Gold Rate Chennai: ஷாக், ஷாக், ஷாக்... ரூ.62,000-ஐ நெருங்கியது தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது சரித்திரம் காணாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.61,800-ஐ கடந்ததுடன், ஒரே நாளில் ரூ.960 விலை உயர்வு நிலவியதைக் கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது சரித்திரம் காணாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.61,800-ஐ கடந்ததுடன், ஒரே நாளில் ரூ.960 விலை உயர்வு நிலவியதைக் கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தை மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்திருப்போர் ஷாக்கில் திக்குமாக்காடியுள்ளனர்.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,610 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.60,880 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17 உயர்ந்து ரூ.8,302 ஆகவும், சவரன் விலை ரூ.136 உயர்ந்து ரூ.66,416 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (31.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.7,730 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.61,840 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.131 உயர்ந்து ரூ.8,433 ஆகவும், சவரன் விலை ரூ.1,048 உயர்ந்து ரூ.67,664 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (31.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,07,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே குறைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலியாக, தற்போதைய சூழலில் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி மக்கள் நகருகின்றனர்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை உயரவே கூடும் என வர்த்தகர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்பின் சில அதிரடி முடிவுகளும், எதிர்வரும் மத்திய பட்ஜெட்டும் இனி வரும் நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,730 (ரூ.120 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,849 (ரூ.960 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,433 (ரூ.131 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.67,664 (ரூ.1,048 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,610 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,880 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,302 (ரூ.17 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,416 (ரூ.136 உயர்வு)
Edited by Induja Raghunathan