Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘உங்க GPay-க்கு தவறா பணம் அனுப்பிட்டேன்...’ - Google Pay-வில் நடக்கும் நூதன மோசடி; உஷாரா இருங்க!

கூகுள் பே மூலம் மக்களிடம் நூதன முறையில் இணையவழி மோசடி நடப்பதாக தெரியவந்துள்ளது. அது எப்படி நடக்கிறது? எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

‘உங்க GPay-க்கு தவறா பணம் அனுப்பிட்டேன்...’ - Google Pay-வில் நடக்கும் நூதன மோசடி; உஷாரா இருங்க!

Wednesday February 21, 2024 , 3 min Read

கூகுள் பே மூலம் மக்களிடம் நூதன முறையில் இணையவழி மோசடி நடப்பதாக தகவல். இந்த சூழலில் யுபிஐ பயன்படுத்தும் மக்கள் அலர்ட்டாக இருக்குமாறு பல்வேறு தருணங்களில் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கூகுள் பே மோசடி குறித்து விரிவாக பார்ப்போம். 

யுபிஐ? - கடந்த 2016ல் இந்தியாவில் யுபிஐ - இன்ஸ்டன்ட் பேமெண்ட் சிஸ்டம் அறிமுகமானது. அதன் மூலம் மொபைல் போன் பயனர்கள் டிஜிட்டல் முறையில் சக பயனர்களுக்கும், மெர்ச்சன்ட்களுக்கும் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. வங்கிக் கணக்குடன் லிங்க் செய்யப்பட்டுள்ள மொபைல் எண் மூலம் இதில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. இணையதள இணைப்பும் அவசியம். இதனை ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) இதனை நிர்வகித்து வருகிறது. 

சுமார் 550+ வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இதில் பயனர்களாக உள்ளனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதள போன்களை கொண்ட பயனர்கள் இதில் பலன் பெற்று வருகின்றனர். மொபைல் எண், வங்கிக் கணக்கு, QR கோட், ஆதார் அடிப்படையில் இதில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

இந்திய டிஜிட்டல் பேமெண்ட் முறையில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. ஒவ்வொரு நொடியும் லட்சக் கணக்கான பரிவர்த்தனைகள் ரூ.1 முதல் லட்சங்கள் வரையிலான மதிப்பு கொண்ட தொகை இதில் கைமாறுகிறது. 

Goay

போன்பே, ஜி பே (கூகுள் பே), வாட்ஸ் அப், அமேசான் பே என பல்வேறு மொபைல் செயலிகள் (தேர்ட் பார்ட்டி) மூலம் பயனர்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரியில் (2024) மட்டும் 12,203 மில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு தொகை ரூ.18.41 லட்சம் கோடி. இதனை என்பிசிஐ தெரிவித்துள்ளது.

நிகழ் நேரத்தில் 24x7 என்ற முறையில் இதில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதால் பெருவாரியான மக்களின் ஆதரவு இதற்கு உள்ளது. இதில் சந்தையில் மக்களிடையே பயன்பாட்டில் உள்ள யுபிஐ செயலிகளில் கூகுள் பே முன்வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இந்திய யுபிஐ சேவை தற்போது நாடு கடந்து பிரான்ஸ், இலங்கை, மொரிஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற உலக நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது. இந்நிலையில், கூகுள் பே ஊடாக மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வருகிறது. 

கூகுள் பே மோசடி

இணையவழியில் டிஜிட்டல் பேமெண்ட் மேற்கொள்ளும் நபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ‘பணம் பெற வேண்டியவர் பணம் அனுப்ப வேண்டிய நபரின் QR கோடினை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்பதில் தொடங்கி யுபிஐ சார்ந்த விழிப்புணர்வு நீள்கிறது. இதனை சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் காவல் துறையினர் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கூகுள் பே மோசடி யுபிஐ பயனர்கள் மத்தியில் சங்கடம் தரும் விஷயமாக அமைந்துள்ளது. 

இந்த புது வகை நூதன மோசடி நடப்பது எப்படி?

திடீரென உங்களின் யுபிஐ கணக்கிற்கு, உங்களுக்கு யார் என தெரியாத ஒரு நபரிடமிருந்து பணம் வரும். அதைத் தொடர்ந்து அந்த பணம் அனுப்பிய நபரிடமிருக்கு உங்கள் மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வரும். அதில் அறிமுகமில்லாத நபர் ஒருவர் பேசுவார். தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாக சொல்வார். கூடவே பணத்தை திரும்ப அனுப்புமாறு தெரிவிப்பார்.

நீங்கள், ‘அய்யோ மத்தவங்க பணம் நமக்கெதுக்குனு உடனே, அந்த எண்ணுக்கு பணத்தை திருப்பி அனுப்புவீங்க...’ ஆனால், அப்படி அனுப்பினால்... அங்கதான் பிரச்சனை!

நீங்கள் பணத்தை அனுப்பியவுடன் உங்கள் போன் யுபிஐ ஹேக் செய்யப்பட்டு, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க மோசடி செய்யப்படுகிறது என்பதே குற்றச்சாட்டு.  

இதன் உண்மை நிலையை ஆராய கூகுள் பே-வின் ஹெல்ப் பக்கத்தில் ஆராய்ந்த போது AVOID PAYMENT TRANSFER SCAMS என ஒரு டேக் உள்ளது. அதில் தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் அனுப்புவது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வரிசையாக பல்வேறு மோசடி குறித்து பட்டியல் இடப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக MONEY RECEIVED SCAM என ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது, இந்த வகை மோசடியில் தெரியாத நபரிடமிருந்து பணம் வந்தால், அதனை நேரடியாக அனுப்பாமல், தங்களை தொடர்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக பணம் அனுப்பிய நபர் உங்களுக்கு தெரிந்தவர் என்றால் மட்டும் பணத்தை திரும்ப அனுப்பலாம் என கூகுள் பே ஹெல்ப் சப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Stolen forms of Payment முறையின் கீழ் மோசடியாளர்கள் பணத்தை அனுப்புவார்கள். அந்த தொகையை நீங்கள் திரும்ப அனுப்பினால் அதற்கு சமமான தொகை பயனரின் கணக்கில் இருந்து குறையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பணத்தை திரும்ப அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Scam

வல்லுநர்கள் சொல்வது என்ன?

இந்த வகை மோசடியாளர்கள் குறிப்பிட்ட Malicious செயலி அல்லது QR கோடுக்கு பணம் அனுப்ப சொல்வார்கள். பயனர்கள் சிலர் அப்படி செய்யும் போதுதான் சிக்கலுக்கு ஆளாகின்றனர். இந்த ட்ரிக் மூலம் ஒருவரின் மொபைல் ஸ்க்ரீன் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. அதன் மூலம் ஓடிபி பெற்று பணத்தை கணக்கில் இருந்து தூக்கி விடுவார்கள். இதில் கூகுளின் பாதுகாப்பு குறைபாடு எதுவும் காரணம் அல்ல. 

இந்த வகை மோசடியாளர்கள் இடமிருந்து பயனர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். பணத்தை தவறுதலாக அனுப்பி விட்டதாக யாரேனும் சொன்னால், அவரது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு அருகாமையில் இருக்கும் காவல் நிலையம் வர சொல்லலாம். அங்கு நேரில் அவரது பணத்தை ஒப்படைக்கலாம். 1930 எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Edited by Induja Raghunathan