Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: உச்சம் தொடும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு

ஆபரணத் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொடும் வகையில் உயர்ந்த வண்ணம் உள்ளது, நகை வாங்க விரும்பும் மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Chennai: உச்சம் தொடும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு

Saturday September 21, 2024 , 2 min Read

ஆபரணத் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொடும் வகையில் உயர்ந்த வண்ணம் உள்ளது, நகை வாங்க விரும்பும் மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், ஏற்கெனவே தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சாதகமான சூழலாகப் பார்க்கப்படுகிறது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.6,885 ஆகவும், சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.55,080 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 உயர்ந்து ரூ.7,511 ஆகவும், சவரன் விலை ரூ.528 உயர்ந்து ரூ.60,088 ஆகவும் இருந்தது. தற்போது, தங்கம் விலை மிகவும் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (21.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.6,960 ஆகவும், சவரன் விலை ரூ.600 உயர்ந்து ரூ.55,680 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து ரூ.7,593 ஆகவும், சவரன் விலை ரூ.656 உயர்ந்து ரூ.60,744 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் சனிக்கிழமை (21-9-24) 1 கிராம் வெள்ளி விலை 50 பைசா உயர்ந்து ரூ.98 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 உயர்ந்து ரூ.98,000 ஆகவும் விற்பனையாகிறது.

gold rate chennai

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை புதன்கிழமை குறைத்துள்ளது. இது, சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் எழுச்சி நிலவ, மறுபக்கம் தங்கம் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. அதேபோல், உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்தப் போக்கு நீடிக்கலாம் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,960 (ரூ.75 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.55,680 (ரூ.600 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,593 (ரூ.82 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,744 (ரூ.656 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,960 (ரூ.75 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.55,680 (ரூ.600 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,593 (ரூ.82 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,744 (ரூ.656 உயர்வு)


Edited by Induja Raghunathan