Stock News: பட்ஜெட் எதிர்பார்ப்பு எதிரொலி - பங்குச் சந்தையில் ஏற்றம்!
மத்திய அரசு பட்ஜெட் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளதன் எதிரொலியால், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்துள்ளன.
மத்திய அரசு பட்ஜெட் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளதன் எதிரொலியால், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.31) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 188.11 புள்ளிகள் உயர்ந்து 76,947.92 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 68.6 புள்ளிகள் உயர்ந்து 23,318.10 ஆக இருந்தது.
பங்குச் சந்தை மீண்டெழுந்து தொடர்ந்து ஏற்றம் காணப்படுவது முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 455.91 புள்ளிகள் (0.59%) உயர்ந்து 77,215.72 ஆகவும், நிஃப்டி 172.25 புள்ளிகள் (0.74%) உயர்ந்து 23,421.75 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளில் டோக்கியோவில் ஏற்றமும், சியோலில் இறக்கமும் நிலவுகிறது. ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை. மத்திய அரசு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு எகிறியதன் எதிரொலியால், இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுவதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
எல் அண்ட் டி
டைட்டன் கம்பெனி
எம் அண்ட் எம்
நெஸ்லே இந்தியா
டாடா ஸ்டீல்
இன்ஃபோசிஸ்
மாருதி சுசுகி
விப்ரோ
ஐடிசி
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
ஆக்சிஸ் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
பாரதி ஏர்டெல்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா வீழ்ச்சி கண்டு ரூ.86.65 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan