அமெரிக்க நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக நிதி பரிமாற்றம் செய்ததாக பைஜூஸ் மீது புகார்!
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி கிளாடியா ஸ்பிரிங்கர், இந்த பரிமாற்றம் தனது மேற்பார்வையின் கீழ் நிகழ்ந்ததால், இதை திரும்ப செலுத்த வேண்டும் என் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் டெலாவேர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பைஜூஸ் நிறுவனம் தனது அமெரிக்க அலுவலகத்தில் உள்ள பணத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு மாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது.
கடன் பெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய இந்த பணம், ஒயிட் ஹேட் எஜுகேஷன் டெக்னாலக்கு மாற்றப்பட்டதாக புளும்பர்க் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 7ம் தேதி வரையான காலத்தில், துணை நிறுவனத்தின் ஸ்டிரைப் கணக்கு வாயிலாக இந்த பணம், ஒயிட் ஹேட் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட வெல்ஸ்பார்கோ கணக்கிற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி கிளாடியா ஸ்பிரிங்கர், இந்த பரிமாற்றம் தனது மேற்பார்வையின் கீழ் நிகழ்ந்ததால், இதை திரும்ப செலுத்த வேண்டும் என் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கிறது. இந்தியாவில் பைஜுஸ் தொடர்பான இ-மெயிலை இயக்குபவர்கள், அமெரிக்க துணை நிறுவன கணக்குகளை அணுக முயற்சிப்பதாகவும் ஸ்பிரிங்கர் குற்றம் சாட்டியுள்ளதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
ஒயிட் ஹேட் கணக்கில் இருந்து மேலும் பரிவர்த்தனையை செய்ய வேண்டாம் என வெல்ஸ்பார்கோவுக்கு ஸ்பிரிங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பைஜூஸ் நிறுவனம் மற்றும் அதற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் இடையிலான மோதலின் ஒரு பகுதியாக இந்த வழக்கு அமைகிறது. பைஜூஸ் தங்களுக்கு 1.2 பில்லியன் டாலர் கடன் பொறுப்பு கொண்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பைஜூஸ் மறைத்ததாக சந்தேகிக்கும் 533 மில்லியன் டாலரை ஓராண்டுக்கும் மேலாக கண்டறிய முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மூலதன சந்தையை அணுக உருவாக்கப்பட்ட பைஜூஸ் ஆல்பா இந்த 533 மில்லியன் டாலரை கொண்டிருந்தது. இந்நிறுவனத்திற்கு எதிராக கடன் நிறுவனங்கள் திவால் நடவடிக்கை மேற்கொண்டன.
பைஜூஸ் பணத்தை செலுத்த தவறியதை அடுத்து, ஆல்பா நிறுவனத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட கடன் நிறுவனங்கள், தங்களுக்கு உரியது என கருதும் பணத்தை திரும்ப பெற வழக்கு தொடுத்துள்ளனர். எபிக், டின்கர் மற்றும் ஆஸ்மோ ஆகிய பைஜூஸ் நிறுவனங்களும் திவால் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன.
இந்த துணைந் இறுவனங்கள் அமெரிக்காவில் டெலாவேரில் திவால் வழக்குகளை எதிர்கொள்ளும் நிலையில், பைஜூஸ் இந்தியாவில் தனி வழக்கை எதிர்கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan