Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

யுவர்ஸ்டோரி நடத்தும் SheSparks 2025 - பெண்களுக்கு ஊக்கம், புதுமையாக்கம், தாக்கத்தை தரக்கூடிய துடிப்பான நிகழ்ச்சி!

பெங்களூருவில் மார்ச் 21ம் தேதி நடைபெறும் SheSparks 2025, மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்கள், தலைமையை, புதுமையாக்கத்தை, தாக்கத்தை மறுவரை செய்யும் பெண்களை கொண்டாடும் துடிப்பான நிகழ்ச்சியாக அமைகிறது.

யுவர்ஸ்டோரி நடத்தும் SheSparks 2025 - பெண்களுக்கு ஊக்கம், புதுமையாக்கம், தாக்கத்தை தரக்கூடிய துடிப்பான நிகழ்ச்சி!

Wednesday March 19, 2025 , 3 min Read

யுவர்ஸ்டோரி நடத்தும் 'ஷீஸ்பார்க்ஸ் 2025' (SheSparks 2025) - மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்கள், பெண் தொழில்முனைவோர் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண் தொழில் தலைவர்களை கொண்டாடும் வகையில் அமைய உள்ளது.

முக்கிய உரைகள், துடிப்பான கலந்துரையாடல்கள், ஆழமான புரிதலை அளிக்கும் குழு உரையாடல்கள், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாஸ்டர் கிளாஸ் ஆகியவற்றுடன் இந்த ஆண்டு பதிப்பு பெண்களுக்கு ஊக்கமும் கற்றம் அளித்து, பல துறை பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்து தரக்கூடியதாகவும் அமைகிறது.

பெங்களூருவில் உள்ள `தி ஷாங்ரி லா` (The Shangri-La) ஓட்டலில், மார்ச் 21ம் தேதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

shesparks

நிகழ்ச்சியில் நீங்கள் எதிர்பார்க்க கூடிய அம்சங்கள் வருமாறு:

பெண் நிறுவனர்களுடன் நிகழ்ச்சி துவக்கம்

ஆற்றல் மிக்க முக்கிய உரையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது- லேடீஸ் ஹு லாஞ்ச் (ladies who launch) : எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண் நிறுவனர்கள்- மான் தேஷி பாங்க் அண்ட் பவுண்டேஷன் நிறுவனர், தலைவர் செட்னா காலா சின்கா பங்கேற்கிறார். விடாமுயற்சி மற்றும் வெற்றிக்கான கதைகளை பகிர்ந்து கொண்டு தொழில்முனைவு மிக்க தினத்திற்கான உத்வேகத்தை அளிப்பார்.

வெற்றியை மறுவரையறை செய்யும் உரையாடல்கள்

தங்கள் துறைகளில் தனிப்பாதை வகுத்துக்கொண்ட பெண்களுடனான மனம் திறந்த உரையாடல்:

டீகோடிங் மை வே டூ தி பாங்க்: aliciasouza.com நிறுவனர் அலிசியா சோசா, தனக்கு உண்மையாக இருக்கும் அதே நேரத்தில் ஈடுபாட்டை லாபககரமான வர்த்தகமாக்குவது பற்றி ரேகா பாலகிருஷ்ணனுடன் உரையாடுகிறார்.

எ லீடர்ஸ் கேன்வாஸ்: கேன்வா இந்தியா கண்ட்ரி மேலாளர் சந்திரிகா தேவ், துவக்கத்தில் இருந்து பிராண்டை உருவாக்குவது மற்றும் சர்வதேச விரிவாக்கத்திற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வது பற்றிம் சங்கீதா பாவியுடன் பேசுகிறார்.

ரீடிபைனிங் ரியல் எஸ்டேட்: இண்டி கியூப் (IndiQube) இணை நிறுவனர் மேக்னா அகர்வால், வழக்கமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் தடைகளை உடைத்த தனது பயணத்தை பகிர்கிறார்.

ஓவர்கம்மிங் பேரியர்ஸ் இன் கவர்னன்ஸ்: கர்நாடகா மாநில அரசின், மின்னணு, தொழுல்நுட்பம், உயிரிநுட்பம் துறை செயலாளர் டாக்டர்.இகுரூப் கவுர், நிர்வாகத்தில் தலைமை பண்பு தொடர்பாக யுவர்ஸ்டோரி நிறுவனர். சி.இ.ஓ.ஷரத்தா சர்மாவுடன் உரையாடுகிறார்.

வர்த்தக வளர்ச்சிக்காக ஏஐ மற்றும் புதுமையாக்கம்:

டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப பாதையில் முன்னணியில் இருப்பது முக்கியம். கூகுள் கிளவுட்டின் டினா பாஷின் ஏஐ அண்ட் இன்னவேஷன் : `தி பவுண்டர்ஸ் அட்வாண்டேஜ்` எனும் தலைப்பில் அவசியம் கேட்க வேண்டிய முக்கிய உரை நிகழ்த்துகிறார். ஏஐ, கிளவுட் நுட்பம், தரவுகள் ஆய்வுகள் கொண்டு எதிர்காலத்திற்கு ஏற்ற வர்த்தகத்தை உருவாக்குவது பற்றிய புரிதல்களை பகிர்கிறார்.

தொழில்நுட்பம், நிதி, டிஜிட்டல் செல்வாக்கு துறைகளில் பெண்கள்

பில்டிங் எ சப்போர்டிவ் இகோசிஸ்டம் பார் உமன் இன் டெக்: ஸ்னிடர் எலெக்ட்ரிக், அவ்தார் குழுமம், எம்.ஐ.கியூ டிஜிட்டல், யுவர்ஸ்டோரியைச்சேர்ந்த வல்லுனர்கள் வழிகாட்டுதல், நிதி திரட்டல் மற்றும் தொழில்நுட்பத்தில் தலைமை வாய்ப்புகள் பற்றி பேசுகின்றனர்.

உமன் மானிடைசிங் தேர் வாய்சஸ் & இன்பிலயன்ஸ் ஆன்லைன்: செல்வாக்காளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குனர்கள், டிஜிட்டல் மேடைகள் மூலம் தனிப்பட்ட பிராண்ட், நிதி சுதந்திரம், சமூக தாக்கம் உண்டாக்குவது பற்றி பேசுகின்றனர்.

சூப்பர்வுமன் இன் சூப்பர் கம்புயூட்டிங்: ஓபன் டெக்ஸ்ட், இண்டெல், ஐபிஎம், அடோப் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏஐ, தொழில்நுட்ப தலைவர்கள் ஏஐ மற்றும் இயந்திர கற்றலில் பெண்களின் சாதனை பங்களிப்பை விளக்குகின்றனர்.

டிரான்ஸ்பார்ம்ஹெர் டாக்ஸ்: துணிவு, மாற்றத்திற்கான கதைகள் - பிரம் ரிஜெக்‌ஷன் டூ ரிவல்யூஷன்: திருநங்கை செயற்பாட்டாளர் டாக்டர்.அக்காய் பத்மசாலி தனது பயணத்தை விவரித்து, பாலின நீதியில் கை தூக்கி விடுவதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.

டான்சிங் த்ரு பேரியர்ஸ்: யக்‌ஷகானம் கலை மூலம் உலக அளவில் பாலின நெறிமுறைகளை கேள்விக்குள்ளாக்கி வரும் பிரியங்கா கே மோகன் இந்த கலை வடிவம் பற்றி விவரிக்கிறார்.

எ லைப்டைம் இன் அட்வகேசி: பெண்கள் உரிமைகளுக்கான போராட்டம் பற்றி டாக்டர் ரஞ்சனா குமார் பகிர்ந்து கொண்டு, பாலின போராட்டத்தில் அடுத்த கட்டம் பற்றி பேசுகிறார்.

