Gold Rate Chennai: இன்று சவரன் ரூ.50,000 - உச்சத்தை தொட்ட தங்கம் விலை!
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (28/03/2024):
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று உச்சமாக சவரன் 50 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் இனி நகை வாங்க முடியுமா? என்ற கலக்கத்தில் உள்ளனர்.
சென்னையில் நேற்றைய இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 6,215 ரூபாய்க்கும், சவரன் 49,720 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 35 ரூபாய் உயர்ந்து 6,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 50,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் கிராமிற்கு 35 ரூபாய் உயர்ந்து 6,720 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53,760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவிற்கு 300 ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
பணவீக்கம் மற்றும் வட்டி விகித குறைப்பு தொடர்பான சந்தேகங்களால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,250 (மாற்றம்: ரூ.35 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.50,000 (மாற்றம்: ரூ.280 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,720 (மாற்றம்: ரூ.35 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,760 (மாற்றம்: ரூ.280 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,170 (மாற்றம்: ரூ.35 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 49,360 (மாற்றம்: ரூ.280 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,731 (மாற்றம்: ரூ. 38 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 53,848 (மாற்றம்: ரூ.304 உயர்வு)