Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘என் நாடகங்கள்ல நையாண்டி, நக்கலோட ஸ்ட்ராங்கான மெசேஜ் இருக்கும்; அதையே ரீல்ஸ்-ல செய்யறேன்’ - நடிகை வினோதினி

தனது நடிப்பு மற்றும் டயலாக் டெலிவரியால் பலரைக் கவரும் குணச்சித்திர நடிகையாக வலம்வரும் வினோதினி வைத்தியனாதன், அண்மைகாலமாக சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டு பலரை தன் ரசிகர்கள் ஆக்கியுள்ளார்.

‘என் நாடகங்கள்ல நையாண்டி, நக்கலோட ஸ்ட்ராங்கான மெசேஜ் இருக்கும்; அதையே ரீல்ஸ்-ல செய்யறேன்’ - நடிகை வினோதினி

Thursday May 18, 2023 , 4 min Read

“என்னோட நாடகங்கள்ல நையாண்டி நக்கலோட ஒரு ஸ்ட்ராங்கான ஸ்டேட்மெண்ட்டும் இருக்கும். அதை ரீல்ஸ் ஃபார்மட்ல கொண்டு வர்றது எனக்கு ஒண்ணும் பெரிய விஷயமா தெரியல...“ என்கிறார் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகிவிட்ட வினோதினி வைத்தியநாதன்.

நீண்ட காலமாக சினிமாவில் பல நல்ல கேரக்டர்களில் நடித்துள்ள வினோதினி, அண்மைகாலமாக சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் வெகுவாக பிரபலமானார். ஆளும் கட்சியோ எதிர்க் கட்சியோ, கண்ணெதிரே நடக்கும் சமூக அவலங்களுக்கு எதிராக நக்கலும் நையாண்டியுமாக இவர் போடும் ரீல்ஸ் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று அதற்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறது.

நடிகை வினோதினி

வினோதினி வைத்தியநாதன் குடும்பம்

நான் விவாகரத்தானவர்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். அம்மா 2015-ல தவறிட்டாங்க, அதனால இப்போ நானும் அப்பா வைத்தியநாதனும்தான் இருக்கோம். எனக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவன் பேர் கார்த்திக் வைத்தியநாதன், அவன் சிங்கப்பூர்ல ஒரு ஐ.டி. கம்பெனி நடத்தறான். மாசச்சம்பளத்துக்குப் போன குடும்பத்துலேர்ந்து முதல் தலைமுறை ஆண்ட்ரப்ரனர் அவன்தான்.

பொன்னியின் செல்வனில் நடித்த அனுபவங்கள்…

பெரிய பெரிய நடிகர்களோட நடிக்கும்போது இந்த கதாபாத்திரத்துக்கு உடல்மொழியிலேர்ந்து எல்லா விஷயத்துலயும் நம்ம என்ன கொண்டு வர்றோம்-கிறதுதான் என் மைண்டுல இருந்தது. பெரிய அரசிக்கு தாதிப் பெண்ணா இருக்கும்போது அதுக்கு ஏத்த மாதிரி ராயலா உடல்மொழி வரணும்.

ஃபர்ஸ்ட் பார்ட்ல ”பெரிய பழுவேட்டரையர் வந்துகொண்டிருக்கிறார் அரசி”-னு ஓடிவந்து நான் சொல்லுவேன். அப்ப ஓடி வரும்போதுகூட சாதாரணமா வினோதினியா நான் ஓட முடியாது. ராயல் ஹவுஸ்ல இருக்கக்கூடிய அவங்களுக்குப் பணிப்பெண்ணாதான் ஓடணும். அப்ப எனக்குமே அந்த உடல்மொழி இருக்கணும்கிறது போன்ற சில விஷயங்களை ஞாபகம் வச்சு செய்ய வேண்டியிருந்தது. அதுக்கு காஸ்ட்யூம் போன்ற விஷயங்களும் ஹெல்ப் பண்ணுச்சி. அந்த காஸ்ட்யூம், அந்த ஜுவல்ஸ், அந்த மேக் அப், அந்த ஹேர் எல்லாம் இருக்கும்போது அதுவே ஒரு ஆளுமையைக் கொடுக்குது.

சமூகத்தில் நடக்குற அநீதிகளுக்கு எதிராக குறிப்பாக பெண்கள் பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது ஏன்?

பெண்களோட பிரச்னைகள் நமக்குதானே நல்லா தெரியும். பெண்களுக்கு பல அநீதிகள் இழைக்கப்படறதை தினம் தினம் பார்க்கறோம். ஆணுக்கும் பெண்ணுக்குமான இன் ஈக்குவாலிட்டி இருந்துகிட்டே இருக்கு. அதுவும் நாம எவ்ளோதான் முட்டி மோதி போராடினாலும் சம்பளத்துலேர்ந்து எல்லா விஷயங்கள்லயும் நம்மளை செகண்டு சிட்டிசனாவே வச்சிருக்காங்க.

“அப்புறம் பார்த்தீங்கன்னா எல்லா சமூகங்கள்லயும் ஜாதி இருக்கு. எல்லா ஜாதிகள்லயும் கடைசியா கருதப்படறது பெண்தான். நீங்க எவ்வளவுதான் உயர்த்தப்பட்ட ஜாதியில பார்த்தாலும், எவ்வளவுதான் தாழ்த்தப்பட்ட ஜாதியில பார்த்தாலும் அதுல கடைசியா இருக்கறவங்க பெண்ணாதான் இருப்பாங்க. அதனால வந்த ஆதங்கம்தான் பெண்களுக்காக நான் அதிகமா குரல்கொடுக்கக் காரணமா இருக்குன்னு சொல்லலாம்.”

அரசாங்கத்தை எதிர்த்து நையாண்டி பதிவுகளை தைரியமாக போடுவது...

அரசாங்கத்தை எதிர்த்து நான் பதிவு போடறேன்னு சொல்ல முடியாது. சும்மா நிறைய பேர் என்ன சொல்றாங்கன்னா நீங்க ஒரு கட்சிய சார்ந்து இருக்கீங்க இந்த அரசியல் கட்சிய நிறைய அட்டாக் பண்றீங்க அப்படீன்னெல்லாம் சொல்றாங்க. ஆனா எனக்கு எந்த கட்சி சார்பும் இப்ப கிடையாது. கண்டிப்பா ஒரு காலகட்டத்துல நாம எல்லாருமே ஒரு பக்கம் சாயுவோம். இல்ல இத்தனை வருஷம் நாம ஓட்டு போட்டிருக்கோம், அதனால மனசுக்குள்ளயாவது ஒரு கட்சி சார்பு இல்லாம இருக்காது.

ஆனாலும் பொது வெளியில நடுநிலையா இருக்கணும்னுதான் எல்லாருமே ட்ரை பண்றோம். நியாயத்த கேட்கறோம். ஒரு பக்கம் இத்தனை கோழிய அடிச்சாங்கன்னு நியூஸ் வரும், இன்னொரு பக்கம் ஒருத்தர் பந்திப்பூருக்கு புலியப் பார்க்கப் போனாரு, புலி வரலைன்னு கோபப் பட்டாரு அப்படீன்னு ஒருத்தரைப் பத்தி நியூஸ் வருது. இந்த ரெண்டுமே பேசப்பட வேண்டிய விஷயங்கள்தான். அது ரெண்டையுமேதான் நான் பேசிகிட்டிருக்கேன். அது தைரியம் அப்படீன்னெல்லாம் சொல்ல முடியாது. என்னன்னா அப்படி எல்லாருமே இன்னைக்கு பேசிகிட்டுதான் இருக்காங்க.

நடிகை வினோதினி

ரீல்ஸ் போடுவதற்கு வரும் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல் கடப்பது எப்படி?

