Gold Rate Chennai: மீண்டும் தங்கம் விலை கிடுகிடு உயர்வு; ரூ.50,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (24/03/2024):
கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை, இன்றைய வாரத்தின் தொடக்கத்திலேயே உயர ஆரம்பித்துள்ளது.
சென்னையில் நேற்றைய இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 6,185 ரூபாய்க்கும், சவரன் 49,480 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்து 6,205 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 49,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்து 6,675 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 53,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோவிற்கு 800 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
ஜூன் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு டாலரின் மதிப்பு சரிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,185 (மாற்றம்: ரூ.20 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.49,480 (மாற்றம்: ரூ.160 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,655 (மாற்றம்: ரூ.20 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,240 (மாற்றம்: ரூ.160 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,125 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 49,000 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,011 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,088 (மாற்றமில்லை)