Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: வாரக்கடைசியில் குட் நியூஸ் - தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு குறைவா?

தங்கம் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold Rate Chennai: வாரக்கடைசியில் குட் நியூஸ் - தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு குறைவா?

Saturday June 03, 2023 , 2 min Read

தங்கம் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் (03/06/2023)

வாரக்கடைசி நாளான இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது நகை வாங்கக் காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் போது தங்கத்தின் விலை கிராமிற்கு 5,638 ரூபாயாகவும், சவரனுக்கு 45,104 ரூபாயாகவும் இருந்தது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து 5,580 ரூபாயாகவும், சவரனுக்கு 464 ரூபாய் குறைந்து 44,640 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து 6,056 ரூபாயாகவும், சவரனுக்கு 464 ரூபாய் குறைந்து 48,448 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 80 காசுகள் குறைந்து 77 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோவிற்கு 800 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

gold

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பும், கருவூல வருவாயும் அதிகரித்து வருவது தங்கத்தின் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்திருப்பதும் விலை சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,580 (மாற்றம்: ரூ.58 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,640 (மாற்றம்: ரூ.464 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,056 (மாற்றம்: ரூ.58 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,448 (மாற்றம்: ரூ.464 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,530 (மாற்றம்: ரூ.70 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,240 (மாற்றம்: ரூ.560 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,033 (மாற்றம்: ரூ.77 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,264 (மாற்றம்: ரூ.616 குறைவு)