Gold Rate Chennai: கொஞ்சம் கொஞ்சமாக குறையும் தங்கம் விலை - காரணம் என்ன?
தடாலடியாக உயரும் ஆபரணத் தங்கம் விலையானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது நகை வாங்குவோரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தடலாடியாக உயரும் ஆபரணத் தங்கம் விலையானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது நகை வாங்குவோரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாக உயர்ந்த நிலையில், சனிக்கிழமையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.8,220 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.65,760 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.8,967 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.71,736 ஆகவும் இருந்தது. இப்போது மேலும் கொஞ்சம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (17.3.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.8,210 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.65,680 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.8,956 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.71,648 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (17.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.111.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,11,900 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாக மீண்டெழுந்துள்ளது.

அதேபோல், கடந்த வாரம் முழுவதும் தடுமாறி வந்த பங்குச் சந்தையும் மீண்டெழுந்துள்ளது. இதன் காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு சற்றே குறையத் தொடங்கியதால், ஆபாரணத் தங்கத்தின் விலையும் கொஞ்சம் குறைந்துள்ளது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் சர்வதேச சந்தைப் போக்குகளைப் பொறுத்தே தங்கம் விலை மேலும் குறைவது உறுதியாகும் என்கின்றனர் வர்த்தகர்கள்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,210 (ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,680 (ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,956 (ரூ.11 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,648 (ரூ.88 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,210 (ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,680 (ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,956 (ரூ.11 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,648 (ரூ.88 குறைவு)
Edited by Induja Raghunathan