Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

PhonePe மற்றும் GPay-வில் யுபிஐ ஐடியை சேர்ப்பது, நீக்குவது எப்படி? எளிய விளக்கம்!

பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அதனை நிர்வகிக்க முடியும். பயனர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் யுபிஐ ஐடி இருக்கும். அதை புதிதாக மாற்றவும், நீக்கவும் முடியும். அதற்கான எளிய வழிகளை படிப்படியாக பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான சில்லறை அளவிலான பண பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு பிரதான காரணமாக இருப்பது போன் பே, கூகுள் பே போன்ற டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதி சார்ந்த சேவையை வழங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான்.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் புரட்சிக்கு அடிப்படையாகவும் யுபிஐ இயங்கி வருகிறது. இதனை இந்திய நிதித்துறை அண்மையில் தெரிவித்திருந்தது. 

இந்த சூழலில் யுபிஐ சேவையை பயன்படுத்தி வரும் பயனர்கள் போன் பே மற்றும் கூகுள் பேவில் தங்களது யுபிஐ ஐடிகளை நிர்வகிக்க முடியும். இந்த ஐடியை கொண்டுதான் யுபிஐ-யின் இயக்கம் இருக்கும். பெரும்பாலும் இது யுபிஐ சேவை நிறுவனங்கள் Default ஆக வழங்கும் ஐடி-களாக தான் இருக்கும்.

UPI gateway

போன் பே மற்றும் கூகுள் பேவில் யுபிஐ ஐடியை சேர்ப்பது, நீக்குவது எப்படி? எளிய விளக்கம். பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அதனை நிர்வகிக்க முடியும். பயனர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் யுபிஐ ஐடி இருக்கும். அதை புதிதாக மாற்றவும், நீக்கவும் முடியும். அதற்கான எளிய வழிகளை படிப்படியாக பார்ப்போம். 

ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது யுபிஐ ஐடி கேட்கப்படும். பயனர்களுக்கு Default ஆக கொடுக்கப்படும் யுபிஐ ஐடி எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளாத வகையில் இருந்தால் அதை தங்களுக்கு ஏற்ற வகையில் வகையில் மாற்றிக் கொள்ளலாம். 

upi

PhonePe-வில் UPI ஐடியை மாற்றுவது எப்படி? 

  • போன் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும்
  • அதில் பயனர்கள் தங்கள் ப்ரோபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும் 
  • அதில் யுபிஐ செட்டிங்ஸ் தேர்வு செய்ய வேண்டும் 
  • இங்கு பயனர்கள் தங்களது யுபிஐ ஐடியை நிர்வகிக்க முடியும். புதிய ஐடியை சேர்க்கவும், பழைய ஐடியை நீக்கவும் முடியும் 
upi

கூகுள் பே-வில் யுபிஐ ஐடியை மாற்றுவது எப்படி? 

  • GPay செயலியை ஓபன் செய்ய வேண்டும் 
  • அதில் பயனர்கள் தங்கள் ப்ரோபைலை தெரிவு செய்ய வேண்டும் 
  • அதில் யுபிஐ ஐடியை மாற்ற விரும்பும் வங்கிக் கணக்கை தேர்வு செய்யவும் 
  • பின்னர், மேனேஜ் யுபிஐ ஐடி என்பதை தேர்வு செய்து புதிய ஐடியை சேர்க்கவும், பழைய ஐடியை நீக்கவும் முடியும். 

யுபிஐ மூலம் டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி பரிமாற்றம்: கடந்த டிசம்பரில் மட்டுமே யுபிஐ மூலமாக சுமார் 7.82 பில்லியன் பரிவர்த்தனைகள் (Transactions) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் மூலம், மொத்தம் 12.82 லட்சம் கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளதாக இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனின் தரவுகள் தெரிவிக்கின்றன. 


Edited by Induja Raghunathan