தலைமை, பேச்சுவார்த்தை, செல்வத்திற்கான மாஸ்டர் கிளாஸ்

தி லீடர் பிளேபுக்: பேச்சு வார்த்தை, முடிவெடுத்தல், தலைமை தொடர்பான முக்கிய திறன்கள்.

மணி மாஸ்ட்ரி:  செல்வம், சுதந்திரம் மற்றும் வெற்றிக்கான பெண்ணின் வழிகாட்டுதல்- பிரியா சுந்தர் செல்வம், பாதுகாப்பிற்கு பெண்களுக்கான முக்கிய நிதி வழிகளை பகிர்கிறார்.

சுகாதாரம், புதுமையாக்கம், பாலின சமத்துவத்தில் இடைவெளிகள் குறைத்தல்

உமன்ஸ் ஹெல்த், உமன்ஸ் வாய்சஸ்: சுகாதார நலன் நிறுவனர்கள் மற்றும் வல்லுனர்கள் சுகாதார துறையில் சம அணுகல், கொள்கை மாற்றங்கள் பற்றி உரையாடுகின்றனர்.

இன்னவேடிங் ஃபார் இம்பேக்ட்:  பேயர் நிறுவனத்தின் ரச்சனா பாண்டா, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தில் பாலின இடைவெளியை போக்குவது பற்றி ஷ்ரத்தா சர்மாவுடன் பேசுகிறார்.

Shesparks

பெண் தலைவர்களை கொண்டாடுதல் – ஷி லீட்ஸ் சேஞ்ச் விருதுகள்

பல்வேறு துறைகளில் தடைகளை தகர்த்து, புதுமையாக்கத்தை வழிநடத்தும் அசாதரணமான பெண்களுக்கான பியூச்சர் ஷேப்பர்ஸ்: ஷி லீட்ஸ் த சேஞ்ச் விருதுகளுடன் நிகழ்ச்சி நிறைவடையும்.

நீங்கள் ஏன் ஷீ ஸ்பார்க்ஸ்  2025 நிகழ்ச்சியை தவற விடக்கூடாது!

நீங்கள் தொழில்முனைவோராக, நிர்வாகியாக, தொழில்நுட்ப வல்லுனராக, மாற்றத்தை ஏற்படுத்துவராக என எப்படி இருந்தாலும், ஷீஸ்பார்க்ஸ் 2025, நம் காலத்தின் ஊக்கம் மிகு பெண் தலைவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், தொடர்புகளை பெறவும் அருமையான வாய்ப்பாக அமையும்.

முக்கிய பெண்கள் பங்கேற்பு:

கிராமப்புற பெண்களுக்காக, கிராமப்புற பெண்களை கொண்டு உருவாக்கப்பட்ட மான் தேஷி மகிளா ஷகாரி பாங்க் நிறுவனர் சேத்னா, கேன்வா இந்தியாவின் முதல் ஊழியர் சந்திரிகா தேவ், பாலின நீதி செயற்பாட்டாளர் அக்காய் பத்மஷாலி, முன்னோடி சுகாதார நலன் ஸ்டார்ட் அப் நிறுவனர் டாக்டர்.கீதா மஞ்சுநாத், அவ்தார் நிறுவனர் டாக்டர்.செளந்தர்யா ராஜேஷ், முன்னோடி நிதி நுட்ப நிறுவனம் கினாரா கேபிடல் நிறுவனர் ஹர்திகா ஷா, தொழில்முனைபோர் அலிசியா சோசா, தொடர் தொழில்முனைவோர் மேக்னா அகர்வால், பெண்கள் நலன் வல்லுனர் டாக்டர்.ஜான்வி நிலேகனி, டிஜிட்டல் செல்வாக்காளர் சாக்‌ஷி ஜெயின் உள்ளிட்ட சாதனை பெண்கள் பங்கேற்கின்றனர்.


Edited by Induja Raghunathan