Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஒருமுறை முதலீட்டில் முருங்கை மரங்களை நட்டு நீங்கள் லட்சங்களில் லாபம் ஈட்டலாம்!

ஒரு ஏக்கரில் 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1,200 மரங்கள் வரை நடமுடியும். இதில் இருந்து ஆண்டுக்கு சுமார் 60 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

ஒருமுறை முதலீட்டில் முருங்கை மரங்களை நட்டு நீங்கள் லட்சங்களில் லாபம் ஈட்டலாம்!

Friday June 17, 2022 , 2 min Read

இன்று ஒரு இடத்தில் விளையும் பொருட்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டியும் எளிதாகப் பயனர்களைச் சென்றடைகின்றன. அதற்கான வசதி இன்று வந்துவிட்டது.

நம் நாட்டில் விளையும் ஏராளமான விளைபொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் பல பொருட்கள் மருத்துவ குணங்கள் கொண்டதாக இருப்பதால் அதற்கான் தேவையும் அதிகம். அந்த வகையில் நாடு கடந்து செல்லும் ஒரு முக்கிய விளைபொருள் முருங்கைக்காய்.

Murungai
வாழையைப் போன்றே முருங்கை மரமும் முழுமையாக பலனளிக்கக் கூடியது. இதன் இலை, பூ, காய், தண்டுப்பகுதி என அனைத்தையும் பயன்படுத்த முடியும். எதுவுமே வீணாவதில்லை.

பொதுவாகவே இன்று பலரின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இந்தியாவில் பலர் நல்ல சம்பளத்துடன்கூடிய வெளிநாட்டு வேலைகளை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சொந்தமாக தொழில் செய்யும் திருப்தி கிடைக்கிறது. நல்ல லாபமும் ஈட்டமுடிகிறது.

இந்தப் போக்கு அதிகரித்து வரும் சூழலில் இவர்கள் விவசாயத்தை மீட்டெடுப்பதுடன் மக்களின் ஆரோக்கியம் மேம்படவும் உதவி வருகின்றனர்.

ஆனால், முருங்கை சாகுபடியைப் பொருத்தவரை வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. வேலையில் இருந்துகொண்டே முருங்கை வளர்த்து லாபம் ஈட்டமுடியும்.

ஏற்றுமதி

முருங்கை இந்தியாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2016-ம் ஆண்டில் 120 மில்லியன் டாலர் அளவில் இருந்த ஏற்றுமதியின் அளவு தற்போது 230 மில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.

கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், யூகே என எத்தனையோ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான முக்கியக் காரணம் அதிலுள்ள மருத்துவ குணங்கள்.

கனடா, அமெரிக்காவின் சில பகுதிகள், பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற நாடுகளிலும் முருங்கை சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தென்னிந்தியப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.

முருங்கைகாய்

முருங்கை சாகுபடியின் சிறப்பம்சங்கள்

முருங்கை சாகுபடி செய்ய மண் வளமோ உரங்களோ பூச்சிக்கொல்லிகளோ அவசியமில்லை. பெரியளவில் பராமரிப்பு வேலைகளும் கிடையாது. வெறும் தரிசு நிலத்தில்கூட முருங்கை வளர்ந்துவிடும்.

வெயில் அதிகமிருக்கும் வெப்பநிலை முருங்கை சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும். முருங்கை செடி வைத்தால் ஓராண்டில் மரமாக வளர்ந்து நிற்கும். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் வரை பூப்பூத்துக் குலுங்கும்.

முருங்கை சாகுபடியை எப்படி தொடங்கலாம்?

முருங்கை சாகுபடி செய்ய விரும்புவோர் ஒரு ஏக்கர் நிலத்தில் தொடங்கிவிடலாம். மண் வளம், நீர் பாசனம், வெயில், மழை எதைப்பற்றியும் அதிகம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. எப்படிப்பட்ட சூழலிலும் வளரக்கூடிய மரம்தான் முருங்கை.

ஒரு ஏக்கரில் சுமார் 1200 முருங்கை செடி நடமுடியும். இதற்கான செலவும் மிகவும் குறைவு.

நேரடியாக நிலத்திலோ அல்லது சின்ன தொட்டியிலோ விதைகளை விதைக்கலாம். ஒரே மாதத்தில் செடியாகிவிடும். ஓராண்டில் பெரிய மரமாக வளர்ந்து நிற்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை விதைகளை விதைப்பது உகந்த காலகட்டமாக இருக்கும்.

லாபம்

ஒரு முருங்கை மரத்தில் சுமார் 300 முதல் 500 முருங்கைக்காய் கிடைக்கும். அதாவது, சுமார் 40 முதல் 60 கிலோ வரை கிடைக்கும். இவற்றின் சந்தை விலை சுமார் 50,000 ரூபாய்.

ஒரு ஏக்கரில் 1,200 மரங்கள் நடமுடியும் என்கிற நிலையில் சுமார் 60 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

உள்நாட்டு சந்தையின் இவற்றின் விலை குறைவு என்றாலும் அந்நிய சந்தையில் நல்ல விலையில் ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டமுடியும்.

முருங்கை விதை சாதாரணமாக மண்ணில் விழுந்தாலே போதும் எந்தவித மனித தலையீடும் இன்றி அதுவாகவே செடியாகி, மரமாகி வளர்ந்துவிடுவதை நம் வீடுகளில் நாம் பார்த்திருக்கிறோம்.

உலகச் சந்தையில் இதற்கான தேவை அதிகரித்திருக்கும் நிலையில் நாம் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டால் நல்ல லாபம் ஈட்டமுடியும்.

தமிழில்: ஸ்ரீவித்யா