருகே வளையங்குளத்தில் ஒன்றரை சென்ட் பிளாட், 6 பவுன் நகை, கட்டில், பீரோ வாங்கி வைத்துள்ளனர்.

Rita

தோப்பூர் மருத்துவமனை மருத்துவர்களும், பணியாளர்களும் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்ததோடு, இன்று திருமணம் செய்து வைக்கும் அளவிற்கு வந்துள்ளதற்கு மதுரை அரசு மருத்துமவனை 'டீன்' ரத்தினவேலு முக்கிய பங்குவகித்துள்ளார்.

இதுகுறித்து டீன் ரத்தினவேலு பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,

''நோயாளிகளை எந்தளவுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நேசிக்கிறோம் என்பதற்கு 'ரீட்டா'விற்கு அமையப்போகிற திருமண வாழ்க்கை ஒரு உதாரணம்,” எனத் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனை என்றாலே நோயாளிகளை சரியாக கவனிக்கமாட்டார்கள், அக்கறை செலுத்தமாட்டார்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக பதித்துள்ள இந்த தருணத்தில், தாயை இழந்து மொழி தெரியாமல் தவித்த இரண்டு குழந்தைகளை அரவணைத்து வளர்த்து, படிக்க வைத்ததோடு இன்று திருமணம் செய்து கொடுக்கும் அளவிற்கு மனிதநேயத்துடன் செயல்பட்ட தோப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.