தக்காளி, வாழைப்பழங்கள் வாங்கி குவித்த இந்தியர்கள்: 2021ல் அதிகம் ஆர்டர் செய்தது என்னென்ன?
2021ம் ஆண்டு கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் மக்கள் கூடுமான வரையில் வெளி இடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வந்தனர். மளிகை மற்றும் காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக்கூட ஆன்லைன் மூலமாகவே வாங்கினர். இதனால் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
2021ம் ஆண்டை பொறுத்தவரை ’ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’ மூலமாக சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கிற்கு வாழைப்பழங்களையும், ஸ்பெயின் தக்காளி திருவிழாவை 11 ஆண்டுகள் நடத்தத் தேவையான அளவிற்கு டன் கணக்கில் தக்காளிகளையும் இந்தியர்கள் வாங்கிக் குவித்துள்ளது தெரியவந்துள்ளது.
2021ம் ஆண்டு கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் மக்கள் கூடுமான வரையில் வெளி இடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வந்தனர். மளிகை மற்றும் காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக்கூட ஆன்லைன் மூலமாகவே வாங்கினர். இதனால் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி, கொரோனா காலக்கட்டத்தில் மளிகைப் பொருட்கள், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக தனது ’எக்ஸ்பிரஸ்’ மளிகை விநியோகச் சேவை Instamart-யை தொடங்கியது. முதலில் இரண்டு நகரங்களில் தொடங்கப்பட்ட இந்த சேவை, தற்போது 18 நகரங்கள் வரை விரிவடைந்துள்ளது.
தற்போது ஸ்விக்கி 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான “ஸ்டாட்ஈட்டிக்ஸ்டிக்ஸ்” அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 2021ம் ஆண்டு மக்கள் தங்கள் தளத்தில் ஆர்டர் செய்த உணவுகள், காய்கறி மற்றும் பழங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
டாப் ஆர்டரில் தக்காளி, வாழைப்பழம்:
Instamart மூலமாக 2021 ம் ஆண்டு மட்டும் 28 மில்லியன் பழங்கள் மற்றும் காய்கறிகளை இந்திய மக்கள் வாங்கியுள்ளனர்.
முதல் 5 இடங்களில் உள்ள தக்காளி, வாழைப்பழங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த 30 நிமிடங்களுக்குள் அவர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இந்திய மக்கள் ஆர்டர் செய்த தக்காளியை வைத்து ஸ்பெயின் நாட்டில் பிரபலமான தக்காளி திருவிழாவை 11 ஆண்டுகளுக்கு நடத்திவிடலாம் என்றால் பார்த்துக்கோங்க.
இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்யப்பட்ட வாழைப்பழங்களை குவித்து வைத்தால் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2.6 மடங்கு அதிக உயரத்திற்கு இருக்குமாம். அந்த அளவிற்கு வாழைப்பழங்களை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலமாக ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர்.
சிப்ஸ், சாக்லெட், ஐஸ்கீரிமிற்கு அடிமையான இந்தியர்கள்:
நூடுல்ஸைப் பொறுத்தவரை 14 லட்சம் உடனடி நூடுல்ஸ் பாக்கெட்டை ஸ்விக்கி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. 31 லட்சம் சாக்லெட் பாக்கெட்டுகள், 23 லட்சம் ஐஸ் க்ரீம்கள், 61 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகளை ஸ்விக்கி டெலிவரி செய்துள்ளது. இந்த லிஸ்டில் இரவு 10 மணிக்கு மேல் ஆர்டர் செய்யப்பட்ட தீனி வகையில் சிப்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.
உடனடித் தேவை என ஆர்டர் செய்யப்பட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Band-aid, 55 ஆயிரம் பேக் டயப்பர்கள், 3 லட்சம் பேக் சானிடரி நாப்கின்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு 15-30 நிமிடங்களுக்குள் ஸ்விக்கி நிறுவனம் டெலிவரி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் கொரோனாவுக்கு எதிரான போரை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்சம் முகக்கவசம், 4 லட்சம் சோப்புகள், ஹேண்ட்வாஷ் ஆன்லைன் ஆர்டர்களாக பெறப்பட்டு உடனடி டெலிவரி செயப்பட்டுள்ளது.
ஸ்விக்கி ஜீனி:
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை பிக் அப் அண்ட் டிராப் செய்வதற்காக ஸ்விக்கி நிறுவனம் ‘ஸ்விக்கி ஜீனி’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நகரத்துக்குள் எந்தப் பொருளையும், எங்கிருந்தும், எங்கும் ஸ்விக்கி நபர்களால் டெலிவரி செய்ய முடியும்.
முதலில் பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த சேவை, தற்போது இந்தியா முழுவதும் உள்ள 68 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஸ்விக்கியின் உணவு டெலிவரியைப் போல இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதுவரை ஜீனி ஆர்டர்களிலேயே உணவுப்பொருட்கள் மட்டும் தோராயமாக 48 சதவீதம் ஆகும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த ஆர்டர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை வாடிக்கையாளர்கள் தங்களது செல்லப்பிராணிகளுக்கு வாங்கிய உணவு என்பது தான்.
2021 ஏப்ரல்- ஜூன் காலகட்டம் 2ம் அலை தீவிரமாக இருந்த சமயத்தில், ஒரு நாளுக்கு 600 சாப்பாடுகளை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக டெலிவரி செய்துள்ளது. கொரோனா வாரியர்களாக களப்பணியாற்றி சத்ய சாய் டிரஸ்ட், ஹையாட் ரீஜென்சி டெல்லி, அபியுத்தனம் சொசைட்டி, பாரிய உணவகங்கள், வோக் கிச்சன்கள் மற்றும் வீட்டு சமையல்காரர்கள் மற்றும் “சேவா” சமையலறைகள் போன்றவர்கள் தயாரித்த உணவுகளை ஸ்விக்கி ஜெனி டெலிவரி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அலையின் போது குணமடைந்த கோவிட்-19 நோயாளிகளுக்குத் தேவையான மருத்து பொருட்களை டெலிவரி செய்தது 288.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பெங்களூருவைச் சேர்ந்த ஸ்விக்கி ஜீனி டெலிவரி பார்ட்னர் ஒருவர், ஆக்ஸிஜன் ஃபிலோ மீட்டரை சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் சென்று டெலிவரி செய்துள்ளார். உணவை பொறுத்தவரை 55.5 கி.மீ எடுத்துச்சென்று டெலிவரி செய்துள்ளது. இந்த இரண்டுமே பெங்களூருவில் நடந்துள்ளது. குறைந்தபட்ச தூரமாக 200 மீட்டரில் டெலிவரி செய்துள்ளது.