Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: புத்தாண்டில் தொடரும் ஷாக் - தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு!

2025 புத்தாண்டில் தொடர்ந்து இரு தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது நகை வாங்க விரும்புவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Chennai: புத்தாண்டில் தொடரும் ஷாக் - தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு!

Thursday January 02, 2025 , 2 min Read

2025 புத்தாண்டில் தொடர்ந்து இரு தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது நகை வாங்க விரும்புவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.57,200 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,800 ஆகவும், சவரன் விலை ரூ.62,400 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (2.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.7,180 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.57,440 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.7,833 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.62,664 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (2.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.98 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.98,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனையாகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே உயர்ந்திருப்பது மட்டுமின்றி, பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,180 (ரூ.30 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,440 (ரூ.240 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,833 (ரூ.33 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,664 (ரூ.264 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan