பிளின்கிட்டில் ரூ.1500 கோடி முதலீடு செய்யும் Zomato!
உணவு நுட்ப நிறுவனமான ஜொமேட்டோ, அதிகரிக்கும் போட்டி மற்றும் விரிவாக்கத்தின் மத்தியில் தனது குவிக் காமர்ஸ் சேவையான பிளின்கிட்டில் ரூ.1,500 கோடி முதலீடு செய்துள்ளது.
உணவு நுட்ப நிறுவனமான Zomato, அதிகரிக்கும் போட்டி மற்றும் விரிவாக்கத்தின் மத்தியில் தனது குவிக் காமர்ஸ் சேவையான பிளின்கிட்டில் ரூ.1,500 கோடி முதலீடு செய்துள்ளது.
ஜொமேட்டோ, பங்கு ஒன்றுக்கு 19,70,171 எனும் வெளியீட்டு விலையில், 7,612 பங்குகளை வாங்கி ரூ.1,500 கோடி முதலீடு செய்துள்ளதாக, கம்பெனிகள் பதிவாளர் ஆவணம் தெரிவிக்கிறது.
கடந்த வாரம் போட்டி நிறுவனமான ஸ்விக்கி, தனது குவிக் காமர்ஸ் சேவையின் செயல் மூலதனம் மற்றும் விரிவாக்க தேவைகளுக்காக ஸ்கூட்சி லாஜிஸ்டிக்சில் ரூ.1000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இது தொடர்பான ஆவணத்தில், பங்கு ஒன்றை ரூ.7,640 எனும் விலையில் ஒரே முறை அல்லது பல்வேறு தொகுப்புகளாக பங்குகளை வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில், உரிம வெளியீடு மூலம் ஸ்கூட்சி நிறுவனத்தில் 1000 கோடி முதலீட்டை ஸ்விக்கி அறிவித்திருந்தது.
நவம்பர் மாதத்தில் ஜொமேட்டோ உள்நாட்டு மியூச்சுவல் பண்ட்களிடம் இருந்து நிதி கழக முதலீட்டில் ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டியதாக அறிவித்தது. 2021 ல் பங்கு வெளியீட்டிற்கு பின் முதல் முறையாக நிதி திரட்டியுள்ளது.
ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவித்த பின், அவற்றின் மதிப்பு 11 பில்லியன் டாலர் சரிந்துள்ளன. ஜொமேட்டோ பங்குகள் தற்போது 226 எனும் விலையிலும், ஸ்விக்கி பங்குகள் 369 எனும் விலையிலும் வர்த்தகம் ஆகின்றன.
பிளின்கிடி மற்றும் ஸ்விக்கி அதிகரிக்கும் போட்டி மற்றும் விரிவாக்க திட்டம் காரணமாக தங்கள் இருப்பை இரட்டிப்பாக்கி வருவதால் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. இந்த மாத துவகக்கத்தில் பெங்களூருவில் அமேசான் தனது குவிக் காமர்ஸ் சேவையை துவக்கியது. பிளிப்கார்ட் மினிட் சேவையை தொடர்ந்து அமேசான் நவ் சேவை அமைகிறது.
அண்மையில் ஜெப்டோ நிறுவனம் தனது பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் வர்த்தக தலைமையகத்தை இந்தியாவில் இருந்து மாற்றியது.
Edited by Induja Raghunathan