ஆமா, ஒருநாள் ஒருத்தர், ‘நீங்க சினிமாவுல இருக்கீங்க, அரசியல் பேசி வடிவேலு விழுந்ததை ஞாபகம் வச்சுக்கோங்க’ அப்படீன்னு கமெண்ட் பண்ணியிருந்தார். வடிவேலு பேசின காலகட்டம் வேற. அவர் 2009-ல பேசினாரு. அன்னைக்கு சாமானிய ஒரு மனிதனுக்கு பெரிய அரசியல் பார்வை இருந்த மாதிரி எனக்குத் தெரியல. ஏன்னா அப்ப சோஷியல் மீடியால்லாம் இந்த அளவுக்கு இல்ல. இன்னைக்கு சோஷியல் மீடியாவுல பார்த்தீங்கன்னா மேல்நிலைப் பள்ளி படிக்கிற பசங்ககூட ஒவ்வொரு கட்சி சார்பா பேசிகிட்டிருக்காங்க. இன்னைக்கு அந்தளவுக்கு ஒரு அரசியல் பார்வை இருக்கு. அப்போ நாம பேசலைன்னாதான் தப்பு. ஒரு அநீதி நடக்குது புல்வாமா அட்டாக் போன்ற விஷயங்கள் நடக்குதுன்னா அதைப்பத்தி நாம பேசலைன்னாதான் தப்பே தவிர, பேசறது தப்பில்ல.

வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை பற்றி…

எங்க குடும்பத்துலயே, எங்க அப்பா வேலை பார்த்த காலத்துல எங்க அம்மாவும்தான் வேலைக்குப் போனாங்க எத்திராஜ் கல்லூரியில தமிழ்த்துறையில முழுநேரமாதான் வேலை பார்த்தாங்க, எங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் சாயந்திரம் அஞ்சரைக்குதான் வேலை முடியும், டிராஃபிக்ல வீட்டுக்கு வந்து சேர ரொம்ப லேட் ஆகும். ஆனாலும், எங்க அம்மா காலேஜ்லேர்ந்து வந்த உடனே அவங்களுக்கு யாரும் காஃபி போட்டு கொடுக்க மாட்டாங்க. வீட்டுக்கு வந்ததும் அவங்கதான் எங்க அப்பாவுக்கு காஃபி போட்டுக் கொடுப்பாங்க. அதுக்கப்புறம் அவங்கதான் ராத்திரிக்கு சமைக்கணும்.

அதேபோல, காலையிலயும் சமையல், வீட்டு வேலை எல்லாத்தையும் செஞ்சிட்டு அப்புறம் வேலைக்குக் கிளம்பிப் போகணும். பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வேலைக்குப் போற பெண்களோட நிலைமை இதே மாதிரிதான் இருக்கு.

vinodhini reels

பெண்கள் இரட்டை அடிமை முறையில் இருந்து விடுபட ஆலோசனை…

ஒரு வேலைக்குப் போறோம், எனக்கு இவ்ளோ சம்பளம்தான் வேணும்னு நான் அடிச்சுக் கேட்கறேன்னா, அதுக்கு ஏத்தபடி வேலையைச் செய்யற சூழலை நான் உருவாக்கிக்கணும். இல்ல, எனக்கு வீட்டுல ரெண்டு குழந்தைங்க இருக்கு அவங்களை நான் பார்த்துக்கணும், இன்னைக்குக் காலையில சமையல் வேலையை முடிச்சிட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சின்னு சொன்னா ஒத்துக்குவாங்களா?

அதனாலதான் நான் என்ன பண்ணிட்டேன்னா சமைக்கறதுக்கு ஆள் போட்டுட்டேன். அது நம்மளோட எவ்ளோ நேரத்தை விரயமாக்குது? நீங்களேகூட சமைக்கற நேரத்துல பத்து ஆர்ட்டிகிள் எழுதலாம் இல்லையா? வேற எந்த வேலையும் செய்யத் தெரியாத சமையல் வேலையை மட்டுமே நம்பி இருக்கறவங்களுக்கு நாம வேலைவாய்ப்பைக் கொடுக்கறதோட, நம்மளோட வேலையை சிறப்பா செய்ய வசதியாவும் ஆகிடும்.

கார்ப்பரேட் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுமே வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுக்கலாம், முக்கியமா பெண்களுக்கு மட்டுமாவது அந்த ஆப்ஷனைக் கொடுக்கலாம். ஏன்னா சென்னை போன்ற பெரு நகரங்கள்ல பெரும்பாலானவங்களோட நிறைய நேரம் போக்குவரத்துலயே கரைஞ்சு போயிடுது. அட்லீஸ்ட் வாரத்துக்கு மூனு நாளாவது வீட்டுல இருந்து வொர்க் பண்ற ஆப்ஷனைக் கொடுத்தா பெண்களுக்கும் வசதி, பாதிக்குப் பாதி டிராஃபிக்கும் குறையும்.